யாழ்ப்பாணம் யோக சுவாமிகள் அருள்மொழிகள்
செல்லத்துரை, அ. (தொகுப்பு)
யாழ்ப்பாணம் யோக சுவாமிகள் அருள்மொழிகள்
செல்லத்துரை, அ. (தொகுப்பு)
முதற் பதிப்பு 1976 இரண்டாம் பதிப்பு 1986 (C) பதிப்புரிமை விலை ரூபா 12-00
வெளியீடு:
அ. செல்லத்துரை சிவதொண்டன் நிலையம், செங்கலடி (கி. மா.), இலங்கை,
அச்சுப் பதிப்பு: செட்டியார் பதிப்பகம் 411/1, காங்கேசன்துறை வீதி, வண்ணுர்பண்னை யாழ்ப்பாணம்.
நூன்முகம்
தேவருந் தேடியே தேராத் திருவடியை ஏவருங் காணவே யிவ்வுலகில் - பூவார் கொழும்புத் துறையிற் குருவாகி வந்து
தொழுதுய்யச் செய்தாய் துணை.
சிவசிந்தனை
ஒருவன் சமுத்திரத்தின் இக் கரையிலிருந்து அக் கரையிலுள்ள வொரு துறையைச் சுலபமாக அடைய வேண்டுமாயின் பல காற் சென்று அது பவம் பெற்ற ஒரு மாலுமியின் உதவி அவனுக்கு இன்றியமையாததாகும். அதுபோலவே, சம்சார சாக ரத்திலிருந்து உழலும் ஆன்மாக்கள் திருவடி யாகிய துறையைச் சேர வேண்டுமாயின், அவற் றுக்கு ஞானகுரு ஒருவர் இன்றியமையாதவராவர்.
அஞ்ஞான இருளை அருளாற் போக்குபவனே ஞானகுரு. அக் குருவருளின் றித் திருவருள் கிட்டு மாறு இல்லை. குருமூலமாகவே ஆன்மாக்கள் இறை யருளைப் பெற மு டி யும். அங்ங்னம் பெறும் பொழுதே உயிர்களைப் பற்றிய மலங்கள் நீங்கும் ,
மலம் பஞ்சு போன்று எரிந்தழியும் தன்மை யது. வெகு தூரத்தேயுள்ள சூரியன் தானே நேரா கப் பஞ்சினை எ ரிப்பதில்லை ; சூரிய காந்தக்கல் லின் வழியாகவே பஞ்சினை எரிக்கின்றது. அது போலவே, யாவராலும் எட்டமுடியாத இறைவன் குருமூலமாகவே ஆன்மாக்களுக்கு இறையருளைப் பாலித்து அவற்றின் மலங்களை அழிப்பர்.
சூரிய காந்தமுஞ் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல் ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
--திருமந்திரம்
ஞானு சிரியன் சிவோகம்” எனத் தன்னுளே பாவித்துத் தத்துவமசி’ (அது நீ ஆகின்ருய்) என்று உப தேசிக்கும் மகாவாக்கியப் பொருளைச் சீடன் நாடோறும் பயின்று “அது நான்’ என்னும் அகலாத் தியான ஞ் செய்து வருவானுயின் அப் பாவக முதிர்ச்சியால் மலமாயாக ன் மங்கள் நீங்கப் பெற்றுச் சீவன் முத்தணுவது திண்ணம்.
கருடன் உருவம் கருதும் அளவில் பருவிடம் தீர்ந்து பயங்கெடு மாபோல் குருவின் உருவம் குறித்தஅப் போதே
திரிமலந் தீர்ந்து சிவனவன் ஆமே.
--திருமந்திரம்
ஈழநாட்டினரின் மாதவப்பேருய்த் தோன்றி ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்குமேல் நிலவிப் பேரருட் கருணை கொண்டு, காலத்துக்குக்காலம் தம்மையே சரண் என நாடிவந்த சகலர்க்கும்ஆண், பெண், சைவர், சைவரல்லாதார், ஆத்திகர், நாத்திகர், தமிழர், சிங்களவர், ஆங்கிலேயர் (56) Iru எவர்க்கும் - கற்பகதருவெனவும், சிந்தாமணியெனவும் திகழ்ந்து, அஞ்சேல் என்னும் அருள் மொழி ஈ ந் து, படிப்படியாக ஆ ன் ம மலர்ச்சிபெற வருளிய எங்கள் குருநாதராகிய யாழ்ப்பாணத்துச் சிவயோகசுவாமிகள் தம்மிடம் வந் தோருக்கு உபதேசித்த அருள் மொழிகளின் தொகுப்பே இச் சிறு நூலாகும். வேதாந்த சித் தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தக ச் சித்த ராய் நிலவி, மார்க்கம் யாவுக்கும் அதீதராய், அவரவர்க்கு அதுவது வாய் நின்று அருளிய திறத் தினை நேரிற் கண்டார் அறிவர்.
சுவாமிகளுடன் கூடி வாழ்ந்த காலங்களிலே யாமும், சில அணுக்கத் தொண்டர்களும் நேரில் கேட்டனவும், பல பழைய அன்பர்கள் மூலம் யாம் கேட்டனவுமாகிய சுவாமிகளின் அருள் மொழி களையே இந்நூல் கொண்டுள்ளது.
எமக்குதவவும் வீடுகாதலிக்கும் வருங்கால அன்பர்களுக்கு உதவவுமே இவற்றை இவ்வாறு திரட்டி வெளியிடுகின் ருேம்.
உபாயமார்க்கத்தார்க்கும், சிறப்பாக, உண்மை நெறி நிற்பவர்களுக்கும் உயர்சாதனைக்கு வழி வகுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையே இதனை யாம் வெளியிடத் தூண்டிற்று.
அருள் மொழிகளுள் ஒவ்வொன்றும் அரும் பெறல் மாணிக்கம் போன்றது. அவற்றைச் சிந் தித்துச் சிந்தித்து எவரும் ஆன்மலாபம் பெறலாம்: அவற்றுள், மனத்துன்பங்கள் வருங்கால் எம்மை வழுக்கி விழாமற் பாதுகாக்கும் ஊன்று கோல் போன்றமைவன சில ; பேரின் பப்பேற்றினை அடை விப்பதற்குரிய தியான சாதனைகளிற் பழக்குவனபல .
எண்ணங்களே மனம், எண்ணங்களாலாகிய மனம் என்னும் தீரா நோயே எம்முள் உறையும் ஈசனை, எம்முடைய காட்சிக் கெட்டாதவாறு பிரித்து வைத்திருக்கின்றது. ஏகாக்கிரமடைந்த மனத்திற்கு இத்திரையை (மாயையை)க் கிழித்தெறியும் வல் லமை உண்டாகின்றது. ஈசனைக் காணமுடிகிறது.
இந் நூலில் உள்ளவை யாவும் மனத்தைத் தூய்மையாக்கி இறைவழிப்படுத்துகின்றன, இதனுள் பெறற்கரும் பேற்றை விளைக்கும் என்பது திண்ணம்.
யாம் வாழ்ந்து செல்லும் சாதாரண உலகியல் வாழ்க்கையிலும் எங்களிடம் பல பல சித்திகள் எய் தும் படிக்கு எம்மைப் பயில் விப்பனவும் இந்நூலிற் பலவுண்டு. " சித்திகளை நாடினுல் செருப்படி கிடைக்கும்,’ என்பது குருநாதன் திருவாக்கு. பெரியோர் உபதேசங்களைச் சிரத்தையோடு மேற் கொள்பவர்க்குச் சித்திகள் தாமே விளையும்,
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. காண்டல் முதலிய நான்கினுள் காண்டல் ஞானத்திற் சரியை. திரு நாமஞ் செப்பல் ஞானத்திற் கிரியை. திருவார்த்தை கேட்டல் ஞானத்தில் யோகம். குருவுருச் சிந்தித்தல் ஞானத்தில் ஞானம் அருளுருவாம் குருவுருவைத் தரிசித்து வழி படும் வாய்ப்புச் சாலச் சிறந்தது. குருமூர்த்தியின் திருவார்த்தைகளைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிதல் அதனினும் விழுமிய அது. இடையருது குரு நாமஞ் செபித்தலும், அவர் உருவினைச் சிந்தித்தலும் யாவினுஞ் சிறந்தனவே. நம்மனுேர் செய்த முற் றவப் பேருய்
* அகளமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென்றுந்தீபற தானுகச் செய்ததென் றுந்தீபற’ என்றங்கு, திருவருளே எமையாளக் குருவடிவில் தோன்றியது. இவ்வாறு மண்ணகத்தில் விளங்கிய எங்கள் குருநாதரது திருவார்த்தைகளைக் கேட்டலே அறிவு. அவர் திருமேனி காண்டல் அதனினும் மிக்க அறிவு. அதனினும் மிக்க அறிவு அவர் திரு நாமஞ் செப்பல். எமது உயிருக்குயிராக அவர் விளங்குவதை உணர்தலே * நவை தீர்ந்த போத மும் காணுதபோத‘மாம்.
வாக்கிலிருப்பது நின்றிரு நாமம் மனதுதனில் தாக்கி யிருப்பது நின்றிரு மேனி தரணிதனில் போக்கி யிருப்பது நின்றிரு ஏவல் பொருளாவெமைக் காக்கும் கருனேக் கலம்பக நாதநீ யாண்டபின்னே,
நோயாளர்க்குத் தக எவ்வாறு வைத்தியர் சொல்லும் மருந்து வகை வெவ்வேருக விருக்குமோ அவ்வாறே அவரவர் மன பரிபாக நிலை க்குத் தக்க வாறே அவ்வப்பொழுது அந்த அந்த அடியார் தெளிவுபெறத் தக்கதாக இவை உபதேசிக்கப்பட் டுள்ளன. ஒருவரைக் கோயில் வழிபாடு செய் என்றும், வேருெரு வரைக் கோயில் வழிபாட்டினை விட்டு மேலே செல் என்றும் அருளப்பட்டன போல, மேல்நிலையில் நிற்பார்க்கு முரணுகாமலும், அதே நேரத்தில் கீழ்நிலையிலுள்ளார்க்கு முர்ண்படுவது போலத் தோன்றவும், அருளிச் செய்த உபதேச மொழிகள் சில இந்நூலிலே யிருக்கின்றன. இவற்றை நாலறிவாளர் நுணுகியுமறியார் . ஆணுல் சாதனை செய்யுஞ் சத்துக்கள் அறிவார்.
வீடுபேற்றிணைக் காதலித்து வாழ்க்கை முழுவ தும் சாதனை செய்வார்க் இந் நூல் ான க் குேசிகுே.ே எளிய 鬣。帶蠶 கள் ஆதலின் இவற்றிற்கு விளக்கம் வேண்டிய தில்லை . சத்தியத்தைக் காணும் அவாவுடன் ஒழுக்க நெறியில் நின்று பலகால் இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்துச் சிந்தித்தால் அநுபூதி கிட் டும். விரும்பியவர்கள் இதனைக் கற்றுச் சாதனையிலீடு பட்டு பின்பமெய்துவார்களாக.
இந் நூலின் இரண்டாம் பதிப்பு இத் துணைச் சிறப்பாக உரிய காலத்திலே வெளிவர உதவிய செட்டியார் பதிப்பக உரிமையாளரும், எமது உழுவலன் பருமான திருமிகு பே, சோமசுந்தரம் செட்டியார் அவர்களின் தொண்டு பாராட்டுதற்குரி யது. எங்கள் குருநாதருக்கு “குடி குடி யாட் செய் யும் வழியடிமைத்திறம் பூண்ட இணுவில் செல்லையா குமாரசுவாமி அவர்கள் இந்தச் சிறந்த தொண்டிற் குரிய செலவின் சரிபாதித் தொகையைத் தாமாகவே மனமுவந்தளித்தார். சொல்லாமற் செய்த இவ்வுத விக்கு யான் நன்றியுடையேன். இவர்களுக்குத் தோன் ருத் துணையாயுள்ள குருநாதரின் திருவருள் பெருகுவதாக என வாழ்த்துகிறேன்.
அ. செல்லத்துரை
எங்கள் ஆசான்
அருள் மொழிகள்
மார்க்கண்டு சுவாமி
* வடதிசை காட்டுங் கருவியைப்போல் இருக்க வேண்டும்.
நீயே உனக்கு நண்பனும் பகைவனும்
வேலையைச் செய்தும் செய்யாதவன் போல் இருக்க வேண்டும்.
பிராணனை அடக்கி ஆளுதல் வேண்டும்.
சுக முந் துக்கமும் இரட்டைப் பிள்ளைகள்,
பிரமச் சரிய விரதத்தின் பெருமை பெரிது. வாழ்க்கையாகிய கப்பலின் திசையறி கருவியாகிய மனித லுடைய மனம் பரப்பிரமத்தையே எப்போதும் நோக்கி அசைவற்று இருக்கவேண்டும்.
காலையிலும் மாலை யிலும் தியானஞ் செய்தல்.
எல்லாவற்றையும் மிதமாகச் செய்தல் வேண்டும். விடயங்களிலே போகும் மனத்தை ஆத்மா வில் இலயிக்கச் செய்தல் வேண்டும்.
பற்றின்றிக் கருமத்தைச் செய்தால் அதுவே யோகம். அதுவே சந்நியாசமும் ஆகும்.
மனத்தை அங்குமிங்கு மலை யவிடாமல் எங்கும் பிரமசொரூபமாகப் பார்த்தல் வேண்டும்.
நிவேதனம் செய்து சாப்பிடுதல் வேண்டும். ஓம குண்டத்தில் அவிப்பாக மிடுவது போல உணவை உட்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தெய்வம். பிர கிருதியே சக்தி,
இன்ப துன்பமெல்லாம் முகிலைப்போல் வந்து போக்ட் டும்.
தன்னை அடக்கியாளுதல் வேண்டும். சமத்துவம் வேண்டும். (Balance)- நாளை க்கு என்ன என்ன தேவையென்பதைப் பற்றி ஆலோசியாமல் இருத்தல் வேண்டும்.
மகாத்மா காந்தியின் பின்வரும் சிறப்புகளைப் பற்றிப் புகழ்தல்:-
(அ) பற்றின் றிக் கருமஞ் செய்தல். (ஆ) பயமின்மை .
(ଜ୍ଞା) தன்னையடக்கியாளல்.
காஞ்சிரங் கொட்டையும் தேவைக்கு உதவுகின் றது. அதுபோல எல்லோரும் நல்ல வர்கள் தான்.
எவர்க்கும் இன்றியமையாதன:- (1) நிஷ் காமிய கர்மம். (2) சாந்தம். (3) நிட்டை அல்லது விரும்பிய உலோகோ புகார்த்தமான கர்மம். ஆன்மா பளிங்கு போன்றது. மனிதன் கற்பக விருட் சம்போல் இருக்கிருன். சும்மாவிருக்கப் பழகவேண்டும். சந்தோஷமாயிருக்கப் பழகு. மனத்தை இரு வழிப்பட விடக்கூடாது. ஏகாக் கிரசித்தம்.
உள்ளுக்குப் பகை கொள்ள க்கூடாது. கிளுவந்த டியைப் பிடித்துக் கொண்டு நடப்பது போல் நடக்கவேண்டும்.
எல்லாவற்றையும் கடவுள் அறிவிப்பார். நாங் கள் ஒரு ஆலோசனையும் பண்ணத் தேவையில்லை. நாயைக் கட்டி வைத்துவிட்டுப் பின் அவிழ்த்து விட்டால் எவ்வளவு வேகங் கொள்ளுமோ அது போல சும்மா இருக்கப் பழகுவதனுல் மனிதன் மேலான சக்தியைப் பெறுகிறன். அதை நல்ல வழியில் உபயோகப்படுத்தல் வேண்டும்.
பகலில் பார்க்க முடியாத படியினுல் நட்சத் திரங்களே இல்லையென்று சொல்லமுடியுமோ? அது போல் எங்கள் ஒவ்வொரு வ ரிடத் தும் உள்ள கிருட்டை நீக்கிப் பார்த்தால் கடவுளிருக்கிருர்.
எங்களுக்குள்ளே தான் சுயராச்சியம். எவ்வளவு செருப்பைப்போல் தேகத்தைப் பாவிக்க மலை யேறுவதற்கு உதவும் ஊன்று கோலேப் போலவே ஒழுக்கத்தை ஆன்ம வளர்ச்சிக்கு அனுசரிக்க வேண்டும்.
தன்னைத் திருத்தாது யாத்திரைக்குப் போவத குலாவதென்ன?
ஒரு கிழமைக்கு ஒரு தரம் விரதம் இருத்தல் வேண்டும்.
என்ன வ*தாலும் பொறுக் கக்கூடிய திறமை வேண்டும்.
கடவுளால் ஒ ன் று செய்ய முடியாது. ஆன்மாவை விட்டுப் பிரிந்திருக்க முடியாது.
இந்தத் தேகத்திற்கு நானே அரசன். வேற்றரசன் (பிசாசு) வரஈதபடிக்குப் பாதுகாத்தல்.
ஆன்மாவை உன்னுல் அளக்க முடியுமா? உங்களுக்கு ஒரு குறைவுமில்லை . உங்களை இன்ஞர் என்று அறியாததுதான் குறை.
நாய் வாலை நீட்ட முடியாது. உலகத்தைத் திருத்துவதிலும் நம்மைத் திருத்துவோமாக.
கடவுளை அடைகிறதற்காக வேண்டியே வேலை க ளெல்லாவற்றையுஞ் செய்தல் வேண்டும்.
துட்ட குணங்களைப் பற்றி விழிப்பாயிருக்க வேண்டும் .
மனிதன் முற்பிறவி பிற்பிறவி யாவற்றையும் அறிந்து கொள்ளலாம் ஆசையை அகற்றிப் பிற வியை இல்லாமலும் பண்ணலாம்.
உ. பாத்தியாயரே! உம்முடைய பாத்தியிலே என்ன இருக்கிறது? பொறுமை, தயை, அன்பு முதலிய நற்பயிர்கள் வளரக் காமம், குரோதம் முதலியகளை களைப் பிடுங்கி விடுகிறீரா?
அ8ல கிற மனத்தை அடக்கத் தேவாரம் படிக் கிறது ஒருவழி. தேவாரத்தை நல்லாய்ப் பெலத் துப் பாடல் வேண்டும்,
வேடுவ சேரியிலகப்பட்ட வள்ளியம்மன் என்னும் ஆன்மாவைக் கடவுள் ஆட்கொண்டார். பூத சுத்தி ஆன்ம தரிசனம் மெல்ல மெல்ல மாய் வரட்டுக்கும்.
படித்தறிந்த கு போதும்.
நிர்விகற்ப சமாதியிலிருந்தால் தேகத்துக்குச் சுகவீனம் வராது.
வேடத்திலென்ன ?
கிறைச்சி முதலிய தாமதச் சாப்பாட்டிலும் குழை முதலிய சாத்துவீகச் சாப்பாடு நல்லது. சாப்பாட்டின் தன்மையில் குணந்தங்கியிருக்கிறது.
தன்னை அளக்கப் பழகவேண்டும்.
கை விரல்களைப்போலத் தனித்து இருந்து கொள் ள ல் வேண்டும். தேவையான நேரம் கூடிக் கொள்.
தியானம் செய்தால் அதுவும் வேலை . சும்மா பத்து நிமிடத்துக்கு இருக்கப்பழகு.
நானும் என் தொண்டைச் செய்கிறேன். நீயும் உன் தொண்டைச் செய். , எங்கும்தான் கடவுள் Al(gád (olt.
மனிதன் நெடுக வேலை செய்துகொண்டிருக் கலாம்; வேலை செய்து முடிந்தால் அதைப்பற்றிப் பிறகு நினைத்துத் தொந்தரவு படக்கூடாது.
உள்ளதோடு திருப்தியடையாது அதிக ஆசைப் பட்டுக் கிடந்தலே கிருேம்.
தள மட்டக் கோண எல்லை அளவிடுங் கருவியை (Theodolite) நில அளவையாளர் திருப்பி இலகுவாய் வேலை செய்வதைப் போல நாங்களும் எங்கள் மனத்தையும் அவயவங்களையும் ஒருமுறை நல்ல வழியில் பழக்கிவிட்டால் அவை அப்படியே எப் போதும் நடக்கும்.
மனக்குழப்பமில்லாமலிருக்கும்போது எந்தக் கருமமுஞ் சித்தியாகும்.
மூச்சை அடக்க வேண்டாம். தவம் பண்ண வேண்டாம். தன்னை எங்கும் பார்த்துவிட்டால் போதும். பெரிய இரகசியம்.
நான் நினைக்க அந்த ஆள் செய்கிருர், அவ் வளவு சக்தி மனிதனிடம் இருக்கிறது. எங்கும் ஒரு இயந்திரம்தானே. பெரிய இரகசியம்.
ஒருவனிடமுள்ள பத்து நல்ல குணங்களை விட்டு விட்டு இரண்டொரு குறைகளை மாத்திரம் எடுத்துப் பேசுதல் எவ்வளவு பேதைமை.
பொழுதுபோக்காய்த் தேவாரத்தைப் படிதி தோம். காலம் ஒருக்காலும் போகவில்லை , நாங்க ளும் நித்தியராய்த்தான் இருக்கிருேம்,
சிறு உத்தியோகம் இருக்கும்போது பெரும் உத்தியோகத்திற்கு ஆசை. பெரும் உத்தியோகமீ வந்ததும் பெருஞ் சம்பளத்திற்கு ஆசை. பெருஞ் சம்பளம் வந்தால் பிள்ளைகள் நல்லாய் வரவேண்டு மென்ற ஆசை. இவ்வா ைசகளுக்கு எல்லைதா னுண்டோ?
காசை அதிகமாக வைத்திருந்து என்ன செய் யப் போகிறீர்கள்? சீவியத்தை ஒருநாளாவது கூட்ட முடியுமோ? உள்ள பொழுது தான தருமங் களைச் செய்யுங்கள்
அவனைப்போலவே நீயும் ஒன்றையும் நினையாமலிரு.
கூடாதவனென்று நீ நினைக்கிறவனிடத்திலும் மகாத்மா காந்தியிடத்திலுமில்லாத சில நற்குணங் களிருக்கும்.
மனம் பரிசுத்தமாயிருக்கும்போது ஒருவனுக்கு அடித்தாலும் பாதகம் ஒன்றும் வரப்போவதில்லை. ஒழுங்காய் நட, உபாயமாய் நட. வயிற்றுக் குப் போட்டுக் கொண்டு நிற்கிற உத்தியோகம் எப்பதான் முடியப்போகிறது?
நீயும் கடவுளும் பிரிக்கப்பட முடியாதபடி கதவைச் சாத்துமாப்போல் பஞ்சேந்திரியங் களையும் அடக்கித் தியானஞ் செய்தல் வேண்டும். விளக்குக் கண்ணுடி (Chinney) புகை பிடித்திருந்தால் வெளிச்சம் எப்படித் தெரியும்? மனம் அழுக்கடைந்திருந்தால் ஆன்மாவின் ஒளி எப்படித் தெரியும்.
பொன் மண்ணுக்குள் உளது. அதை எடுத்துச் சேகரித்துப் பக்குவம் பண்ணவேண்டும். ஆன்ம சக்தியுமப்படியே.
புத்தர் தன் போதனைகளைச் சீவித்துக் காட்டி யிருக்கிறர். அவருடைய தேஜஸ் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது !
உத்தியோகம் முதலிய யாவற்றையும் நாங்கள் கடவுளை அடைகிறதற்காகப் பாவிக்க வேணும். அப் படிப் பாவிக்கிறவன் எந்த வாழ்க்கையிலும் மனத்திருப்தியோடு வாழ்வான்.
இல்லறம் துறவறம் இரண்டும் மேன்மையே.
உங்களுடைய வேலைகளே ச் செவ்வனே செய்யுங்கள். அதே யோகம்.
தன்னுடைய கடமையைச் செவ்வனே செய்வதணுல் ஞானம் உண்டாகும்.
நான் உமக்குத் தரக்கூடிய முது சொம், "எந்நேரமும் கடவுள் உம்முடனிருக்கிறர் ” என்னும் உறுதி மொழியே.
ஆன்ம லாப நோக்கத்தோடு சிவனடியார்கள் எவ்வளவு காரியங்களை ஈஸ்வரனிடம் கேட்டுப் பெற்றுக்கொள்கிறர்கள்.
எந்தப் பெரியவராயிருந்தாலும் இரவிலே வெளிச்ச மில்லாமற் பார்க்க முடியாது. சில சமயங்களில் வெளிச்சமாயிருக்கும்.
இருதயம் சுத்தமாயிருக்கவே ணும். இதற்கு மேலே என்னத்தைச் சொல்லலாம்.
நான் தேவ சந்நிதானத்திலிருக்கிறேன் என்று கூடுதலாய் நினைக்கிறேன். அதுவே தூய்மையாய் இருக்கிறதற்கு நல்ல வழி.
எங்களிருதயத்தில் அவர் (இறைவன்) நீதவா ஞக இருந்துகொள்ள வேண்டும். எத்தொழிலைச் செய்தாலென்ன? தூக்கிலிடலாம்; மறியலுக்கணுப்பலாம். இருதயம் தளம்பக்கூடாது.
ஆகாயத்திலே பறக்க நினைக்காமல், பெறக் கூடிய கருமங்களை நாங்கள் நினைத்தாற் பெறலாம், பாடுபடல் வேண்டும். ஒரு சிலர்தான் உண்மையை அறிவார்கள். மற்றவர்கள் அவர்களுக்குப் பின்னுல் போகிறதுதானே.
வந்தாலோ என்றும் நினைக்கக் கூடாது. வர வில்லை என்றும் நினைக்கக் கூடாது.
பெண் சாதி பிள்ளைகளுக்கு ஆகவேண்டியவற்றைச் செய்து வை. பேரப்பிள்ளைகளின் கருமத்தி ல்ேன் தலைப் போடுவான்.
மற்றவர்களை ஏமாற்றலாம். தன்னை ஏமாற்ற முடியாது. மனச் சாட்சியின்படி நடந்துகொண்டு போக எல்லாம் வலியவரும்.
இயேசுக் கிறிஸ்துநாதர் "எனக்காக வேண்டிப் பாடுபட வேண்டாம். உங்களுக்காக வேண்டிப் 1.ாடுபடுங்கள். உங்களைத் திருத்தாமல் எனக் குத் தொண்டு செய்வதில் என்ன பிரயோசனம்” என்று சொல்லியிருக்கிறர்.
அரசனுயிருந்தால் திருப்தி வரப்போகிறதோ பிச்சைக்காரணுயிருக்தால் திருப்தி வரப்போகி ற தோ! எந்தச் சீவியத்திலிருந்தாலென்ன? தன் ஃாத் தன்னுல் அறிந்தாற்றன் திருப்தி.
மனம் சும்மா இருக்காமல் அங்கிங்கெல்லாம் ஓடித் திரிகிறது. அதனுடைய சுபாவம் அது. எனக்கென்ன?
ஒழுக்கமாய் நடந்து மனத்தை ஆத்மாவோடு சேர்த்துவிடவேண்டும். ஒழுக்க ந் தவறினுல் மனம் நீங்கு செய்யப் பார்க்கும்.
தன்னைத்தான் கொல்ல ஒரு குண்டுசி போதும்; கன்னோத் திருத்த அதிகம் படிக்கத் தேவையில்லை. ஒருவன் தன் பிள்ளைகளை வளர்ப்பதுபோல் நாங்களுமி எங்கள் மனத்தை நன்கு பழக்க வேண் டும். மனமே எங்களுக்குக் கூடிய நண்பனும் கூடி : 1. கை வணும். །
மல உச்சிக்குப் போய்விட்டால் நல்ல குளிர்ச் சியாயிருக்கும். கீழேயுள்ள பாதைகளைப் போல வித்தியாசம் தோன்றது. எல்லாச் சமயங்களிலு எல்லாம் ஒன்றே.
சிங்களவன். தமிழன், பறங்கி, வெள்ளைக்காரன் என்ற வித்தியாசமில்லை. எங்களுக்குள்ள அவய வங்கள் தான் அவர்களுக்குமிருக்கின்றன.
நில அளவை செய்கிறதற்குப் பாதைகளை வெட்டுகிறது போலவே எங்கள் பாதையில் வரும் தடைகளை நாங்களே வெட்டி நீக்க வேண்டும்.
எங்களை நாங்களே திருத்தவேண்டும், மற்றவர் களின் உதவியைப் பார்த்திருக்கக் கூடாது.
இறந்தவர்களுடைய பேரில் நீங்கள் செய்கின்ற தானதருமங்களின் பயன் அவர்களுக்குக் கிடைக் கும். அவர்களுடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்குத் தெரியாத காரியங்களைக் கனவில் அவர்கள் அறிவிப்பார்கள்.
பிள்ளைகளை அதிகமாகப் பெற்ருல் அவர்களைக் காப்பாற்றும் வித மெப்படி?
ஒருவனைப்பற்றி நாங்கள் இங்கேயிருத்து நினைக்க அது அவனுக்கு அங்கே தெரியும். எங்கும் ஒரு இயந்திரந்தானே.
கடவுளை விட மேலான சினேகிதன் எங்களுக்கு வேறுயார்தான் இருக்கிருர்?
பூவில் வண்டு தேனைக் குடிக்கும் போது ஒரு சத்தமும் போடமாட்டாது. சில முத்தர்கள் புத்தி மதிகளைச் சொல்லுவார்கள். வேறுசிலர் மெளன மாக இருந்து விடுவார்கள்.
நாங்கள் எல்லோரும் சிவனடியார்கள். எல்லாம் சிவன் செயலென்றிருப்பதைவிட்டு வீண் சங்கற் பங்களைச் சங்கற்பித்து, உலகத்தைத் தனக்குள் உண்டாக்கி வறுமைப்படுகிருன் மனிதன்,
விருப்பு வெறுப்பு நீங்கி, சோம்பல் சோம்பலின் மையை விட்டு, சிவத்தியானம் என்னும் திறவுகோல் கொண்டு மோட்ச வீட்டின் கதவைத் திறந்து பார். அங்கே நீயுமில்லை, நானுமில்லை , அவனுமில்லை, அவளுமில்லை ,
படிக்கப்படிக்க மனம் விருத்தியடையும்; மன ஒடுக்கம் ஆறுதலைக் கொடுக்கும்.
சிறு கருமங்களிலும் வெகு கவனமாயிருக்க விழுந்து உடை. நீது போகும்,
படிப் படியாகத்தான் உ ச்சாணிக் கொப்புக் குப் போகலாம். பறவைகளைப்போல் பறந்து போகி றவர்களும் இருக்கிறர்கள், சுருதி, குரு, யுக்தி, அனு பவமி என்கிற இறகுகளைக் கொண்டு பறந்து செல் ov) Av) FTLb.
நூற்றுக்குத் தொண்ணுற்ருென்பது பேர் நிரீச் சுர வாதிகளாயிருக்கிறர்கள்,
தெய்வங்களோடுதான் பேசிக் கொண்டிருக்கி றேன். சில தெய்வங்களுக்கு அமுது, பழம் வேணும் , சில தெய்வங்களுக்கு மீன் இறைச் சி வேணும் , சில தெய்வங்களுக்குக் கள்ளுச் சாராயம் வேணும்.
மனிதனைத் தெய்வம் என்ருல் அது மிகையா காது
மனத்தை அடக்க வேண்டுமென்று நினைத்தலும் மனுே விரிவு தானே, மனத்தை ஆன்மாவோடு இல யிக்கச் செய்து விட்டால் பின் மணுே சங்கற்பங்கள் அதன் தொழிலாக மாட்டா,
பூனையின் வாலைப்பிடித்தாற் கடித்துப் போடும் , அதுபோல உலகில் தாமரையிலையும் தண்ணீரும் போல வாழவேண்டும்.
எல்லாம் ஈசன் செயலென்று மனிதன் தன்னைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்து விட்டால் அவனுக்கு என்ன குறை? தேவையான தெல்லாம் வரும். பறக்க நினைத்தாற் பறக்க முடியாது.
என்னுடைய சிநேகிதன் நல்லாயிருக்க வேணும் என்று நான் நினைக்க அது அவனுக்குக் கட்டாயம் நன்மையைக் கொடுக்கும்,
தரீழ்ந்த இடத்தில் தண்ணிர் போய் நிற்கிறது. அப்படியே நீங்களும் கீழ்ப்படிவுள்ள வர்களாயிருங்கள்.
இவ்வுலகம் எங்களுக்கு ஒரு பள்ளிக்கூடம். சிலர் அரிவரியிலும், சிலர் பி. ஏ. வகுப்பிலும் படிக் கிருர்கள். பி. ஏ. வகுப்பில் உள்ளவர்கள் அரிவரி யில் உள்ளவர்களை ஒருபோதும் அவமதிக்க மாட் டார்கள்.
** ஒருவனே டொருத்தி. ** என்று பிரசங்கம், மனத்திலே அகங்காரம் என்னும் வறுமைப்பிணி.
தெய்வம் எங்களோடு இருக்கிறபடியால் தான் பார்க்கிருேம், கேட்கிருேம், பேசுகிருேம். மரங் களும் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக விஞ்ஞானிகள் சொல்லுகிறர்கள்.
* நாமார்க்கும் குடியல்லோம் ’, * நாளென் செய்யும் வினைதானென் செய்யும்", இவைபோன்ற தோத்திரங்களைப் படிப்பதால் மனத்தை எவ்வளவு பலப்படுத்தலாம்?
ஒவ்வொருவனும் தான்தான் தனக்குத் தகுந்த பாதையைத் தேடிக்கொள்ள வேண்டும். தண்ட வாளத்தில் தான் புகைவண்டி ஓடும்.
* சிவஞான சித்தியார் பதியிலக்கணமும் பதியுண்மையும் கூறும் முதலாம் சூத்திரம்.
திட்டிகுற்றன் வெளிச் சம் வரும். எங்கள் ஒவ்வொருவருட்ைய இருதயத்திலும்
கடவுள் இருக்கிறர். மின்சக்தி தருகிற மின் உற் பத்தி நிலையம் போல் கடவுள் இருக்கிருர்,
உலக வாழ்வு யாவுக் அவரு .ைய பாதத்தை அடைகிற நோக்கத்திற்குப் பாவிக்க வேண்டும். வியபிசாரம் வேண்டாம் இது வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு திரியாதே. எல்லாம் செயலால் நடக்கும். உலகத்தைத் திருத்த யாரால் முடியும்.
சிவகோசரியருந் அன்பன் தான். கீ ஸ்ாணப்ப நாயஞரும் அன்பன் தான்.
எங்களுடைய பிள்ளைகளுக்குச் சமய அறிவு வே ஐனு மென்ற ஆசை யிருந்தால் *து கட்டாயம் வரும்.
முகம அணுக்காக ஒன்றைச் செய்யக்கூடாது.
சும்மா விருத்தலே பெருத்த தேகாப்பியாசம்,
நாங்கள் சற்போதனைகளை இலகுவாகக் கிரகித்துக் கொள்ளுகிறதற்காக வேண்டிப் பெரியோர்கள் கதைகளைச் சொல்லி வைத்துப் போயிருக்கிறர்கள்.
மூச்சைப் பிடித்துப் பிராணுயாமம் செய்யத் சிவத்தியானம் செய்ய (மன வடக்கம்) வலிய வரும் .
குறைவு என்று வேலையில் கவன வீனமாயிருக்கக்கூடாது.
நாங்கள் கட்டிய கோட்டையை நாங்க ளே உடைக்க வேணும்.
*வேண்டாம் விருப்பும் வெறுப்பும்." என்பது பெரியோர்.
ஒன்றையே பல பேர் பல மாதிரியாய்ச் சொல்லி பிருக்கிறர்கள். பலதையும் படிக்கப் படிக்க மனம் விரியும்; ஒடுங்காது. ஒடுங்கின இடந்தான் ஆறு தலைக் கொடுக்கும்.
மனிதர் எல்லாம், நடக்கிற அழகான பூக்கள். சாட்சியாயிருந்து பார்த்து மகிழாமல், யான், எனது என்ற வறுமைப் பிணி பிடித்து அலைகிருன்அந்தக்கரணங்களிலே நோய் பீடிக்கப்பட்டிருக் கிறர்கள். சுகாதார வைத்தியர்கள் எத்தனையோ பேர் வேண்டும். ஒரு ஆள் இரண்டு ஆள் போதாது. நாங்கள் எல்லோரும் ஒரே ஆட்கள் தான். வித்தியாசம் பாகை யளவிற்ருன் உளது.
ஒரு விளக்குக்கு இரண்டு கண்ணுடிகள் இருப் பதுபோல் மனத்திற்குத் தேகம் என்னும் கண்ணு டியும் ஆன்மாவுக்கு மனம் என்னும் கண்ணுடியும் இருக்கின்றன. வெளிச்சம் நெடுக எரிந்துகொண் டேயிருக்கிறது. கண்ணுடிகள் புகைப்பிடித்திருந் தால் பிரபை தெரியாது.
பிள்ளைகளை முத்தமிடுவதுபோல் ஒவ்வொரு நாளும் கடவுளை முத்தமிட்டுக்கொண்டு பின் எங் கள் வேலைகளைச் செய்யவேண்டும்.
உழைத்தலே ஒய்வு, உழைத்தலே விளையாட்டு. நாங்கள் அறிந்த சிறிதளவைச் சாதனைக்குக் கொண்டு வந்தால் அதே போதும். எல்லாம் அறியும் வல்லமை வலிய வரும்.
மாலுமி சுக்கானைப் பிடித்துக்கொண்டு மற்ற வேலைகளையும் பார்த்துக் கொண்டு அக்கரை சேர் வது போல ஆத்ம ஞானம் அடைய வேணுமென்ற எண்ணம் ஒன்றே போதும். அதே சுக்கான் போல வழியிற் செலுத்திக் கரை சேர்க்கும். அது கொள்ள ဖြိုးဝှိပ္႔,☎ အံ၊ தள்ளவேணும் என்றெவையும் தேவை
எல்லை கடவாமல் இயல்பாகச் சீவித்துக் கொண்டுபோக எல்லாம் வலியவரும்.
நீ ஏதோ உன்னுற் செய்யமுடியுமென்றமாதிரி ஏன் பலவற்றையும் நினைத்துப் பந்தப்படுகிருய். காரிய மெல்லாம் எப்பவோ முடிந்திருக்கின்றன.
சிவத்தியானம் செய் செய் செய் சிவமே நாமெனல் மெய் மெய் மெய் அவனி யனைத்தும் பொய் பொய் பொய் அதனை யறிந்து உய் உய் உய். எத்தனை பிறப்பு இறப்புவந்து போய் விட்டன! நன்மையென்ன? தீமையென்ன? அறிவு அறியாமை யென்ன? எந்த நேரமும் சாட்சியா யிருக்கிருேம்.
ஒருத்தரையும் ஒரு க்காலும் குறை கூருதே. அது உனக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கும். கூடாத பழக்கங்களைத்தான் தான் உணர்ந்து விடவேண்டும் . மருந்துக்கு உபயோகிக்கிறதாகத் தொடங்கிப் படிப்படியாகப் பெருத்த குடிகாரர். புத்தகப் படிப்பில் காலத்தைக் கழிப்பதிலும் தன்னைத்தானே படிப்பதிற் காலத்தைக் கழிப்பது நலம். படிப்பதும் ஒரு யோகம் தான்.
சிவத்தியானம் செய்வதே இந்தக் காலத்தில் இலேசான வழி.
ஒன்றைக் கோரிக் கடவுளைக் கும்பிடக் கூடாது. ஆத்மலாபத்தைத் தானும் வேண்டுமென்று நினைத்துக் கும்பிடக் கூடாது.
ஆன்மாவே நாம் . இதைத் தெரிந்து கொள் நீ. உன்னையும் என்னையும் மறைப்பது இந்தக் கை. இதை எடுத்துவிட்டால் நாங்கள் ஒரு வரை யொரு வர் பார்க்கலாம். இதை மனிதனறிய வேண்டும். பொய்யை நீக்கினுல் எங்கும் சிவமயம்.
புகைவண்டி இயந்திரம் எத்தனையோ பெட்டிகளை இழுத்துக் கொண்டு போகிறது. தண்டவாளத்தைத் தப்பினுற் போகுமா? இல்லை. பெரியோர்கள் எங்களுக்கு வழிகளைக் காட்டியிருக்கிறர்கள், அதன்படி நாம் ஒழுகல் வேண்டும் ,
சிவனடியார்களுடன் சேர்தல் நல்லது. பெய்கிற மன்ழ மாவிலே விழுந்தால் மாம்பழத் தைக் கொடுக்கிறது. தென்னையிலே விழுந்தால் தேங்காயைக் கொடுக்கிறது.
மலையைப் பார்த்தால் மரமில்லை . மரங்களைப் பார்த்தால் மலையில்லை .
பாதையோ நீடித்தது. மெல்ல மெல்லமாகத் தான் போக வேணும். வழியிருக்க முள்ளுக்குள் போகக்கூடாது.
பிள்ளைகளை வளர்ப்பது போற் கடவுளையும் வளர்க்க வேண்டும்,
கடவுள் உன்னுடன் இருக்கிருர் என்பதைவிட வேறு புதினமொன்றுமில்லை.
அன்று துவங்கி இன்றுவரைக்கும் கடவுள் உன் ணுேடு கூட இருக்கிறர்.
ஆயிரம் குறள்களைப் படித்தாற்போல் ஞானம் வருகிறதல்ல. தன்னைத் தன்னுல் அறியவேண்டும். ஏகாக்கிர சித்தத்துக்குத் திரு வாசகம் படிக்க 6) (T. IT) ,
யாத்திரைக்குப் போகவேணும் என்று அங்கும் இங்கும் அலைந்து திரியாதே .
உலகத்தாரைப் போலவே சீவி. மனம் ஒடுங்கல் வேண்டும். கடவுள், ஆன்மா, உலகம். ஈற்றில் உலகமும் கடவுள் மயமாய் விடும்.
உள் கதவிருக்க வெளிக் கதவுக்கு ஏன் போவான். உள்ளுக்குள் தான் எல்லாம் இருக்கின்றன.
ஆன்மா தான் திருவருட் பயன். ஒரு அளவுக்கு மேலே போனுல் அப்பாலே அது இழுத்துப்போடும்.
ஒரே கடவுள், ஒரே சமயம் ஒரே ஆட்கள். ஒரே கண்ணுடியிற்றன் எல்லோரும் பார்க்கிருேம். எங்கும் ஒரு இயந்திரமேதான்.
புத்த பெருமானுடைய உபதேசத்தை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே. உள்ளுக்குள் ஆழம் ஆழமாய்ச் செல்ல வேண்டும்.
சங்கிலியின் ஒரு கோவைப் பிடித்து இழுக்க முழுவதும் இழுக்கலாம்.
நிர்வாணம், பக்தி இவ்வளவும் போதும். வயது ஏற ஏற, அறிவு வளர வளர, மேலே மேலே செல்லுங்கள். கீழே பார்த்தீர்களோ உலகந் தான் தெரியும்.
இப்போ நாங்கள் எல்லோரும் யோகஞ் செய்கிருேம். பலனைக் கருதாமல் கருமஞ் செய்தல் கரும யோகம், சிவனை நோக்கிச் செய்தல் சிவயோகம்,
யோகம் என்ருல் மனம் ஒருமைப்படுதல், பக்தி யோகத்தைச் செய்து வர மற்ற மூன்றுங் * கை கூடும்.
கடவுளைக் கும்பிடும் போது அதுவேணும் இது வேணுமென்று கேட்காமல் அன்புக்காக வேண்டிக் கும்பிடல் வேண்டும். பிறகு தேவையானதைக் கேட்கலாம். ஒரு பெரிய சீமானிடம் போய் ஒரு பணம் இரண்டு பணமா கேட்கிறது!
* கர்மயோகம், இராஜயோகம், ஞானயோகம்
இனிப் பிறவாமல் இருக்கப் பாருங்கள். உங்கள் ஒவ்வொருவரிடத்திலும் சிவபாக்கிய மிருக்கிறது.
கடவுள் கேட்கிருர், பார்க்கிறர். பேசுகிருர், எங்களை விட்டுப் பிரியாமலிருக்கிறர்.
என்னை நேசிக்குமாப்போல் மற்றவர்களையும் நேசியுங்கள்.
த்ாண்டிற்காரன் தன்னுடைய இலட்சியத்தில் எவ்வளவு கண்ணுங் கருத்துமாய் இருக்கிருன்!
கடவுளைத் தேடிக் கதிர்காமத்திற்கும் சிதம் பரத்திற்கும் ஒடத்தேவையில்லை .
படிக்கிறது தேவையில்லை. அதுவும் ஒரு யோகந்தானே. திருக்குறளை நல்லாய்ப் படியுங்கள்.
கற்கண்டு இனிக்குமாப் போல் கடவுளையும் நாங்கள் சுவைத்துப் பார்த்தல் வேண்டும்.
தேகங் கடவுளுக்கு ஓர் செருப்பு. தவஞ் செய்தல் வேண்டும். புத்தர் போதிக்கும் ஆசையுடையவராயிருந்தார், ஆசையைக் குறைக்கலாம் ; முற்றுமில்லாமலிருப்ப தெப்படி? நம்முடைய அனுபவத்துக்குப் பொருந் துவனவற்றை எடுத்துக் கொண்டு மற்றவற்றைத் தள்ளிவிட வேண்டியது தானே.
சைவசமயம் :- நாங்கள் சிவனடியார்; சிவ தொண்டு செய்கிருேம்.
மேற்படியில் மனத்தை அடக்கென்றுகூடச் சொல்லவில்லை. மனத்தையடக்க வேறென்று வேணும், மனம்தாளுகச் சும்மா ஒய்ந்திருக்குங் காலமும் வரும்.
எங்கள் தேக மனுே பலவீனங்களைப் பார்த்துச் சிரிக்கலாம்.
ஆன்மாவுக்கு எப்படித் துக்கம் வரும்? ம&லயினுச்சியில் நின்று பார்த்தால் எல்லாம் ஒரு மாதிரித் தெரியும்; வித்தியாசந் தெரியாது. ஆங்கிலேயன். அமெரிக்கன், இந்தியன் என்ற வித்தியாசங்களில்லை .
கண்ணிற் கலந்து கடவுள் பார்க்கிருர், காதிற் கலந்து கடவுள் கேட்கிருர், பிரமம் எங்களுக்குள் பூரணமாய் நிறைந்திருக்கிறது.
பூவாகிப் பிஞ்சாகிப் பின் முற்றிப் பழுக்கிறது போல், அனுபவஞானமும் படிப்படியாய் வரட்டும். சேற்றினுட் கிடந்தாலுந் தாமரைக்கு மானந் தான். அதுபோல ஆத்ம ஞானிகள் எங்கிருக்கிலென்?
மேல் நிலையில் குரு எங்கே சீடனெங்கே! எல்லாம் பிரம்ம மயம், சிவமயம்.
ஒரு கையிற் கடவுளையும் மற்றக் கையில் உலகத்தையும் பிடித்துக் கொள்ளல் வேண்டும்.
அளவுடன் இரு. அத்துக்கு மீருதே. சீவியத்திற்குப் பொன் தேவை. ஆதலினல் பொன்னுசை இருக்கத்தானே செய்யும். பற்றற்றிருந்தால் எவ்வளவு பொருளை வைத்திருந்தாலும் !
ஒரு வெட்டில் இரண்டு துண்டு. அதுபோல் கின்பமுந் துன்பமும்.
* நான்” செத்தால் நீ நல்லாயிருப்பாய். ஞானத்தின ற் சற்குணங்களும் அச்சற்குணங் களிறல் ஞானமும் (இவ்விரண்டும்) தடாக முந் தாமரையும் போல நன்றய வளரும்.
சாந்தி - விசாரணை-சாது சங்கம்-சந்தோஷம்.
சும்மா இருக்கப் பழகு, மனத்தைத் தடுக்க வேகங்கொள்ளும். தடுக்கத் தேவையில்லை . எங்கே போகிருய் என்று கேட்டுக்கொண்டு, இருக்கும் ஆசனத்தை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்.
பூரண ஞான்ம் பெறும் வரை குருடனுகவும் செவிடணுகவும் ஊமையனுகவும் இரு; மெளனம்
தன்னை அறிய வேண்டும், தன்னைத் தன்னுல் அறியவேண்டும். அதற்கு மன ஒடுக்கந் தேவை. உள்ளுக்குள் இருந்து வருவதைப் பேசு ; அல்லா விட்டாற் பேசாதே.
தவ மென்ருல் சோம் பற்றன மல்ல, அவசரப்படாதே; ஆத்திரப்படாதே. சித்திகள் பல வரும். வந்துபோகட்டும். குழந்தையன் போடு கடவுளைக் கும் பிட்டால் இழந்துபோன தெல்லாம் வரும். இதுதான் (சரீரம் ) தேர். இதுதான் (சரீரம் ) நல்லூர். * உனக்குள்ளே தான் புத்தகம்; அதைப் புரட்டிப் புரட்டிப் படி,
எந்தச் சின்னக் காரியத்திலும் நியாபகமிருக்க வேண்டும்; கவனம் வேண்டும்.
வண்டு பூவைச் சுற்றி வட்டமிட்டு ரீங்கா ரஞ் செய்யும். தேன் குடிக்கும்போது சத்தம் போடாது. வெளிவரும்போது பொன்மயமாய் வரும்.
கண்டு, கேட்டு, உண்டு, உடுத்து உடம்பினுள் உத்தமனைக் காண். உள்ளத்தில் உத்தமனைக் காண்.
* யாழ்ப்பாணத்திலுள்ள சிறந்த முருகன் தலம், சுவாமி களின் குருவான செல்லப்பாச் சுவாமிகள் வாழ்ந்த ஊர்.
பலவீனந் தேகத்திற்கும் மனத்திற்குமே. ஆன்மாவுக்கு எந்த நேரமும் பலத்தான்.
உண்மை அறிந்தவர்கள் மாயையைப் பற்றி எழுதியுள்ளார்கள். உன்னைப் பற்றியும் என்னைப் பற்றியும் ஒன்றும் எழுதப்படவில்லை.
சிறப்பாகப் பண்படுத்தப்பட்ட ஓர் சுமத்தினைக் காட்டி. இந்தக் கமக்காரன் எப்படி இந்த நிலத்தை கிள்வளவு நல்லாகப் பண்படுத்தியுள்ளானே, அது போல ஒவ்வொரு வருந் தங்கள் தங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
மனிதன் மரணத்திற்கு அப்பாற்பட்டவன். என்னத்தைப் படிக்கிறது. மனிதன் மனிதன் தான். மோட்சத்திலிருந்தாலும் மனிதன் தான். நரகத்திலிருப்பினும் மனிதன்தான்.
ஆன்மா சும்மாதான் இருக்கிறது. அசைவு தேகத்திற்கும் மனத்திற்குந்தான்.
சும்மா இருக்கின்ற சூட்சம் :நீ? சும்மா இருக்கின்ற சூட்சம் ‘நான்’ சும்மா இருக்கின்ற சூட்சமே எல்லாம். தன்னை அறியவேண்டும். தன்னை அறிந்தாற் புறத்தியில்லை .
நல்லோர் சக வாசத்தினுல் சிவத்தியானம் வலியக்கு எதிராகப் போகக்கூடாது. கண்களை மூடிக்கொண்டுத் தியானஞ் செய்யலாம். கண்களைத் திறந்து கொண்டுந் தியானஞ் செய்யலாமி,
இலக்கினை எய்துந் தனையும் இடையிலே தங்கி விடாதே.
எங்களுக்கு உண்மைத் தகப்பன் கடவுள்,
பொய்யை நீக்கிப் பார்த்தால் எங்குஞ் சிவமயமே.
எண்ணங்கள் ஒன்றும் வராமல் தடுத்தல் ஒரு முறை. எண்ணங்கள் வந்துபோகட்டும் என்று சும்மா விருந்து பழகல் வேருெரு முறை. சாதனை முதிர முதிர உள்ளுக்குள் இருந்து வரும் (அதாவது மோனத்திலிருந்துவரும்) எண்ணங்கள் என்ன என்ன என்பதை ஊன்றிக் கவனிக்க வேண்டும். மோனத்திலிருந்து தான் அசரீரி வாக்குகள் வரும். தனிமையாயிரு; விழித்திரு; தூண்டிற்காரனைப் போல விரு, தைரியமாக விரு.
முதலிற் கீழ்ப்படிவாக விரு; பணிவுடையவனுகவிரு; சந்தோஷமாகவிரு ; பின் கட்டளை இடு.
நீதியைக் குழந்தை சொன்னுலுங் கேட்க வேண்டும்.
எப்போதும் வெளிச்சத்தோடு செல் , நம்பிக்கைக் குறைவு, பயம், உலகப் பற்றுக்களாகிய காற்றுக்கள் , வெளிச்சத்தை அணைக்க விடக்கூடாது.
சனகன் முதலாஞேர் உண்மையை அறிந்து கொண்டு அரசு புரிந்தார்கள்,
கோவிலேக் கட்டினதினுலென்ன? தன்னையல்லவோ அறியவேண்டும்.
திருவடி சேர மனம் பரிசுத்தமாயிருந்தாற் போதும் .
அறிவை அறிவால் அறியவேண்டும். வேலை செய்யாமல் சும்மா விருந்தால் மனம் அழுக்கடையும். ஞானிகள் சும்மா விருத்தல் வேறு. இவரல்ல; இவரல்ல; புருஷனைக் கண்டால்صي மெளனம் ,
புத்தகப் படிப்புச் சிலு சிலுப்பு, தன்னையறிதல்.
ஒரு அழுக்கும் ஆன்மாவைப் பந்திக்க முடியாது. உலகப் பற்று, மனமாசு அகல ஆன்ம தரிசனம் உண்டாகும்.
சரியாக நடப்பவன் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை :
எல்லாரிடத்திலும் உன்னையே வளர்த்துக்கொள், புல் பூண்டு, செடிகொடி, ஆடு மாடு ஆகிய எல்லா உயிர்களிடத்தும் உன்னையே வளர்ப்பாயாக .
இங்கே ஒரு நூதனமுமில்லை. ஒன்றிலும் மயங்காதே.
அருவமும் ஓர் உருவந்தானே, கிடந்து பார்த்தாலென்! இருந்து பார்த்தாலென்! உண்மை ஒன்றுதானே,
அடிமைத்தனம் வேண்டாம் . * கடவுளை அறிய வேண்டுமென முனைக்காதே எங்கு முள்ளவர். எங்களோடு கூட விருக்கிருர், முன்னிலை படர்க்கை இருந்தாலன்றே அறியலாம், பார்ப்பதெல்லாஞ் சிவமாகப் பார், செய்வதெல்லாஞ் சிவதொண்டாகச் செய், நானென்பதை விட்டுவிடு.
உன்னைத் தற்கொலை செய்; நித்திய வாழ்வைப் பெறுவாய்,
பிரமச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற மடங்களில் தங்கித் தங்கிப் பய0ணத்தை முடிக்கலாம்.
அடியாரிடத்துப் போகும் போது நடந்து போக வேண்டும் ,
பரிசுத்தமானது, பரம இரகசியமானது, * ஒராதே ஒன்றையுமுற் றுன்னதே நீழுந்திப்பாராதே பார்த்ததனைப் பார், - திருவருட்டயன்
இரவும் பகலும் வந்துபோவது போல் இன்ப துன்பங்கள் வந்துபோகட்டும். பயப்படாதே.
கடவுள் உள்ளே இருக்கிறர்; அவருக்குக் கண் இல்லை; காதில்லை; அவரைத்தான் வெளியே வைத்துக் கும்பிடுகிருேம்.
* நாங்கள் நித்தியரென்பதற்கு எவருடைய அத்தாட்சியும் வேண்டியதில்லை .
இந்தக் குத்துவிளக்குகளை ஏற்றி இருக்குமா ப் போல் நீங்கள் ஒவ்வொரு வரும் உங்களுக்குள்ளே இருக்கின்ற வெளிச்சத்தைக் கொழுத்தவேண்டும் .
ப்ோனவற்றை நினையாதே. ஆநந்தம் ஆநந்தம் ஆநந்தந் தானே. அங்கும் இங்கும் எங்கும் நானே. உன்னுள் உறையும் இறைவனே உனக்கு வேண்டியதை அறிவிப்பார். ஒருத்தரையும் ஒன்நுங் கேட்கத் தேவையில்லை .
உலகத்தை யார் திருத்தினுர்கள் ? தங்களைத் திருத்திக்கொண்டு போஞர்கள்.
ஒரு சிறு பூச்சியிலும் பூரண ஞானியிலும் இருப் பது ஒன்றே.
சன மருள்; சாத்திரமருள். சும்மா இருக்கச் சுகம் உதயமாகுமே. இம்மாய யோகம் இனி ஏனடா ? உச்சியில் நின்று பார்த்தால் ஒரு வித்தியாசமுமில்லை; கீழே இறங்கினுல் தான் தருமம் போதிக்கலாம். உச்சியில் நின்று பார்த்தால் அனைத்தும் ஒன்ருகவே உள்ளது. அந்த ஒன்று என்றும் பரிசுத்தமாகவே உள்ளது. அந்த ஒன்றை ஒன்றும் மாசுபடுத்த முடியாது.
* அதுவானுல் அதுவாவர்; அதுவே சொல்லும்,
- தாயுமானவர்.
அருமையான உலகம். சும்மா இருக்க முடியாதபடியினுற்ருன் பாட அலுமி படிப்பும் நடைபெறுகின்றன.
கடவுள் கூட இருக்கிருர். காசிக்கும் கயிலா யத்திற்கும் பேfவென்று அலைக்கழிக்கிருர்.
களவு எடுத்தவனும் பரிசுத்தப்படுகிறன். களவு கொடுத்தவனும் பரிசுத்தப்படுகிறன். எங்கள் சிற்றறிவால் அளவிட முடியாது.
வாசியை மேலேற்று; நூலை நீ விடு. நீயே நற் சிந்தனை. ஆகவே என் செய்யவேண்டும்! தன்னைத் தன்ஞல் அறியவேண்டும்.
அந்தக்கரணங்களில் நோய் பிடியாவண்ணம் கவனமாயிரு, விழித்திரு, எச்சரிக்கையாயிரு, நியாபகமாயிரு, எழுந்திரு.
கடவுள் எல்லாரோடுங் கூட இருக்கிருர், நாங்கள் ஏன் முதலாளித்தனம் பண்ணப் போக வேண்டும்? கரும்பை இறுக நசித்தாற்ருன் சாறு வரும். உன்னை முழுதும் ஒப்புக் கொடுத்தால் நீ செய்வது யாவும் தியானமாய் விடும்.
தன்னையறிய வேண்டும் தன்னைத் தன்னலறிய வேண்டும். அதற்கு மனவொடுக்கம் வேண்டும். அதற்குச் சிவத்தியானஞ் செய்ய வேண்டும்.
சர்வம் பிரம்மமயம் என்றறிந்த ஞானி சித்திக &ளப் பற்றிச் சிந்திப்பதில்லை . குண்டலினியின் எழுச்சியைப் பற்றிச் சிரத்தை கொள்வதுமில்லை.
முடிந்த முடிபென்ருன் முன்னிலையு மில்லை தடிந்தெழினி போற்சத்த மிட்டான்-படிந்தே திரையற்ற நீர்போலென் சிந்தை தெளிந்தே உரையுணர் வற்றேனே ஒம்.
ஓம் தத் சத்.
ஒழுக்கமாக இருந்துகொள். எல்லாஞ் சரியாசி நடைபெறும் . ஒழுக்கமே உயர் வைத் தரும்
ஒன்றுக்கும் அஞ்சாதே. "குண்டலி சத்தி முத லாய புத்தகங்களை நன்ருக வாசி, புத்தகத்தில் ஒன்றுமில்லை. எல்லாம் இங்கே (உடலினேக் காட்டி) உண்டு; வாசிப்பது பொழுது போக்குக்காகவே:
இ ைற வன் யாவருக்கும் பொதுவாகவுளன் : இறைவனைத்தன தாக்கப்படாது.
மனிதன் மரணத்துக்கு அப்பாற்பட்டவன் என்று எண்ணிக்கொண்டு, ஒன்றும் பேசாமல் திபானஞ் செய்துகொண்டிருக்க வேண்டும். அளவாகச் செலவு செய்து கணக்கிருக்க வேண்டும்.
காந்தி, புத்தர் யாவரும் வந்து சென்றனர்: ஆணுல் உலகம் உள்ளபடியே தான்.
கடவுளைக் கடவுளாற்றன் காணலாம் :
அவரவர் நிலைக்குத்தக அவரவரோடு பேச வேண்டும். நாயுடன் பேசுவது போல் மனிதருடன் பேச முடியாது. ஆகவே அவரவர்க்கு ஏற்ற முறையில் கதைக்கவேண்டும்.
வேலையை வேலைக்காக சி செய்தல் வேண்டும். வேலை செய்யாமல் இருக்க முடியாது. சூரியனைப்பார் தோன்றிய காலத்தை யார் அறிவார்? அது என்று முள்ளது. அதுபோல என்றும் உள்ள வணுகவே எண்ணி யாவுஞ் செய்.
இன்பமுந் துன்பமும், இகழும் புகழும் மாறி மாறி வரும் . இவற்றைக் கண்டு அஞ்சப்படாது.
உலகம் ஒரு பெரும் விளையாட்டு. இதனை இறைவனின் லீலை என்பர். எல்லாம் விளையாட்டே. சும்மாவிருங்கள்.
மலையின் அடிப்பாகத்தில் நிற்கும்போது பள்ளமும் திட்டியும் தோன்றும். ஆணுல் உச்சிக்குப் போய் விட்டால் கால்லாம் ஓர் அழகிய காட்சியாகத் தோன்றும் .
நல்லபிள்ளை தான்றுமி மற்றவர் கூறக்கூடியதாக வெளியில் திரியாதே, எல்லாம் இரகசியம்! பத்திரம்! முட்டாது பூசை செய்யுங்கள். ஒரு குறைவு .
(அடியவரைப் பார்த்து) என்ன புதினம்’ என்றர். (அடியவர்) ஒன்றுமில்லை என்றர். “ஆம் உலகில் ஒரு புதினமும் இல்லை . எப்போதும் ஒரு மாதிரித்.
உலக அமைதியாக இருக்கிறது. அமைதியே கடவுளும் ; வெளியில் நடப்பன எல்லாம் வெறும் விளையாட்டு, எங்கும் இறைவன் நிரம்பி இருக்கிறர்.
கடவுள் கூட கிருக்கிருர் என்று எண்ணிக் கொண்டு வேலையைச் செய்யுங்கள். கடந்த காலத்தி செய்தனவற்றின் பலனே இப்பிறப்பு. வருங்கால வாழ்வை உருவாக்க இப்பிறப்பில் மனித அணுக்கு முழு உரிமை உண்டு.
பொருள் ஒன்றே. பல பெயர்களும் பல வடிவங்களும் புறத்தோற்றமேயாம் .
கடவுளைக் காண்பதல்ல. முழுவதுமாய் இருக் ஒன்றினைப் பகுதி எப்படிக் காணும்? எல்லாஞ் வமெனப் பாவனைபண்ணி வர வர உணர்ந்து கொள்ளலாம்.
சிவனடியார் எல்லாவற்றையுஞ் சிவமெனவே பார்த்துப் பார்த்துப் பாவனை பண்ணி, பரிணமித்து உணர்த்து கொள்வர்.
பாடசாலையிற் படிப்பித்தல்; அது முடிந்தவுடன் சுய முயற்சியில் ஈடுபடல், பயிர் வைத்து வளர்த்தல் உலக நலனுக்காக எமக்காக வல்ல செய்தா லென்ன? செய்யாவிட்டாலென்ன? இறைவன் எல்லாம் பரர்த்துக்கொள்ளுவார். இனிமேல் காலையில் ஐந்துமணிக்கு எழுந்து தியானஞ் செய், சில விஷயங்கள் தெரியும், சில நாட்களில் தெரியாதுவிடும் எல்லோரையுங் கடவுளாகக் கருதிக்கும்பிடு,
எங்களைப் பற்றி எழுத முடியாது, சொன் ஞரல் நம்புகிறீர்களில் ஆல .
பனையிலுள்ள கள்ளைக் குடிப்பதற்கு எறும்பு மெல்ல மெல்லமாக ஏறிக் குடித்து மாண்டுவிடுகிறது. " சிலர் முயற்சி யிதனை ஒக்கும். ஆளுல் காகங்கள் பறந்து சென்று குடித்துவிட்டுப் போவது போலச் சிலர் செய்வர்.
எல்லாம் ஒன்று வெளித் தோற்றத்திற்ருன் வித்தியாசம், இங்கே இருக்கும் 8 வரும் ஒருவரே ! தோற்றந்தான் ஐந்து, உலகத்தில் உள்ள்து ஒன்றே என்று சிந்தித்து வர வேண்டும் உலகம் முழுவது மாகப் பரந்து படச் சிந்திக்க வேண்டும் ,
பூசை வணக்கங்களோடு நின்று விடப்படாது. மேலே மேலே செல்லவேண்டும். கொழும்புக்குப் புறப்பட்டால் இடையிலுள்ள காட்சிகளைக் காணலாம். ஆனால் இடைவழியில் தங்கிவிடப்படாது.
பிரசங்கம் ஒன்றுக்கும் போக வேண்டாம். சிவ தொண்டன் நிலையத்திலுள்ள நூல்களை வாசி. சும்மாவிருந்து தியானஞ் செய்; அது யாழ்ப்பாணம் முழுவதும் பர்வும் ,
வணக்கம் மணக்க வேண்டும் ; வேலை யுமி பூசையே; சத்தியத்தைத் துணிந்து சாற்று.
நீங்களுஞ் சுவாமி பண்ண வேண்டாம். மற்றவர் களையுஞ் சுவாமி பண்ணவிட வேண்டாம்.
சோற்றுக்கு ஒருமுறைதான் நெய்விடுவது; பிடிக்குப் பிடி நெய்விடுவதா?
கடவுள் பிறப்பதும் இறப்பதும் இல்லை . நீயும் பிறவாதிருக்க வேண்டும். வேலை ையச் செய்து கொண்டிரு. சிவனிடத்தில் ஒப்புக்கொடுத்தாயிற்று. அவரைப் பார்த்துக்கொண்டு இனிப் பிறவாதிரு.
இன்பமுந் துன்பமும் உலக வியற்கை , அவற்றைப் பார்த்துக்கொண்டு சும்மா இரு,
உலகம் இயற்கையாகவே மயக்கும். எப்போதும் கடவுள் வேலை செய்துகொண்டு களைப் பின்றியிருப்பது போலச் சலிப்பற்றிரு.
எல்லோரும் வேதம் ஒதுகிறர்கள், ஒருவன் மதத்தில் வேதம் ஒருவன் கோபத்தில் வேதம். ஒருவன் காமவேதம் ஒருவன் சாமவேதம், இவ வண்ணமே
செத்தாரைப் போலத் திரி நெஞ்சம்ே! பிறர் குற்றங்களை மன்னித்து மறந்திரு.
கடவுள் நெருப்புடன் இருக்கிறர் சூட்டிஆன மாற்றினரா? புலியுடன் இருக்கிருர், கள்ளருடன் இருக்கிருர், கோபிக்கிருரா? அதுபோலவே உலகில் வாழவேண்டும்,
குரு பூசை என்றல் தன்னை அறிதல், மற்றையவெல்லாங் * குசுபூசை
காலுக்குக் கீழே பூமி, தலைக்கு மேலே மேகம், உங்களில் நீங்கள் நம்பிக்கையாக விருங்கள். உங்களைப் பற்றி இனி எனக்கு ஒன்றுமில்லை . நீங்களே நான் ,
* உண்டாட்டம்,
நான் உன்னைக் கும்பிடுகிறேன். நீ என்னைக் கும்பிடுகிருய், இங்கேயே இருந்துகொள்.
உங்களுக்கு எல்லாஞ் சொல்லி முடிந்த ன; யாமுளோம். யார்? எதைக் கும்பிடுவது?
வாழ்க்கைக்கு உணவு வேண் டுவது போல் உண்மையை அறியத் தொழுகை வேண்டும். எல் லாம் உதவியான சாதனைகளன்றி முடிந்த முடி பல்ல, என்னைப்போலவே நீங்கள்.
அங்குமிங்கு மோடாதே. நிலையாக இருக்க வேண்டும்.
கயிற்றரவு நியாயமே எல்லாம். சும்மா கிழிக்கும் கிழங்குக்கு ஆப்பும் சுத்தியலும் எடுத்தமா திரித்தான் நூல்களுக்கு எழுந்தவுரைகள்.
சாத்திரங்களை ஒழுங்காகப் படி, புலியைக் கொல்லும் படி கடவுள் கூறுகின்ருரா? மனிதன் தர்மம் வேறு. புலியின் தர்மம் வேறு.
உடம்பினை ஓம்பினுற்றன் ஞானமும் அடையலாம்; இல்லாவிட்டால் கஷ்டம்.
சூரியன் எல்லா ஊர்களிலும் கிழக்கேதான் உதயஞ் செய்கிறது. ஒரு கண்ணுற் பாராது, இரு கண்களாலும் பார்த்தால் எல்லாஞ் சமம்.
கடவுளோடு கலியாணம் பண்ணிப் பாருங்கள்; சூரியனும் பூமியுங் கலியாணஞ் செய்வதாலேயே சராசரங்கள் தோன்றுகின்றன.
பூகம்பம் கெடுதி செய்தால் யாம் திருப்பிக் கெடுதி செய்கிருேமா? பேசாமல் இருப்போம். அதேபோல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்; எல்லாங் கடவுளே.
உன்னை நீ (உன் உயர்நிலை) வழிநடத்துவாயாக.
உலகில் குருவும் இல்லை ; சீடனும் இல்லை எல்லாம் ஒன்றே.
இதுதான் வாழ்க்கை :- யாத்தானவத்தையும் மாயா புரியின் மயக்கத்தையும் நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோநித்தனன்பு கொண்டு வேர்த்தாற் குளித்துப் பசித்தாற் புசித்து விழிதுயின்று 1ார்த்தாலுலகத் தவர்போ லிருப்பர் பற்றற்றவரே
- பட்டினத்தார் கொப்பரு காயக்காய ஓட்டை விட்டுக் கழன்று விடும். ஒடும் புளியம் பழமும் போல உலகில் வாழ வேண்டும், அரிசிக்கும் உமியுண்டு; பூவுக்கும் இத ழுண்டு. எவருக்கும் ஆதாரத்துக்கு ஒரு பொருள் வேண்டும் ,
பூரணமான நன்மையுளதாயின் இப்பிறப்பேயில்லை. சந்திரன் தன் கறையிருளை நீக்க முயல வில்லை. உலகம் முழுவதற்கு ம் வெளிச்சம் கொடுத்து இருளையகற்றுகின்றது. அதுபோல உலக சேவையில் ஈடு படுதல் நன்று,
உலகில் செத்தாரைப் போல வாழவேண்டும் , உழைத்துப் பற்றற்றுச் சீவித்துக்கொண்டு வேண்டிய வேண்டியவர்களுக்குப் பொருளுதவி செய்து கொண்டு வாழுதல் நன்று,
கரையான் கடலில் தூண்டில் போட்டவகையாக இருக்கிருேம், காலம் வரும்போது கவ்வுதற்குக் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இழுத்து விடு.
இப்போது கடவுள் இருக்கிருர் என்பது வெளிப்படை ஆணுல் அவர் எங்குமிருக்கிருர், யான் எங்கு முள்ளேன். எனினும் இப்படி ஒரு கொட்டிலில் இவ்வுடலை வைத்திருக்க வேண்டியதே,
பேசாதிருந்தால் அவரை அறியலாம் துன்பம் நோய்யாவும் நன்மைக்கே வருகின்றன; வெயர்வை வெளிவரவேண்டும் , அற்றேல் வருத்தம் வரும்,
மற்றவர்கள் பறக்கிறர்கள் என்று பறக்க நினைக்க வேண்டாம். வேலை செய்து எல்லோருடனும் அன்பாகப் பழகவேண்டும். இருந்து பார்த்தால் எல்லாந் தெரியும்.
அன்பே கடவுள். சத்தியமே கடவுள். கடவுளை உணர்தல் வேண்டும் கண்ணுற் காணுவதல்ல. எல்லாம் எங்குங் கடவுள்.
வெள்ளம் பாயும் போது சில தடைகளை எடுத்து விட்டால் நன்ருகப் பாயும்: அதற்காகவே குறிப் பறிந்து செய்யாமைக்குச் சிலவேளைகளில் ஏச்சு விழும்.
வணங்குவதும் வ ண ங் க ப் படுவதும் ஒரு பொருளே. தன்னைப் பார்க்கத் தெரியாதவிடத்திற்ருன் புத்தகங்களைப் பார்த்தல் முடியும்
மேகம் இருள மயில் ஆடும். குயில் கூவும்: கோழி கொக்கரிக்கும். ஆந்தை அலறும். இது போல மனந் துய்மையடையப் எம்மொழிச் சூழலிலிருக்கிருேமோ அம்மொழியிலேயே பாடல் வரும்
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பிரதிச் செயலுளஆ. கண்ணுற் செய்ததற்குக் கண்ணிலுங் காலாற் செய்ததற்குக் காலிலும் வரும்.
வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிரு.
இனிமேல் இங்கே வரும்போது சும்மாவ கொடுக்கவும் வேண்டாம். வாங்கவும் வேண்டாம்.
ஆன்மா ஒரு நித்திய வஸ்து. அது இங்கு மங்கு மெங்குமுள்ள சித்து.
நிமிர்ந்து நில்; ஒழுங்காக நட; அன்பாக இரு
மலையைப் பார்க்கும்போது மலர்கள் தெரிவ தில்தில்லை; மலர்களைப் பார்க்கும்போது மலை தெரிவதில்லை.
இடியப்பமும் அதன் துண்டுகளும் போலவே கடவுட் காட்சியும் உலகக் காட்சியும். நூதன மொன்றுமில்லை. எல்லாம் என்றுமுள்ள மாதிரியே.
பணம் வரும் ; போகும். அதைப்பபற்றி வருத்தம் வேண்டாம்.
கண்ணுற் காண்பதெல்லாம் நிலையன்றெனக் ஆண்டு கலக்கமற்றிரு. காண்பதெல்லாம் யானெனக் கண்டு கலக்கமற்றிரு நெஞ்சமே!
* கடவுளைப் பின் பக்கத்தாலும் தொழலாம். உண்மைப் படிப்பைப்படி. எப்போதும் மாணவணுக இரு. அதுதான் மிகக் கஷ்டமானது.
பகுத்தறிந்து உறுதியாக நிற்க வேண்டும். ஒரு மரத்திற்குச் செல்லும் சக்தியொன்ருயினும் பட்டை, இலை, பூ எனப் பல பிரிவுகளாக அமைந்ததே மரம், அது போலச் சமூகத்தில் எள்ளுவதற்கு ஏதுமில்லை.
எவர் எதைச் சொன்னுலும், சாத்திரம் எதைச் சொன்னுலும் தன்னனுபவத்தோடு ஒப்பிட்டு, அநுபவமே சரியெனக் கொள்ளல் வேண்டும்.
அது எங்கு முண்டு. 'கள்ளனுக்கும் அது உதவி. ஒரு நூதனமுமில்லை . மேலேயிருப்பதும் நீதான்; கீழேயிருப்பதும் நீ தான்.
(ஒர் அன்பர்) ஏன் தொழில் செய்யவேண்டும்?
(சுவாமி) அந்தக் கேள்வி வேண்டாம். கடவுள் ஏன் இருக்கிருர் என்று கேட்கலாமா?
அரசனுக இருந்து கடமையைச் செய்தல் நன்று. அதனுல் வருங் குற்றங்களை மக்கள் கேட்கமாட்டார் கள். கடவுளுக்கே அது உரியது. துறவு மனத்தோடு அரசன் கடமையைச் செய்தல் பெரிய காரியம். எல்லாராலும் அது முடியாது.
* மனத்தால் தொழுகையில் எப்படியும் நிற்கலாம்.
கடவுள் கூட இருக்கிறர். ஒரு வேலையுமில்லை : ஆஞல் உலக மாயா விகாரங்களுக்குத்தக நடந்து கொள்ளுதல் வேண்டும் உண்மையில் உறுதியாக நிலைத்து நிற்றல் வேண்டும். எத்தனையோ மாயா சக்திகளுள. எல்லாவற்றையும் கண்டு தான் தானுக (சாட்சியாக) இருத்தலே ஞானம் ,
நாங்கள் ஒன்றுஞ் செய்வதில்லை , எல்லாந் தானுகவே நடைபெறும்
எங்கும் என்றும், எல்லாருள்ளும் இறைவன் ஒலியைக் கேட்கலாம்,
எப்போதும் அளந்த அளவில் திருப்தியாக இருக்க வேண்டும். கூடுதலாகத் தான் முயற்சிப் பட்டால் பின் உத்தரிக்கவேண்டும் ,
உலகில் ஒரேயொரு * துறவியுண்டு. அவர் தன்மையைச் சாற்றுதல் யாவர்க்கும் அரிதே
உலகில் இயற்கையென்று ஒன்று இல்லை ; எல்லாம் இறைவனே. சிறு வெப்பத்தைத் தானுந் தடுக்க எவரால் முடியும்?
கை தன் வேலை, கால் தன் வேலை . எல்லாந்தன் தன் வேலை செய்ய, மரங்கள் தங்கள் வேலை கூலி தன் வேலை. உபாத்தியாயர் தன் வேலை . ஞானி தன் வேலை செய்ய, யாவுக்கும் சாட்சியாக, மகாராசா வாக இறைவன் வீற்றிருக்கிறர். உலகில் ஒரு குறையுமில்லை . எல்லாம் இறைவனே . சும்மா இருந்து பார்க்க வேண்டியதே.
மனத்தின் அசைவே கர்மம், அசைவின்றியிருந் தால் கர்மம் இல்லை .
* கடவுள்.
** கர்மத்திலும் ஞானம் சிறந்தது என்கின்றீர்! ஆகவே ஏன் கர்மத்தைச் செய்விக்கின்றீர்" என்ற பகவற் கீதை வாக்கியத்தை வைத்துச் சுவாமிகள் விளக்கிய முறை:-
"படிப்பில் ஒன்றுமில்லை . ஆணுல் படி என்கிறே லால்லவா?
மற்றவர் கருத்துக்களையறியும் ஞானமும் ஒரு மாயை. அதனையும் மறக்கவேண்டும். சும்மா இருப்பதுதான் எங்களுக்கு நல்லது.
ஒருவன் என்ன வேண்டுமாயினுஞ் செய்யலாம். ஆற்குரிய முறையில் வல்லமையைப் பெறல் வேண்டும்.
யாவரும் விடுதலையடையப் பயிற்சிபெறும் ஆச் சிரமமே இவ்வுலகம்". எல்லாரும் அவரவரளவுக்கு அவரவர் பங்கினைச் செய்கின்றனர். கூடாதது என்ற தொன்றில்லை. தானே உயர்ந்த இடத்தில் ஏறி இருத்தல் வேண்டும். இதனுலன்றே இறைவன் யாவற்றுள்ளும் பரிசுத்தராகவும் பரம இரகசியமாகவும் இருக்கிறர்.
பலாக்காய் பெரிது. தொங்குவது ஒரு சிறிய காம்பில். இக்காம்பில் இருக்கும் சக்தியே இதன் வல்லமை. இப்படித்தான் உலகம் அறிய முடியாத ஒரு சக்தியில் இயங்குகிறது. அதனை இறைவன் எனினும் வேறெது எனினும் யாவும் ஒன்றே.
கலகம் பிறக்க வேண்டும். கலகத்தில் நின்றே அமிழ்து பிறக்கும்.
இவ்வுலகம் அழிவதால் நட்டமும் இல்லை; வாழ்வதால் இலாபமும் இல்லை . ஒரு குறைவுமில்லை .
தேகம் அனலாகத் தகதகவென இருப்பவர்களுக்குத் தான் ஞானம் வரும். சளசள வென்று தண்ணிராக இருப்பவர்களுக்கு அஃதரிதாம். * பகவத்கீதை அத்தியாயம் 3 சுலோகங்கள் 1 & 2.
உண்மை ஒன்று உளது. "அதைக்க ண்டோமி என்றுங் கூறமுடியாது. ‘காணவில்லை" என்றுங் கூற' முடியாது. பகிரங்க இரகசியமாக இருக்கிறது.
அறிபவனை ஆர் அறிவார்?
காலத்துக்குக் காலந் தோன்றிய ஞானிகளும் ஏனைய பெரியோரும் ஏதோ சில வெல்லாங் கூறிச் சென்றனர். ஆணுல், அது அதாக, என்றும் அறிய முடியாததாக, புதிதாக, புதிராக இருக்கிறது.
ஒரத்தந்திரத்தில் தேடிப்போஞலும் அவரவர்க்கு அது அத்தந்திரத்தில் மறைந்து நிற்கும்.
உள்ளே பார்க்க இன்பம் : புறத்தே பார்க்கத் துன்பம், அத்துன் பத்துக்குள்ளும் அவ்வுண்மைப் பொருள் இருக்கிறது.
மாயப்பிரபஞ்சம் என்றும் இடையருது மாறிய வண்ணம் இருக்கிறது. மாருது இருந்து கொண்டு மாற்றங்களைச் செய்விப்பதுதான் உண்மைப் பொருள்.
யாம் குறைவுடையோம் என்று எண்ணினுல் குறைவுடையோராகி விடுவோம். ஆகவே எப்போ ஆம் நிறைவுடையோம் என்றிருக்க வலிமை வந்து விடும்.
இரவும் பகலும் மாறி மாறி முறையாக வரும் இவற்றில் ஒன்றையேனும் கொஞ்சம் தாமதித்து நிகழச் செய்யலாமா? இதுவே உலகம், இன்பதுன்பம் ஆகிய இரண்டும் இவ்வண்ணமே.
எறும்பு ஊர்ந்து சென்ற மாதிரி மெல்ல மெல்ல மாக வளரவேண்டும்.
இழுபறியே உலகம், எல்லாவற்றையுந் துறந்து சாமியாக இருந்தாலும் கும்பிட ஆள்வரும். அப்படி வரும்போது ஏதாவது கூறவேண்டும். உடனே கொழுவல் தொடங்கிவிடும்.
நாய் நீருள் இருந்து வெளியே வந்தவுடன் உதறி விட நீர்யாவும் அகலுதல் போலச் சித்த விகாரங்களை உதறிவிட்டுத் தனித்திரு,
மற்றவர்களை வசியம் பண்ணுவதும் ஓர் மயக்கம். கடையிற் சாமியும் அகப்பட்டுக் கொண்டார். ஆணுல் செல்லப்பர் பெரிய மகான். இப்படி மயக்கவில்லை , *ஆர் அறிவார்? எப்பவோ முடிந்த காரியம் ? என்று சொல்லிக் கொண்டு திரிவார். யாரா வது அவரை விழுந்து கும்பிடுதற்கு வந்தால், உடனே விரைந்து சென்று சலங்கழிக்கும் இடங்களில் நிற்பர்.
செல்லப்பாச் சுவாமிகளிடத்திலே கேட்டறிந்த வர் இல்லை. யான் மெளனமாகப் பின்பக்கத்தில் நிற்பேன். பிதற்றல்களோடு இடையிடையே அரிய மந்திரங்கள் கலந்து வரும்.
உண்மையை உணரும்வரை வேலையைச் செய்து கொண்டேயிருத்தல் வேண்டும், அறித்த பின் விட்டும் விடலாம். செய்தும் இருக்கலாம். சோம்பல் மிகக் கெடுதி. வேலையில் ஞானம் இல்லை. வேலையைச் செய்யும் மனப்பாங்கிற்றன் ஞானம் உண்டு.
தான் செய்வது தனக்கே. உண்மையை எவரும் பூரணமாகச் சொல்ல முடியாது, மாபெருஞ் சங்கரரும் முழுச் சரியாகச் சொல்லவில்லை. அது இருக்கிறது. அதுவே எல்லா எழுச்சிகளுக்கும் ஆட்டங்களுக்கும் ஆதாரம்.
காற்று வீசிக்கொண்டேயிருக்கிறது. ஆளுல் விலைகள் தாமாக ஆடிச் சலித்துவிடும், மாயையின் வேலை நடைபெறும், ஆயினும் உண்மைக்கு ஒரு குறைவும் இல்லை.
அது நன்மை தீமை இரண்டிற்கும் மேலானது, இரண்டுமல்லாதது. அநுபவத்தில் காண வேண்டும். அவர் எதைச் சொன்னுலும் * நாங்கள் இருக்கிருேம்,” அநுபவத்தில் அறிய வேண்டும்.
நானும் நீயும் மாணிக்க வாசகரும் பிறரும் சமுத்திரத்தில் எழும் அலைகளைப் போலாவோம்.
அலைகள் அடிக்கினும் மீன்கள் ஓடிவிட்டனவா? அதுபோல் நாமும் உலகிற்றன் வாழவேண்டும்.
* காசியுங் கதிர்காமமுங் கவட்டிற்குள்ளே. உலகம் மிக நல்லது. எல்லாருக்கும் வேண்டியன உண்டு. அவரவர் தத்தம் அளவுக்கு எடுத்துக் கொள்ளுகிறர்கள்.
குடிகாரனும் எமக்கு வேண்டும். சில வேலைகளைச் செய்வதற்கு இப்படிப்பட்டவர்களினதும் உதவி தேவையாகும்.
மற்றவர்களுக்குப் பிடிகொடாமல் நட, இவர் அப்படிச் சொன்னுர், அவர் இப்படிச் சொன்னர் என்று ஏமாற வேண்டாம்.
கோவில், மடங்கள் நிறுவி விடுதலை பெற்றேர் எத்தனை பேர்? அகந்தையுற்று அழிந்ததேயல்லாது; யாம் ஒன்றுக்கும் உட்படவில்லை.
வேலை செய்ய வேண்டும். ஆணுல் வேலையில் மாள் ப்படாது.
உடல் உள்ள வரையும் பயம் இருக்கும். ஆயினும் பயத்துக்கு இடங் கொடுக்கப்படாது.
காட்டில் உள்ள புலியைக் கொல்லுதல் பாவம். ஆஞல் அது நாட்டினுள் புகுந்து விட்டால் கொல்ல வேண்டும்.
நித்தியம் எது, அநித்தியம் எதுவெனத் தெளிந்து, பின் அத்தெளிவில் உறுதியுற்றுக் கொண்டு, ஏதாவதொரு வேலையைச் செவ்வனே செய்து கொண்டு வாழ வேண்டும். உண்மை எல்லாருள்ளும் உண்டு. * காமங்கடிந்தார்க்கு எத்தலமும் மிக அண்மையிலுளது,
சிவதொண்டனுக்கு மேலாக வேறு சக்தியுளதா? அவனே பெரியவன்.
புத்தருக்கும் உலக வெறுப்புத் தோன்றியபடியால் துறந்தார். உண்மையை அறிந்தார். அதனுல் உலகில் விருப்பு வந்தது. உலகத்துக்கு நன்மை செய்யத்துவங்கிஞர், பெரிய குடும்ப பாரமான.
ஆசையும் வேண்டும். கடவுளைக்கான அகந்தை பும் வேண்டும். இவ்வக ந்தையின்றிக் கடவுளை எப்படி அறியலாம்?
வேலை செய்யும் போது சரியும் பிழையும் வரும் , ஆயினும் வேலையை விடாமற் செய்தல் வேண்டும் நற்சிந்தனையும் துர்ச் சிந்தனையும் இரட்டைகள், காயம் போயும் மறு மாற திருப்பது போல் ஏன் பயப்பட வேண்டும்?
எல்லாரும் இப் பூமாதேவியில் பிறந்தே புனி தரானுேம், ஆகவே இதுவே பெரிய தாய்.
இமயச் சிகரத்துக்கு ஏறுவதுபோல் வாழ்க்கையில் உயர உயரப் போவதும் மிகக் கஷ்டம் , எத்தனை விதமான தடைகள் ஏற்படும் கடைசி முடிவிலும் ஆணவம் அழியாது தலை தூக்கும்.
ஏதும் வேண்டாம் என்றும் நினைக்க வேண்டாம், ஏதும் வேண்டும் என்றும் நினைக்க வேண்டாம். நாம் என்றும் உள்ளோம்” என்பதில் நிலையான உறுதி கொண்டு வேலையைச் செய்து கொண்டிரு, வேலையை விடுதல் முறையல்ல.
*போர் செய், உலகம் ஓர் போர்க்களம்ே. எது வரினும் அதனை ஏற்றுக்கொள், பயந்து அல்லது இரங்கிக் கடமையிற் கைநெகிழாதே’ என்னும் வார்த்தைகளால் கிருஷ்ணன் அரு ச் சுனன் கொண்ட மயக்கத்தைத் தீர்த்தார்.
உண்மையொன்று. ஏனையயாவும் மாயை. உண்மையைப் பற்றிப்பேச வாய் திறந்தாலே பிழை வேறு என்ன பேசலாம்? மழை எப்படி? பயிர் எப்படி? இத்தியாதி. அதை நீயே அறி. அப்படிச் சொல்வதும் பிழை. மாற்றம் மனங் கழிந்த ஆர். இதையெப்படி இங்கே கூறமுடியும்? முழுதும் உண்மை என்று கூறியிருக் கையில் யாம் என்னதான் பேச முடியும்?
(மற்ருெருவர் தமக்குச் செய்த அநீதியைப் பற்றி ஒர் அன்பர் சுவாமிகளுக்கு முறையிட்டபோது)
எல்லாவற்றையும் மேலிடத்தில் ஒப்புக் கொடு. அமைதியாக இரு. இதைத் தா னும் பேசாமல் அமைதியாக இரு’ என எண்ணம் உதிக்கிறது. எல்லாம் மயக்கமே .
எவரும் எதனையும் இழப்பதில்லை : கர்மத்தை அநுபவிக்க வேண்டும். மேற்கொண்டு தேடப்படாது.
உலகிலுள்ள மாயாகாரியங்களெல்லாந் தன்னை அ.நிவதற்கு த் துணைக்கருவிகளாகும். இதனை விளங்கவேண்டும். இதனை உணரச் செய்யவே இறைவன் ஆன்மாக்களை உயர்த்தியும் தாழ்த்தியும் வருகிருர்,
மயக்கமெல்லாந் தீரவேண்டும். சோதனைகள் நன்மைக்கேயாம்.
சும்மா தியானத்தில் அடங்கியிருப்பதில் என்ன பயன்? என்றும் எவ்விடத்தும் தன்னை மறக்காமல் இருக்கும் சகச நிலையைப் பெறல்
எல்லா ரோடும் எல்லார் மத்தியினும் வாழ வேண்டும். ஆஞல் தன்னை மறக்கக் கூடாது.
இன்பத்தை எடுத்துக்கூற யாரால் முடியும்? பக்குவம் வரவர அநுபவித்தே அறியவேண்டும்.
ஞாபகப்படுத்துதலே பெரிய சாதனை.
முற்ருக உணர்ந்த ஞானிக்கும் இவ்வுலகம் ஒரு திரைப்படம் போல இருக்கும். உலகம் யாவும் ஒன்றென அநுபூதியிலறிந்தாலும் இயற்கைத் தோற்றம் இருந்து கொண்டேயிருக்கும்.
சுவாமிதான் எங்கும் இருக்கிருர். வேதங்களும் உபநிடதங்களும் இதனையே சொல்லுகின்றன, அறிவாளிகளும் இதனையே கூறுகிருர்கள். எல்லாம் அவரே; அவரில்லாத இடமேது!
உலகத்தைத் திருத்தலாம் என்று எத்தனை முறை முயற்சி செய்து விட்டனர்? திருத்திவிட்டனரா?.
உலகில் பெரிய நூதனம் கடவுள். சண்டையும், சமாதானமும், கூடுதலும் பிரிதலும், இன்பமும் துன்பமும், ஆணும் பெண்ணும், அன்பும் வன்பும், யாவுக அதுவே. வேத சாத்திரங்கள் எல்லாம் இவ்வொன்றையே எண்ணில் லாக் காலம் எண்ணிலா வகையாகக் கூறின. இனியும் எண்ணிலாக் காலத்துக்கு எண்ணிலா விதமாகக் கூறும்.
வில்லங்கமே சுகம்; வில்லங்கம் என்று அறிந்து அதை நீக்கினுற்றன் சுகம் வரும். துன்பத்தை நீக்க நீக்க இன்பம் வந்துகொண்டேயிருக்கும்.
ஞானசம்பந்தருடைய திருவெழுகூற்றிருக்கை என்னுந் திருப்பதிகத்தில் வேதாந்தமும் உண்டு. சித்தாந்தமும் உண்டு. முழுவதும் உண்மை.
இவ்வுலகம் ஓர் அருமையான தவச்சாலை. ஒவ்வொரு உயிரும் தவஞ்செய்துகொண்டுதான் இருக்கிறது. ஒன்று தான் இவ்வாறு பலவாக வந்து, உபதேசிப்பவராகவும் உபதேசங் கேட்பவராகவும், சண்டை செய்பவராக வும் சமாதானஞ் செய்பவராகவும் இருக்கிறது.
காமா தி குணங்களாகவும் இவற்றை வெல்பவராகவும், இயம நியமாதி சாதனைகளாகவும் வியாபித்துளது. நானும் அதுதான். நீயும் அதுதான் , வேண்டாமென்பதும் அதுவே, வேண்டுமென்பதும் அதுவே. எல்லாமாகவும் அல்லவுமாகவும் விளங்கும் அப்பொருள் ஒன்றே உலகில் என்றும் உள்ளது. ஏனைய வெல்லாம் அதனிற்றேன்றி, அதனில் நிலைத்து, அதனில் மறைபவையேயாம்.
இதற்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை , இஃதில்லாத பொருள் வேறெதுவுமில்லை . இஃதில்லாத இடமுமில்லை.
செல்லப்பாச் சுவாமிகள் சில ஆண்டுகளாக அடிக்கடி “ஒரு பொல்லாப்புமில்லை" என்பதைக் கூறிஞர். கேட்போர் யாவரும் அதனைப்பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து உண்மையை உணரச் செய்வ தற்காகவே இப்படி அடிக்கடி ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்லுவார். இதனை விட்டு விட்டு * இப்படிச் செய்; அப்படிச் செய்யாதே" என்பது வீணுகும் . அவர் கடைசியாகச் சொன்னது **நாம் ஒன்றும் அறியோம்' என்பதாகும்.
அழிவதும் ஆவதும் அறிந்து நயமுடையன தரக் கூடியதைச் செய்தல் வேண்டும்.
வேலையைச் செய்து கொண்டு சும்மா இருக்க வேண்டும். கையும், காலும் மற்றும் யாவும் வேலை செய்வதற்காகவே தரப்பட்டன. ஆணுல் பற்றின்றிச் செய்தல் வேண்டும்.
உலகில் ஒன்று தான் பலவாகத் தோன்றியது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையை நிறைவேற்றவே வந்துளது. அதது அதனதன் வேலையைச் செய்கிறது. ஆகவே அது இப்படிச் செய்யவில்லை, அப்படிச் செய்யவில்லை என்று நாம் குறை கூறப்படாது
* அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலமே . கந்தரநுபூதி
பலா பலாப்பழமும், மா மாம்பழமுமே தரும். பலா மாம்பழத்தைத் தரவில்லை என்று குறை சொல் வாருமுளரோ?
உலகத்துக்கு எல்லாம் இன்றியமையாதனவாகும். தான் ஆன்மா என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்தி வாழ்வினை நடத்த வேண்டும். ஒருவிதத்திலும் மயங்கப்படாது.
சிறிதாகவேனும் பெரிதாக வேனும் ஒருவர் உனக்குப் பிழை செய்தால் ஒன்றும் நடைபெற வில்லை என்று நினைத்துக்கொள். நாவைக் காத்துக் கொள்.
சிறு தூசு கண்ணிற் பட்டவுடன் எவ்வளவு மறைப்பு! சும்மா இருக்கும் போது சாதகனுக்குச் சிறிய அளவு உலக ஆசை எ பூழினும் பெருஞ்.
பலவீனந்தான் பலம், ஒரு நூதனமுமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தாலும், சாவரினும் வாய்மையையே பேச வேண்டும். முகமன் பார்க்கக் காட்டுக்குப் போனுல் மனம் அடங்கிவிடுமா? உலகில் எல்லா நன்மைகளும் உண்டு. எவற்றிலும் ஈடுபடாது கடமையைச் செய்து தான் பூரணமாவதன்றிக் கடமையைப் (வேலையை) பூரணமாக்குவதல்ல.
தேங்காய் பிடுங்கும் போது ஐந்து விரல்களும் சேர்ந்து முறுக்க வேண்டும். எத்தனையோ முறை முறுக்கியபின் தேங்காய் கழன்று வரும்.
தொல்லைகளிலிருந்து நன்மை பிறக்கும். நன்மைக்குத் தொல்லை வரும். கவனமாகவிருந்து மற்றவர்களை வழிகாட்டிக் கொண்டு நடத்து,
நன்மையுந் தீமையுஞ் சமாந்தரமாகச் செய்கின்றன என்பதை அறிந்து கொள்.
மனத்தூய்மையாக இருந்து கொண்டு உலகத்தினர் போல உலகில் ஒழுகுக.
கரைச் சலாக இருக்கிறது சுவாமி என்றெரு அன்பர் கூறியபோது, சுவாமிகள் *கரைச்சலில்லாமல் பிள்ளை பெறவும் முடியாது. உலகில் அவரவர் வந்த வேலையை அவரவர் செய்கின்றனர். இயற்கை நியதி நடைபெறட்டும்” என்ருர்கள்,
பொய்யும் பேசாதே; மெய்யும் பேசாதே ;மெளனமாக விரு. செத்தாரைப் போலத் திரிதல் என்ருல் பேசாமல் ஒன்றுஞ் செய்யாமல் இருப்பதல்ல. எதைலும் தாக்குப்படாது இருத்தல் ஆகும்.
ஏனெனில் உலகிலுள்ள எல்லாம் அறிவுமயமே.
உலகிலுள்ள எல்லாம் அறிவுமயமே.
உலகில் கெடுதி ஏதுமில்லை, அப்படியான தோற்றம் எமக்குத் தான் உள்ளது. அப்படி உண்மையில் இல்லை . ஏனெனில் எல்லாங் கடவுள் மயமே யாகும்,
முன்னிலையில் வைத்து வணங்காமல், பங்கு போட்டு வணங்காமல், எங்கும் எம்முள் வணங்க வேண்டும்.
(உண்மையை) சரியைக் கண்டாற் பித்தம் பிடித்துவிடும். உலகம் உள்ளது; உலகம் இலது
நாம் இருக்கிருேம் என்ற நம்பிக்கையைவைத் துக்கொள்ளவேண்டும் . கற்றதும் மண்ணே! கேட் டதும் மண்ணே!
ஒளவையார் மொழிகளில் எல்லா உண்மைகளும் உபநிடதச் சாரமும் உள. அவற்றையே மனிதர் படித்தாற் போதும். மிக விழிப்பாக இருக்கவேண்டும்,
உலகம் ஒரு ஒழுங்கிந்ருன் நடைபெறுகிறது. கள வெடுப்பவன், கலகஞ் செய்பவன் ஆகிய அனை வரும் ஒழுங்கினுட்டான் இருக்கிறர்கள். அருமையான உலகம்.
சிவதொண்டன் நிலையத்திலே எல்லாரும் மெளனமாக இருந்து உண்மையை உணரவேண்டும்.
சாத்திரங்களேயும் புத்தகங்களையும் படித்து விட்டுப் பிரசங்கஞ் செய்து தாமே தம்முள் மகிழ்ந்துகொண்டு போவதன்றி மற்றவர்களுக்கு ஒன்றுமில்லை. ஒவ்வொரு வருடனும் கடவுள் கூடவே இருக்கிறர். அவரவர் தத்தம் க்கு வேண்டுவனவற்றைத் தாமே பெற்றுக்கொள்ளட்டும்.
யான் புத்தன், நீங்கள் சங்கம். புத்தன் என்றல் அறிந்தவன் என்ப.
ஐந்து புலன்களும் ஐந்து சகோதரர்கள். (ஒரு யாக தினத்தில்) உங்கள் எல்லாரையும் இன்று கொளுத்தியெரிக்கப் போகிறேன்.
ஆசையை விட்டவன் தான் மீசையை (தாடியை) விடவேண்டும். அவ்வளவும் இதைச் (தாடியைக் காட்டி) செய்யப்படாது.
நான் ஒரு நாய்; ஏனெனில் நான் இறைவனிடம் நன்றியுடையேன்.
*எல்லாருடனும் கடவுள் இருக்கிறர். மெளனமாக இருந்து பாருங்கள்” என்று யாக நாட்களில் வருகின்றவர்களுக்குச் சொல்லு,
மோட்ச இன்பத்துக்கும் ஆசைப்படக் கூடாது; இன்பமும் அங்கில்லை ,
* காலைத் துர்க்கி மேலே வை, மேலை வாயில் திறக்கும்.
* பிரானனை
விளைவு நிலத்தைப் பண்படுத்தப் பயிர் விளையும். தன்னை ஆயத்தப்படுத்த வேண்டும். அப்போது அவனும் விரும்பிடுவான். * அவன்தான் விரும்பவேண்டும். முட்டாமல் வாழ வேண்டும். மாதிரியொன்றும் வேண்டாம். இந்த என் நெஞ்சில் உள்ளதுதான் உன்நெஞ்சிலுமுளது. அதுதான் எங்குமுளது. இதயறியும் வழி நினைந்து உறுதியுறலேயாம்.
மேலிருந்தும் மேலல்லார், மேலல்லர்; கீழிருந்தும் கீழல்லார் கீழல்லர்.
செய் என்றுஞ் சொல்ல வேண்டாம்; செய்யாதே என்றுஞ் சொல்ல வேண்டாம். எமக்கு எல்லஞ் சரி தானே.
வேலை தான் கடவுள். தன்னைத்தான் அறிந்தவர்கள்தான் எமக்குச்னேகிதர். காவியுடுத்துத் தாடியும் விட்டிருப்பதால் ஒன்றுமில்லை. இப்படியானவர்களுள்ளும் சிலர் உளர்.
யாம் செய்வதெல்லாம் உலகின் நலனுக்காகும். எமக்கு மண்ணுதிபூத மில்லை .
சுவாமியின் கால் முறிவிஞல் அவர்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருத்தல். சென்று பார்த்தபோது கூறியன - " இது ஒரு வரப்பிரசாதம்; கருமம் அநுபவித்தே முடியும். எனக்கும் இந்த உடம்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை .”
உபவாசமிருந்து, தியானஞ் செய்து நாள் முழுவதும் தவஞ்செய்து அல்லவா யாகஞ் செய்ய வேண்டும்.
(யாகம்) நல்ல வேலை; சாதுவாக இருந்தாற் போதாது; கோபித்து அடிபிடிப்படவும் வேண்டும். நல்ல பிள்ளையென்று மற்றவர் கூறுவதால் என்ன பயன்.
* கடவுள் எல்லோரும் ஒன்று. வேலைகள் மாத்திரம் வேறு. எக்கச் சக்கமாக ஒரு காரியத்தைச் சாதிக்கப் படாது. ஏனெனில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பிரதிச் செயல் உளது. ஒரு ஆள் ஒழுங்காக இருந்தாற் போதும்.
இவ்வுடம்பை எடுத்த வன்றே பிராரத்தப்படி எல்லாம் நியதியாயிற்று, நோய் எல்லாம் அப்படியே. ஆகவே இது (நோய்) ஏன் வந்தது என்று விசாரிக்க வேண்டியதில்லை. எங்கள் செயல் ஆவது ஒன்றுமில்லை ; எல்லாம் எப்பவோ முடிந்தகாரியம்.
ஆணி உத்தரம்; பலர் இருக்கும் போது கூறியன:- * கடவுள் ஒருவர் இருக்கிருர், அவர் எங்கும் இருக்கிறர் என்ணுேடும் கூட இருக்கிருர், எனக்குச் சகலசம்பத்தும் உண்டு”, என்று பெரியோர் கூறுகிறர்கள். அதை நான் நம்பி வாழ்கிறேன். நீங்களும் அதிகம் படிக்க வேண்டியதில்லை . இதையே சாதனை செய்தாற் போதும்.
இருந்தபடியே இருக்கிருேம், வினை போகும்; வினையோடு வந்த உடல் போகும்; எமக்கென்ன?
ஏன் இந்த நோய் வந்தது என்ற தன் காரணத்தை அறிந்தவர்கள், தொலைகிறது கன்மம், என்று சும்மா இருப்பர். அறியாதார் மிகவும் ஆத்திரமும் துக்கமும் படுவர்,
புத்தர் “எல்லாருங் கர்மத்தை அனுபவிக்கத் தான் வேண்டும்.” என்கிருர், கிறிஸ்து:- "பாவமன்னிப்பு உண்டு என்கிறர்,
யாகத்தைப் பயபக்தியாகச் செய்யுங்கள்; அறிவு உண்டாகும்,
எப்போதும் தன்னை உள்ளே ஆராய்ந்து கொள்ள வேண்டும். வேலையை வேலைக்காகச் செய்யவேண்டும். இலாப நட்டத்தைக் கவனிக்க வேண்டியதில்லை . மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்கவும் படாது. மற்றவர் மாறுபாடாக நினைக்க உதவவும் கூடாது.
எல்லாரோடும் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதே சமயவாழ்வு.
நாங்கள் இனிச் சும்மா இருப்போம். நீங்கள் தான் இனி நன்றகத் தவஞ்செய்யுங்கள்.
அன்பினுல் அடிக்கவேண்டும்.
ஒருவன் மழையில் நனையாமல் போகத் தெண்டிப்பதுபோல, உலகில் நடமாட வேண்டும். ஒன்றிலும் முட்டாமல் வாழ வேண்டும். மயக்கவுணர்வுகளை உதறிவிடு. உன்னில் நீ நிலை. உன்னை நீ நம்பு.
பொய்யும் மெய்யும் புகல வைத்தாய். இதுவும் உன்றன் பேரருளே !
ஒரு பொல்லாப்புமில்லை ; கொலையும் இறைவன் ஐந்தொழில்களில் ஒன்று. அதை யானும் செய்யேன். நீயும் செய்யாய். ஆணுல், அஃதில்லாமல் உலகம் இயங்காது. அதனைப் போலவே ஒரு பொல்லாப்பும் இங்கில்லை.
எங்களிடத்தில் ஒரு குச்சி இருக்கிறது. வேண்டுமாயின் கொளுத்திக் கொள்ளலாம்.
உண்மையைத் தேடி வருகிறவருக்குச் சொல்ல வேண்டியது: "வாரும், ஆறுதலாக அமரும்; நினைத் துப்பாரும்; உண்மை (கடவுள்) உம்மோடு கூட இருப்பதை அறிவீர்”.
நினைத்தாற்ருன் காணலாம்; நினையாது விட்டால் வராது. எது எது வேண்டுமென்று நினைக்கி நீர்களோ அவற்றை எப்போதாவது அடைந்தே திருவீர்.
கும்பிட்டுக் கொண்டு பிச்சை ஏற்று உண்ணலாம் ஆளுல் சாமிவேடம் போட்டுக்கொண்டு சாமியாருக்குக் கொடு என்று உண்பது பெரும் பிழை. பித்தரெல்லாரும் பிச்சையேற்றனர். தருமம் பெற்றிலர். பலன் கருதி, பணங்கருதிச் சாமிமாரை அடுக்குங் குலங்கள் சில தேய்ந்து தேய்ந்து குலமே கில்லாது அழிந்து விட்டதாம்.
எல்லா உலகமும் இறைவன் வடிவே. எல்லாரும் உள்ளத்தில் சிவதொண்டராக வேண்டும்; வெளிக்கு எப்படியும் இருக்கலாம்.
நாங்கள் எங்குமிருக்கிருேம். நாமே எல்லாரும். எல்லாரும் நாமே. அன்பாகச் செய்தால் சர்வ சமாதானமும் இங்கே உன்டாகும். எல்லாவற்றையும் அடக்கிய பெரும் பொருள் நினைத்தால் எல்லாம் நடக்கும். ஒன்றிலும் முட்டாமல் அன்பாக நினைத்துக் கருமஞ் செய். ஞானமும் ஒரு மயக்கம். ஒன்றுமில்லை என்று சும்மா இருத்தலே சுகம்.
* இங்கிலாந்தில் பேச வேண்டியது:- *முன்பு நாங்கள் ஒன்ருகவே இருந்தோம்தற் போது சிலகாலம் வேறுபோல் தோன்றிளுேம். ஆணுல் இனியும் ஒன்றுதான்?.
எவர் வந்து எப்படி ஆட்டிகுலும் அது என்றும் இரகசியமாகத்தான் இருக்கும். பற்றில்லாமல் முயற்சி செய்யவேண்டும். மனம் நல்லாக இருந்தாற்போதும். அவ்வளவுதான் வாழ்வு.
* சமயத் தொண்டுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பியவர்களுக்காகச் சொல்லியவை. ஒருமைப்பாடே வலிமையுடைத்து. நானே நீ நீயே நான்,
ஒவ்வொரு மனிதனுக்கும் காமம், குரோதம் மோகம், பகை ஆகிய யாவும் உண்டு அற்றேல் அவன் மனிதனல்லவே. தான்தானுக இருக்க, கண் ஒரு இடம் சென்று திரும்பும் காது வேறிடம் சென்று திரும்பும். எல்லாம் தத்தம் வேலையாம் எங்கள் பாட்டில் இருப்போம்; வேலையை வேலைக்காகச் செய். அன்புக்காக அன்பு செய்
எல்லாம் ஒன்று பிரபஞ்சம் வேற்றுமையாகவும் துன்பமாகவுமி தோன்றும் ஆணுல் எல்லாமி ஒன்று
தியர்னம் என்ருல் சும்மா இருத்தல் ஒன்றைப் பற்றி நினைத்துக் கொண்டிருத்தல் அல்ல.
பொருமையும் கோபமும் நல்ல தொழிலாளிகள் யாவரும் அவரவர் அளவில் பெரியோரே. கடவுள் பெருங் கள்வன்; உள்ளங்கவர் கள்வன் யாத்திரை செய்யச் சொல்கிருன் அங்கே போ. கதிர்காமத்திற்குப் போ. காசிக்குப் போ என்று ஏமாற்றுகிறர்.
அது பரிசுத்தமாகவுள்ளது, ஒழுங்குகளும் மாயை சம்பந்தமானவையே.
எந்த ஒரு மனிதனுக்கோ, மனுஷிக்கோ தனி மகத்துவம் அளிக்காதே. எல்லா மகத்துவமும் இறைவனிடமிருந்தே வருகிறது.
உலகம் முழுவதும் பொய்யும் களவுமாக இருக்கின்றதே என்று எண்ணி, நீ பொய் பேசுதலும் களவு செய்தலும் கூடாது. நீ சரியாக நடப்பதற்கு உனக்குச் சுதந்திரம் உண்டு. அதுவே உன் தருமம் தரும நெறியிற் பிசகாதே
மனிதன் வாழ்வதற்கு வீடுகள் எவ்வண்ணம் தேவைப்படுகின்றனவோ அவ்வண்ணமே சமயங்க ளும் மனிதன் வளர்ச்சிக்கு உபயோகமான படிகளாகும்.
கடவுளும் யானும் பிரிப்பின்றி உள்ளவர்கள். ஆகவே இவ்வுடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது அவர் உறையுங் கோவிலாகும்.
சும்மா இருப்பவர்களே உலகின் உண்மையான புரவலர் ஆவர்.
கடவுள் உன்னுள் உறைகின்ருர் என்றுணரும் வரையுமே அறியாமை நிலைக்கின்றது.
உடல் உன் வசிப்பிடம். நீ இறைவனின் வசிப்பிடம்.
மனிதனின் உடலில் உறையும் ஒரு சீவனே, அதனை நடக்கவும், உண்ணவும், தூங்கவும் இயக்குகின்றது. அவ்வாறே உலகின் இயக்கங்கள் யாவும் பரம்பொருள் ஒருவரின் விளையாட்டேயாகும்.
நாம் அது; அதுவாதல் அன்று.
இன்பமும் துன்பமும் மனத்திலேயே உள்ளன.
வெறுங்கையுடன் உலகிலே தோன்றினுய், அழைப்பு வந்தவுடன் வெறுங்கையுடனேயே அதனைவிட்டுச் செல்லவேண்டும்.
இப்பிறப்பிலேயே விடுதலையடைய வேண்டுமாயின், உன் மனத்தைச் சுடலையாக்கி, எழுகின்ற விருப்பங்கள் யாவற் ைறயும் அச்சுடலையிலே எரித்துவிடு.
இறைவன் அருளால் உனக்களிக்கப்பட்ட விவேகத்தை உன் ஆணவம் கெடுக்க நீ இடங்கொடாதே.
சமுத்திரத்தில் அலைகள் எழுவதுபோல் மனத்தில் எண்ண அலைகள் எழும். எழும் எண்ணங்களை அடக் கியாளுதலே யோகம்; யோகம் என்ருல் ஒன்ருதல் என்பர் பெரியோர். எல்லா விரல்களும் ஒன்று சேர்ந்தாற்ருன் ஒரு பொருளை வசதியாக எடுக்க ல்ாம். அதுபோல இறைவனை அடைதற்கு மனம் ஒருமைப்படவேண்டும். இது இலகுவான காரியமல்ல, ஒருநாளிலோ அன்றேல் ஒராண்டிலோ செய்து முடிக்கக்கூடிய காரியமல்ல. இடையரு முயற்சியிஞலேயே எண்ணங்களை ஒருவாறு மட்டுப் படுத்தலாம். இந்தச் சித்தியைப்பெற்றுவிட்டால் அடங்காத மனத்தையும் இறுதியில் முற்றக அடக்கி விடலாம். இதுவே மாபெரும் வெற்றியாகும்.
புத்தகங்களுள்ளும் படிப்பினுள்ளும் சத்தியத்தையடக்கிவிட முடியாது. உன்னை உன்னுல் அறி. இதற்கு மேலே அறிவதற்கு ஒன்றுமில்லை .
பார்ப்பதெல்லாம் நீ என்னும் உண்மையில் உறைத்து நில்
எவருக்குங் கடமைப்படாதே. தகுதியற்றவர்களைப் பார்த்து இரங்காதே; அது உனக்குக் கேடுவிளைக்கும்.
நினைப்பது என்ன என்று கேட்டவுடன் கூறக் கூடிய எண்ணங்களையே நினை.
தேடிக்குவித்த செல்வம் எல்லாவற்றையும் அநுபவித்து முடிக்கும் வரையும் யாரால் வாழமுடியும்? வாழப்போதியதிருந்தால் போதுமி.
ஆமை ஆயிரம் முட்டைகள் இட்டபின்னும் அமைதியாக அடங்கியிருக்கும். கோழி ஒரு முட்டையிட்டதும் கொக்கரிக்கும். ஆமையைப்போலிரு. கோழியைப்போல நடவாதே.
வரவுக்கதிகஞ் செலவு செய்யாதே, தொல்லைகளின்றி வாழ விரும்புவாயாயின் உன் தேவைகளேச் சுருக்கிக்கொள்.
மன அடக்கமும், அடியாருறவும் அறிஞர் நட்புமே துன்பந் துடைக்கும் நெறியாகும்.
யோகமும் அறியேன், சமய சாதனைகளும் அறியேன் ஒழுக்கம் ஒன்றையே அறிவேன். இதுவே எல்லாந் தரும்.
மனமும் ஆவியும் இறைவளுேடு ஒன்ருதலே சமாதியாகும்.
அமைதியாகவிரு கடவுள் வரினும் அவருக்கும் ஓர் ஆசனத்தைக் கொடுத்துவிட்டுச் சும்மாயிரு. என்னையே யான் உன்னிலும் வேறு வடிவில் காண்கிறேன்.
கத்தரிக் கன்றுகளை நாட்டினுல் கத்தரிக்காய் களையே பெறலாம். நன்மையை விதைத்தால் நன்மையையே அறுவடை செய்வாய் தீமையை விதைத்தால் தீமையையே நீ அறுவடை செய்வாய். மகான்களின் பரிசமும் ஒருவருக்கு நன்மையைத் தரும்
உன் இயல்புக்குத்தக உன் விருந்தினரை உபசரி, அநாதியாகவே உலகம் தோற்றமும் ஒடுக்கமும் உள்து.
குறித்த ஓரிடத்திலோ அற்றேல் குறித்தவோர் நெறியிலோ கடவுளைப் பார்க்க முயலாதே, கடவுள் யாவற்றுள்ளும் அதற்கப்பாலும் உள்ளவர்.
அவனருளாலன்றி ஓரணுவும் அசைவதில்லை என்பதை உணர்ந்தவன்றே நீ சத்தியத்தை அனு
அறிவதற்கொன்றும் இல்லை. சும்மா இரு,
ஒவ்வொன்றினுள்ளும் தெய்வத்தைக் காண்; நீ தெய்வத்துள்; தெய்வம் உன்னுள்.
மற்றவர்களைத் தேடி ஓடவேண்டியதில்லை . பெரியவர் என்றும் சிறியவர் என்றும் பேதம் வேண்டாம். எல்லாரும் உண்மைப் பொருளின் பல வடி வங்களேயாம்.
கருமஞ் செய்பவனே கடவுளை இடைவிடாது தியானிப்பவன்.
கைகளின் வேலையைக் கால்கள் செய்யமாட்டா, கால்கள் செய்யும் வேலையை வாய் செய்ய முடியாது. அப்படியாயின் உலகில் யார் பெரியர்? யார் சிறியர்? எல்லோரும் இன்றியமையாதவர்களேயாம்.
உன்னுள் உறையும் பரம்பொருளைக் கண்டனுப விக்க உறுதியான உடலும் தூய்மையான உளமும் வேண்டும் .
உனக்குச் சரியாக நீயிரு. மற்றவர்களைத் திருப்திப்படுத்துதற்கோ, அதிகாரத்துக்குப் பயப் பட்டோ உனது ஒழுக்கத்தை மாற்ருதே.
மரணமும் ஒரு விளையாட்டே.
உன் செயல்களின் பயனையே நீ பெறுவாய்; மற்றெருவருக்குப் பதிலாக நீ செயலர்ற்ற முடி யாது.
எவரிடத்தும் யாசிக்காதே. எதனிடத்தும் விருப்பும் வேண்டாம்; வெறுப்பும் வேண்டாம்.
கொஞ்சங் கொஞ்சமாக மனத்தினை அடக்கு, அதனை இறைவழியில் செலுத்தித் தியான சாதனை பழகுக.
மகான்கள் சக வாசத்தினுல் பெறும் அனுபவம் நூல்களை வாசித்துப் பெறுவதினும் சாலச் சிறந்தது. ஆன்மாவுக்கு நீதி, நேர்மை, வீரம், சத்தியம் ஆகியவைகளே அணிகலன்கள்.
துட்டர்கள் பயங்காரணமாகவும், நல்லவர்கள் அன்புகாரணமாகவும் கீழ்ப்பணிவார்கள்.
குறைகளை வெளிப்படுத்துவதனுல் மட்டும் அவற்றை இல்லாமற்செய்ய முடியாது. நன்மை, நேர்மை, அன்பு முதலியவற்றில் நாட்டத்தை வைக்கச் செய்வதணுலேயே அவை மறைந்த பூழியும்.
எல்லாருள்ளும் யான் இருக்கிறேன் என்பதை எல்லாரும் விளங்க முடியாது.
உலகத்தையோ, மற்றவர்களையோ திருத்துதற்கு உன்ஞல் முடியாது, உன்னையே நீ திருத்து.
உருவமுடையன யாவும் ஒழிந்து விடும். மனமும் உருவமுடையதாகையால் அதுவும் ஒழிந்தேயாகவேண்டும்,
மனவுறுதியுடையான் மனங் கலங்குவதில்லை மனக் கலக்க மடைபவன் மெய்ப்பொருள் காண்ட த ரிஆ,
கடவுளைக் காண வேண்டும் என்று தானும் முயற்சி செய்யவேண்டாம் உன் ஒழுக்கத்திற் கவனமாயிருப்பாய்ாயின் அவ்வளவுமே போதும். மனிதன் துன்பமுறவேண்டும். துன்பமுறுதலே சிறந்த பரிகாரம்
ஆன்மீக தாகம் இல்லாருடன் உறவாடாதே, பாவபுண்ணியங்களுக்கு இறைவன் காரண கர்த்தாவல்லர்,
கற்றல் என்பதன் பொருள் அஞ்ஞானம் என்னும் திரையை அகற்றுதலேயாம்.
உடல் உள்ள வரையும் உணவு வேண்டும். அதற்கு உழைப்பு அவசியம். ஆகவே வேலையைச் செய்தல் வேண்டும். பின் பார்த்து, விட்ட விடாத, விட்டுவிடாத நிலையையறியலாம். தென்னைகள் மேல்நோக்கி நேராக வளர்வது போல மேலே போவது தான் இயல்பு.
ஆதாயமாக்குவதும் ஏதுமில்லை. இழந்துபோவதும் ஏதுமில்லை. ஒன்றும் நடக்கவில்லை. அதுமாற்ற முளதும் அதேநேரத்தில் மாற்றமற்றதும் ஆகும்.
உடம்பினை ஒம்புக, பிறர் பொருள்களை நெருப்பெனத் தள்ளு.
. உலகம் ஆசை வயத்தது. உலகில் நிகழும் இன்ப துன்பங்களை மெய்யென எண்ணி வாழிபவர்கள் நீங்கள். அவற்றையும் இவ்வுடலையும் மெய்யெனக் கருதாது வாழ்பவன் யான், இதுவே எனக்கும் உங்களுக்கும் உள்ள வேற்றுமையாகும். இந்த எண்ணத்தோடு பொருந்திய வண்ணம் பூமியில் வாழ்கின்றேன்.
மனிதன் நித்திய வஸ்துவில் உறைகின்றன்.
யோகமும் ஒருவகையான வெறியாகும்.
உன்னை நீ எங்கும் பார்க்கும்போது பரதரிசனமே பார்க்கின்ருய். பார்த்தவிட மெங்கும் நீயேயாயின் அதுவே இறை தரிசனமென்றுணர்க.
அகத்தினும் புறத்தினும் ஆண்டவனைக் காண்பவனே சமர்த்தன்.
நல்வினை தீவினைகளின் பயன்களை அனுபவிக்க அநுகூலமாய கருவியே உடல். அதனை நன்றக ஒம்பி நற்செய்கைகளில் ஈடுபடுக ஆயின் எதி ஜம் தொட்டுக் கொள்ளாதே. ச ாட்சியாக விரு. தினத்தை இறைவனிலேயே இலயிக்கச் செய்வாயாக. “பதியே பசுவாகவும் பாசமாகவும் ஆயஆ’ என்று செல்லப்பர் கூறியிருக்கிருர்,
எல்லையற்ற பரம் பொருள் எவ்வண்ணம் எல்லையுள் rதாகக் காணப்படுகிறது என்பதை எவரும் இற்றைவரை விளக்கமாகவும் திருப்தியாகவும் கூறியதில்லை .
எவ்வாறு அலைகள் சமுத்திரத்தினின்றும் வேருகாவோ அவ்வாறே யாவும் இறைவனின் வேருக வில்லை .
(அன்பர் சுவாமிகளின் திருமுன்னர் குடம் கொளுத்தியபோது)
குடம் கொளுத்துவதாலாகும் பயன் என்ன? கடவுளுக்கு ஏதும் தேவையாகாது. எனினும் கட அதனை நீ செய்யத்தான் வேண்டியிருக்கின்றது.
தன்னையறியும் மார்க்கம் மிகவும் செங்குத்தானது. அது நிறுதிட்டமான தேயெனலாம். மிக்வும் கஷ்டமான வேலை. ஆஞல் அதன் உச்சிக்குப்
போய்விட்டால் உண்மையான இன்பத்தை அநுபவிக்கலாம்.
கடவுள் ஏகனுமல்லன்; அநேகனுமல்லன்.
ன்றே வரினும் தீதே வரினும் யான் ஒன்ைல்லே . அனைத்துமி நின்செயலே.
சுட்டிற நீத பரமீபொருள் சுட்டியறியப்படும். உலகம் முழுவதையும் அடக்கி அதற்கப்பாலும்.
(தலயாத்திரை செய்து மீண்டு சுவாமி தரிசனத்துக்கு ‘வ்ந்திருக்கும் சில அன்பர்களுக்கு)
கோயில் தோறும் செல்லும்போதெல்லாம் உங்களுள்ளே கடவுளையும் கொண்டு சென்றீர்கள் தானே. யாத்திரையாற் பழுதொன்றுமில்லை. இறைவனின் சில அம்சங்களை அகத்திற் பதியச் செய்வதற்காகவே யாத்திரை செய்கிறர்கள். ஆணுல் இறைவன் நம்முள்ளே இருக்கிறர் என்பதை மறவ்ாதீர்.
நாங்கள் (சுவாமிகளும் வேருேர் அன்பரும் ) ரிஷிகேசம் வரை சென்ருேம். அங்குள்ள மக்களும் இங்குள்ள மக்களைப்போலவே வாழ்கிறர்கள். எல்லோரும் ஒரே தன்மையரே.
நீங்கள் என்னைக் காணக்கூடியதாக விருக்கி றது. இறைவன் அறியமுடியாதவர்; அவரின் அரும் பெரும் அடியார்கள் மூலமே அவர் மகிமையை அறியலாம். சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வ்து எங்கள் கடமை. அப்பர் சுவாமிகளோடு சம்பந்தமூர்த்தி சுவாமிகளின் சந்திப்பு எவ்வளவு திறம்படப் பெரியபுராணத்தில் வர்ணிக்கப்பட்டு இருக்கிறது.
(ஒர் , அன்பருக்கு) இவ்வறையில் எத்தனைபேர் இருக்கிறர்கள் என்று சொல். (அன்பர் எண்ணு கிருர்) ஒன்று, இரண்டு. என்று எண்ணிக் கணக்கிட்டுக் கூறுகிருர், அஃதெப்படி ஆகும். எல்லாருள்ளும் இறைவன் ஒருவரே இருக்கிறர். ஆகவே இங்கே ஒருவர்தான் உளர். எங்கள் அறியாமையிஞலேயேயாம் பல வடிவங்களைக் காண்கிருேம்.
தட்டுங்கள் அது திறக்கும். கடவுள் உங்களு டன் எப்பொழுதும் உளர். எவராலும், அவரை உங்களிடமிருந்து பிரிக்க முடியாது.
வேலைக்காக வேலையைச் செய். அன்புக்காக அன்பு செய். நல்லோர் அல்லோர் ஆகிய பல வகையான யாத்திரீகர்களும் இவ்வுலகமாகிய பெருங்கோயிலுக்கு வருகிறர்கள். மற்றவர் களுடைய குறைகளையும் குற்றங்களையும் கருதாது எங்கள் கடமையாகிய இறை வணக்கத்திலேயேயாம் ஒருமை மன முடையவராகவிருப்போம்.
ஒன்றும் நடக்கவில்லை . நீயும் பிறந்ததில்லை . யானும் பிறந்ததில்லை. இவை எல்லாம் ஒரு கனவேயாகும்.
கடமைக்குத் தகுந்த நடையுடை பாவனையோடு காரியாலயம் செல்லல் வேண்டும். யாவும் ஈஸ்வ ரார்ப்பணமாகவே செய்யப்பட வேண்டும். இவ்வுலகம்.
கனவும் அதைக் காணும் அவ்வளவு நேரத்திற்கு உண்மையேயாகும். அகண்டமான பரம் பொருள் தருமத்துக்கும் அதீதமானது.
இறைவனே எல்லாக் காரியங்களையும் செய்து கொண்டிருக்கிருர். சுப்பிரமணியக் கடவுளின் பன்னிரண்டு கரங்களும் தொழிற்படுகின்றன. ஒவ்வொரு கரமும் ஒவ்வோர் கிருத்தியத்தைச் செய்கின்றது. கடவுள் சிரிக்கின்ருர், அழுகின்ருர், கொல்கின்ருர். அவர் எண்ணற்ற செயல்களைச் செய்கின்றர். அவர் பெருமையை அறிவதும் கஷ்டம் அதனிலும் அரிது அறிந்த பெருமையை எடுத்து எவர்க்கும் விளங்க வைத்தல்.
கேள்; சிந்தி; அறி.
ஞானிகளின் சகவாசத்தினுலும் சாஸ்திரங்களைக் கற்ற அறிவிஞலும் பெற்ற அனுபவ அறிவையே யான் உங்களுக்கு உரைக்கின்றேன் "ஒரு குறைவும் இல்லை’.
எந்த ஆணுக்காயினும் பெண்ணுக்காயினும் ஆணை: யுரிமையை அளிக்காதே. எல்லா ஆணையுரி மைக்கும் ஆண்டவனே அதிகாரி. இது அருமையான உலகம். இவ்வுலகம் பரிசுத்தமானது. பரம இரகசியமானது.
பொற் கொல்லன் தொழில் செய்யும் போது கவனித்திருப்பீர்கள். தங்கத்தில் ஒரு அடியும் பக்கத்திலுள்ள அடிக்கல்லின் மேல் ஒரு அடியுமாக மாறி மாறி அடிக்கிறன் அல்லவா? இரண்டாமடிக்குப் பயனேதுமில்லை யாயினும் முதலாம் அடியைச் செவ்வனேயடித்துப் பவுணைப் பதமாக்க இது மிகவும் அநுகூலமாயிருக்கிறது.
நாங்கள் நித்தியர். தரும நியாயங்களும் எங்களைக் கட்டுப்படுத்தா. ஆயினும் சமூக வாசி இவைகளும் இன்று தேவையேயா?
நாம் நித்தியத்திலே இருக்கிறேம். சமுதாயம் நித்தியத்திலே இருக்கிறது. வேலை நித்தியத்திலே இருக்கிறது.
இடையற முயற்சி தீய கவர்ச்சியை (மருட்சியை) யகற்றும். இடையறத் தியானம் வீட்டுக்கு வழியாகும.
அன்பும் அறிவும் வேண்டும்.
நாம ரூபங்கள் கானல் நீரினையொக்கும். வேலை தடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்த மனிதனும் அதற்குப் பொறுப்பாளியல்ல. நீயும் அந்தச் சுவாமியும் (கூட வந்திருந்த வேருெருவர்) ஒரு வேலை யைத்தான் செய்கிறீர்கள்.
விசுவாசமும் தன்னம்பிக்கையுமுடையவனுக இரு, பரமான்மா வழி நடத்துவதாக விசுவாசமும் அற்புதச் செயல்களாற்ற வல்லது. சந்தேகமே மா பாதகம். பூமா தேவியிடமிருந்து யாம் ஓர் உண்மையைக் கற்க வேண்டும். ஆடு மாடு ப்யன்தரு மரங்கள் ஆகிய நல்லனவற்றையும், பாம்பு, புலி, சிங்கம் ஆகிய தீயனவற்றையும் பூமாதேவி ஒரு மாதிரியே தாங்கிப் பேணி வளர்க்கிருள்.
ஞாலம் யாவர்க்கும் ஒரு பயிற்சிச் சாலையே
இதனை எய்தினுேம்; அதனைச் சாதித்தோம் என எண்ணி மகிழாதீர். யாவும் தாமாகவே நடை பெறுகின்றன.
பகைமையைப் பயிரிடாதே.
அது அப்படி உள்ள காரியம் ,
உணவிஞலாம் பிரயோசனம் யாது? இறை தரிசனமே உண்மை உணவாகும். அஃதாவது இறை
சந்நிதானத்தில் இருத்தல்,
சஞ்சலம் அதிகரிக்கும் போது பொறுப்பு எல்லாவற்றையும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு ஆற்றின் நடுநீரில் மிதப்பதுபோல் மிதந்து செல்க.
உளவு அறிந்து எல்லாம் என் செயலென்றறி வார்க்கு அறிவிலா ஆனந்தம் நல்குவன் யான்,
உன்னை முற்ருக இறைவனிடத்தில் ஒப்புக் கொடுத்துவிட்டு, நீ இறைவனின் திருவருள் இட்ட படி நடப்பாயாக, அப்போது நீ இறைவனின் ஒரு கருவியேயாவாய், இந்நிலையிலேயே எல்லை யில்லாத இன்பம் உளதாகும்.
*ஒரு பொல்லாப்புமில்லை” என்று ஓயாமற் செல்லப்பர் சொல்லுவார். எங்கும் இறைவன் நிறைந் திருக்கையில் பொல்லாப்பிங்கெவ் வண்ணம் எழும், வெளித் தோற்றத்துக்குப் பொல்லாங்கு இருப்பது போல் தோன்றினும் உண்மையில் யாவும் தொழிலாற்றிக்கொண்டேயிருக்கின்றன. ஏன் எதற்காகச் செய்கிறர் என்பது கடவுளுக்குத் தெரியுந்தானே!
யாவற்றையும் சரி செய்து சமஞ கவிருக்கப் பார்த்துக் கொள்ளுகின்ருள்,
வருத்தமும் ஓர் வரப்பிரசாதமாகும். வருத்தம் வரும் போது உடற்பலம் குன்றி ஆணவச் சேட்டை குறைகிறது. இறைவனைப் பற்றிய சிந்தனை அதி கிரிக்கின்றது.
இந்து மதம் ஒரு பரந்த மதமாகும். அதனுள் எல்லா வகையான கோட்பாடுகளையும் காணலாம். நாஸ்திகமும் அதனுள் இடம் பெறுகிறது,
என்னையன்றி ஒன்றுமில்லை. ஆணுல் ஒன்றும் யான ல்லேன்.
(அகத்துள் எழுந்த விஞ) எல்லாம் வல்லவரை யாம் எவ்விதம் அறியலாம்?
மனத்தில் சாந்தத்தை வளர்த்து வர வர எல்லாம் வல்லவர் தானுகவே அதனுள் துலங்குவார். கடவுள் எங்குளார்? கடவுள் இங்கே இருக்கிருர். எங்களில் வேருக அவர் இல்லை. (இறைவனின் பல குணங்களைக் கூறல்) அவர் இவற்றிற்கெல்லாம் மேலானவர். இவ்வுலகத்தினுள் அவரை அடக்க முடியாது. கடவுள் என்னும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே ஒற்றுமையும் வேற்றுமையும் அமைந்துள்ளன.
உலகம் பரம இரகசியமானது. அதே வேளையில் பரிசுத்தமுமானது. இடியப்பம் போன்றுதொடர்பும் சிக்கலுமுளது. அதனை விளக்க முடிய்ாது. ஆயின் முழுப்படியாக உணரக் கூடியது. இழந்து போவது யாதுமில்லை. அறியாமையே எங்களை இன்ப துன்பங்களுள் மாட்டி விடுகின்றது. உலகம் இடையருத மாற்ற முறுகின்றது. ஆயின் இறைவணுே என்றும் மாற்ற முருதவர்.
கடவுளாகிய சாகரத்தின் மீது தோன்றும் அலைகளைப் போன்றதே படைப்பெல்லாம். சாகரத்தினுள் வாழும் மீன்களைப் போலவே உயிர்கள் உலவி வாழுகின்றன. அவர்கள் வெளியில் செல்ல முடியாது. ஓர் துகள் மண்ணிற் கூட இறைவன் நிரம்பி இருக்கிறர். எவராலும் அதனை அளந்தறிய முடியாது.
இழப்பதுமில்லை, ஆதாயமாக்குவதுமில்லை என் பதனை நன்கு உணர்ந்து கொண்ட பின் மனிதன் துன்பங்களைத் துணிச்சலுடன் தாங்கிக் கொள்ள
மலைச் சிகரத்தில் நின்ருல் இறைவனையன்றி வேறென்றையும் யாம் காண்பதில்லை. அடி வாரத்தில் பலவித பொய்த் தோற்றங்களையே (முரண் பட்ட வாழ்க்கை நிலைகளையே) காணலாம்.
நன்மை தீமையாகிய இரண்டுடனும் ஒட்டியும் ஒட்டாமலும் இறைவன் இருப்பதைப்போல யாமும் உலகில் முட்டாமல் வாழவேண்டும்.
நன்மை கடைப் பிடி. ஊரொப் பன செய். யாகா வாராயினும் நாகாக்க .
மலைச் சிகரத்தில் இருந்து எழும் நதிகளைப் போலவே மக்களும் பஞ்சபூதங்களும் உள. நதிகள் சமுத்திரத்தில் கலந்து மறைவன போன்றே இறுதியில் யாவரும் ஈசனில் கலந்து ஒன்ருகி விடுகின்றனர்,
(சுவாமியிடம் வினவிய வின) இறைவனின் திருவுள்ளத்தை மனிதன் எவ்விதம் அறிய முடியும்? சில வேளைகளில் அது மனத்தில் தெளிவாகப் பிரதிபலிக்கும். மகான்களின் வாக்குகளில் சில காலங்களில் வெளிவரும், மற்ற நேரமெல்லாம் அது மறைமுகமாகவே இருக்கும்.
இறைவனின் பஞ்ச கிருத்தியங்களில் மறைத்தலும் ஒன்ருகும். தன் கிருத்தியத்தின் பொருட்டு அவர் அதனை மறைத் திருப்பர். ஆயினும் எவருக்கrவது தீங்கு இல்லாமலே இறைவன் தொழிலாற்றுவார். இறைவன் எவருக்கும் முரண்பாடு காட்டுவ தில்லை ,
இறைவனிடமிருந்து உதித்த படியால் இவ்வுலகும் இறைவனேயாகும். 'எனக்கு எத்தெய்வத்தின் உதவியும் தேவையாகாது. கடவுள் இருக்கிருர், நாங்கள் இருக்கிருேம். கடவுளின் அம்சமாகவே யான் பரிணமித்துள்ளேன்."
அவரவர் செய்த பழைய வினைக்குத் தகவே யாவர்க்கும் யாவும் சரியாக அளந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த நியதி மாற்ற முடியாதது. இதனை நன்குணர்ந்து கொண்டு தனக்குப் பொருந்திய வண்ணம் ஒருவன் வாழக் கடவன். அப்பொழுது தான் அவன் மகிழ்ச்சியாக வாழலாம். இதனை நன்ருக அகத்திற் பதியச் செய்த ஒருவன் தவறி இன்ப துன்பங்களுள் சிக்கிக்கொண்டாணுயினும் விரைவில் சமத்துவ மனநிலைக்குத் திரும்பி விடுவன்.
தினந்தோறும் காலையிலும் மாலையிலும் நித்திரைக்குப் போகு முன்பும் பத்து நிமிடங்களாவது சிவ என்று செபித்துத் தியானத்தமர்தல் வேண்டும். வாழ்க்கை யொழுங்குகள் தாமாகவே சரியாகும். நியாயமான எல்லா வேண்டுகோள்களுக்குழு இறைவன் செவி சாய்ப்பான் என்பது திண்ணம். நன்மையும் தீமையும் யாவிலுமுள.
அநாதிகாலந்தொட்டு உலகம் இறைவனின் விளையாட்டு மேடையாக விளங்குகிறது. உப நிட தங்களின் முடிந்த முடிபும் இதுவே, யாவும் மோனத் திலிருந்தே தோன்றுகின்றன.
மனத் தூய்மையே யாவற்றிலும் மேலாயது. ஏனைய யாவும் வெறும் தொழிலே.
அண்டம் யாவும் சிவதொண்டு ஆற்றுகின் றன வென்றும் யாவரும் அறிவு சொரூபம் என்றும் இருடிகள் அறுதியிட்டுக் கூறியிருக்கின்றனர்.
பிராரத்த கன்மத்தின் ப்டி காரியங்கள் நடை பெறுகின்றன. அவை ஆன்மாவைத் தாக்கமாட்டா. ஆஞல் பழக்கத்திற்கடிமையான மனிதன் செயல்களிஞல் எழும் இன்ப துன்பங்க ளுக்காளாகி அவையே தாமெனத் தடுமாறி விளங்கித் தத்தளிக்கிறான்.
துன்பங்களை எதிர் நோக்கி முன்னதாகவே தயார் செய்ய முயலாதே. வரவரப் பார்.
துன்பங்களும் வாழ்க்கை ஒழுங்கினுள் அடங்கும் என் அறிதல் வேண்டும்.
இறைவன் என்றும் உங்களோடுறைகின்ருர், என்பதே யான் உங்களுக்குச் சொல்லுகின்ற பெரும் புதினமாகும்.
போகும் இடங்களில் முட்கள் இருக்குமாயின், எங்கும் மூடிக்கொள்ள முடியாது. தான் தன்னைத் தப்பவைத்துக் கொள்வதற்குக் கால்களில் செருப்பணிந்து செல்லவேண்டியதேயாகும்.
தீய எண்ணம் எழுந்த உடனேயே தடு அதன் வழியே சென்று பாவம் ஈட்டியபின் பக்குவப்படட் டும் என்று விடாதே. இது கெட்டவழி. தீப்பற்றிய வீட்டை உடனே அணைக்க வேண்டும். பற்றினது தானே என்று விட்டுவிடலாமா?
சரீரம் மாயையின் வடிவம். ஆணவத்திற்குச் சரீரம். ஆகிய மாயை உதவுகிறது. பெருங் கணக்குகளை மனத்தாற் செய்வதிலும் எழுதிச் செய்தல் சுலபம். அதுபோலக் காயத்தால் வழிபடுதல் மன வழிபாட்டினும் சுலபமான அது. ஆகவே, ஆரம்பத் தில் காயவழிபாடு செய்தல் முறையாகும். முதிர முதிர மனவழிபாடாற்றலாம்.
ஒருவருக்குத் தேவையான யாவும் அவர் பிறப்பதற்கு முன்னரேயே உலகில் படைக்கப்பட் டுள்ளன.
நீ என்னிற் கோபித்தாலும் யான் உன்னிற் கோபிக்கக் கூடாது. ஏனுகில் நீ ஆன்மா; அதில் எப்படிக் கோபிக்கலாம்?
சுகதுக்கங்கள் வந்துபோகும். நிலையானவை யல்ல.
ஒவ்வொரு சிரிப்பிலும் ஒரு துக்கம் இருக்கிறது.
கடவுள் உன்னில் இல்லாவிட்டால் உன்னுல் மல சலங் கழிக்க முடியாது.
ஒருவன் ' பல்லை உடைத்துப்போடுவேன்" என்று ஏசினும், “வா தம்பி இரு” என்று உபசரிக்கினும் இரண்டினுலும் எவ்வித மனவசைவுமின்றி இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
நாங்கள் பிறந்தது கடவுளை அறியவே. கலியாணம் முடிக்க்வும் வீடு கட்டவும் அல்ல; ஆணுல் இவை அதற்குச் சம்பந்தமாக வந்தவையே.
எல்லாஞ் செய்கிறர்கள். ஆணுல் சுகதுக்கமின்றி இருக்கத் தெரியாது.
* அங்கே ஒழுக்கமும் ஒழுக்கவீனமும் இல்லை . ஒருவன் களவெடுக்காமல், பொய் பேசாமல் நேர்மையாகச் சீவிக்கும்போது ஒரு விடயத்தைப் பற்றி அவனுக்கு அங்கே உன்னும், அதுதான் நீதி. அதை நேரே சொல்ல வேண்டும். முகமன் பார்க்கிறதனல் அதைப் பழுதாக்கிப் போடுகிறன் .
குளிர் என்று நினைத்தால் குளிரும். சூடென்று நினைத்தாற் சுடும். கெட்டவனென்று நினைத்தாற் கெட்டவணுகத் தோன்றும். நல்லவனென்று நினைத்தால் நல்லவனுகத் தோன்றும். இது மாயையின் குணம்.
* மோன நிலையில்
கடவுள் வேலை கொடுத்துக் கொண்டேயிருக்கிறர். சும்மா இருக்க முடியாது. ஆனபடியாற்ருன் பேசுகிருர்கள். வேலை கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. சுவர் போல இருக்க வேண்டும்.
தனக்குத் தான் பிழையில் லாமல் சரியாக நடந்து கொள்ள வேண்டும்.
வேறு பொருள்களிற் பற்று வைக்கும் பிரமச்சாரியும் சமுசாரியேயாம்.
யான் சாகமாட்டேன். இது திண்ணம். ஒருவனைக் கூடாதவன் என்று நினைக்கும் நினைவே நினைப்பவனுக்கு நஞ்சாகும்.
ஒவ்வொருவரும் தத்தம் கூட்டிலே வளரவேண்டும். நேற்று இருந்த ஆள்தான் இன்றைக்குமிருக்கிறன். நாளைக்குமிவன் தான் இருப்பவன். சிரிக்கும் போதும் அழும் போதும் ஒரே ஆள்தான்,
சும்மாவிருக்க முடியாமையால் ஏதாவது வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பெரிய வேலை, சிறிய வேலை என்று வேறுபடுத்திக் கூற முடியாது.
எங்களுக்குத் துவக்க மென்பதில்லை . கடவுளுக்கும் துவக்க மென்பதும் முடிவென்பதும் இல்லை. எங்களைக் கருமம் கட்டுப்படுத்தாது. முன் செய்த கருமம் இப்போது எம்மைக் கட்டுப்படுத்துமாயின் அதற்கு முன் செய்த கருமமும் அப்படியே செய்யும். ஆகவே துவக்கத்தில் கருமத்துக்குக் காரணம் அறிய முடியாது. எனவே யாவும் கடவுளின் ஆணையால் நடக்கின்றன. நினைவு பிரிவது தான் கவலே. சண்டையிற் சேராமல் சாட்சியாய் நின்று பார்க்க் வேண்டும், மனத்திற்கு ஏதாவதொன்றைக் கவ்விக் கொள்ளக் கொடுக்க வேண்டும்.
இறைவா! ஆன்ம ஈ வே நாம் என்ற்றியும் அறிவை அருள் வாயாக.
மனத்தை எண்ணங்களிற் சிதற விடாமல் அடக்கிப் பழகி வர மனம் ஆன்மாவில் ஒடுங்கிவிடும். இதன் பின்வரும் எண்ணங்கள் ஆன்மசக்தியிலிருந்து வெளிப்படும். ஒரு மாம் பழம் வேண்டுமென்ற எண்ணம் வருமாகில் உடனே மாம்பழம் கிடைக்கும். காசு தேவை என்ற நினைவு தோன்றினுல் உடனே காசு கிடைக்கும். இவைகளைத் தான் சித்திகள் என்று சொல்வார்கள்
இவற்றில் அழுந்தாமல் இருக்க வேண்டும். இவ் வகையான சித்திகளில் ஒருவன் அழுந்துவாளுகில் அவன், குடியாலும், கூத்தியாலும் தன்னுடைய செல்வத்தைச் செலவழித்த ஒரு பணக்காரனைப் போல, சித்திகளை இழந்துவிடுவான்.
இச் சித்திகளை ஆன்ம ஈடேற்றத்திலேயே செலவழிக்க வேண்டும் எதிற் செலவழிக்க வேண்டு மென்பது ஆத்மசாதகனுக்குத் தெரியும். இதைத் தான் தவமென்பர்.
பகையுமாகாது; சிநேகிதமுமாகாது; தன்ணுேடு தான். பேசுவதுபோல் பேச வேண்டும்.
கவலை வருமுன் நிற்பாட்டிக்கொள்ள வேண்டும் , கவலையை வரவிட்டால் அதனுேடு சுழலத்தான் வேண்டும். கவலை வருமுன் அதைத் தடுக்கிறது பொட்டுக்குள்ளாலே நாய் தலை வத்தவுடன் அதனை அடித்தது போலிருக்கும்.
கடவுளை அடைவ ைத இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் வேலையைச் செய்துகொண்டு ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்
ஒரு விடயத்தை நினைத்தால் மனைவி கதைகளோடயே அதற்குப் பதில் கூறுவாள். காகமீ மூல மாய் மறுமொழி வரும்; பல்லி மூலமாகவும் மறு மொழி வரும். காலிலே கல்லடித்து அதற்கு மறு மொழி வரும். கடவுளை அவனருளால் கும்பி, வேண்டும்.
எங்குமாயிருக்கிற கடவுளை எப்படிக் கும்பிட லாம்? தனக்குப் பலத்துக்காகவே மனிதன் ஒரு அளவிற் கும்பிடுகிறன், தனக்குப் பலம் என்ற எண்ணத்தோடேயே ஒருவன் கையிற் பொல்லுடன் செல்கிருன் ஆணுல் அப்பலம் அவனிடத்திலே தான் உளது. பொல்லில் அல்ல.
உலகம் ஒரு கனவாகும். நேற்று நடந்த முழு வதையும் ஒருவர் இன்றைக்குத் திரட்டிக் காட்ட முடியாது அது ஒரு கனவு போலவுளது. அப்படியே இன்று நடப்பதும் நாளைக்கு இருக்கும். ஆகவே கனவைக் காண்பவன்தான் ஒரு உண்மைப் பொருள்.
நாங்கள் என்றுமிருக்கின்ருேம். எங்களுக்கு ஆதியு மந்தமுமில்லை . பகலிரவில்லை. சுகதுக்கமில்லை, இறப்புப் பிறப்பில்லை. ஆயின், பாவ புண்ணியமிருக்கின்றன வென்பதும் கடவுள் இருக்கிருரென்பதும் எல்லாம் விளையாட்டுக்கு ஆகும். இவைகளெல்லாம் ஒரு சங்கற்பம் *
இந்த உலகமெல்லாம் ஒரு கானல் நீராகும். சாக ஆயத்தமானுல் அதற்காகத் தலையைத் தூணிலே அடிக்கிறதா?
தேரிலிருக்கிற சுவாமியைப் பார்க்கிறதைப் பார்க்க வேண்டும், ஒரு வருக்கும் ஒரு குறையு மில்லை ,
கடவுள் உள்ளேயிருக்கிற படியாற்றன் நீ கடவுளைத் தியானஞ் செய்யக்கூடியதாயிருக்கிறது. அதுதான் “ அவனருளாலே அவன்ருள் வணங்கி* என்று சொல்வதாகும்.
நான் உண்மைப்பொருள்; மனிதர் யாவரும் சரிசமனுவார். வேலையிலேதான் வித்தியாசம் இருக்கிறது.
பாதுகாப்புக்கு வேலி போன்று ஆன்ம மலர்ச்சிக்கு வேண்டிய நற்றீர்மானங்கள்,
அதற்குத்தக மரியா ைதயாக நடந்து கொள்ள வேண்டும்.
மனிதனுக்கு ஒழுங்குதான் பெரிது. நாஸ்திகரில் அநேகர் ஒழுங்காக இருக்கிறர்கள்.
பெரியோர்களைக் காண்பது ஒரு ஒழுங்கு. ஆணுல் கடவுளைத் தேடி இந்தியாவுக்குப் போகத் தேவையில்லை. கடவுள் எங்களோடிருக்கிறவரை அங்கேயேன் போய்க் காணவேண்டும்?
ம்ெத்தச் சுகமான * அலுவல். உடம்பைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கடவுளையும் கும்பிட்டுக்கொண்டு வேலையைச் சரியாய்ச் செய்ய வேண்டும்.
குடையை விரியாமல் மழையிற் போனுல் கட வுள் நனையாமலிருக்கக் காப்பாற்றுவாரா? அப்படிக் காத்திருக்கிறது முறையாகுமா? சாப்பாட் டைச் சாப்பிடாமலிருந்தால் பசியைப் போக்கமுடியுமா?
தன்னம்பிக்கை வேண்டும். மற்றவர்களில் தங்கி யிருக்காதீர்.
ஊனக் காதாற் கேட்காமல் ஞானக் காதாற் கேட்க வேண்டும்.
உன்னிலே கடவுளிருக்கிறபடியால் அல்லவா நீ கடவுளைக் கும்பிடுகிறப். கண்ணே மூடிக்கொண்டு பார்த்தாற் காண முடியுமா? அது உன்னிட மிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. நீ பிரித்துப் பார்க்கத் தெண்டியதே. அதையும் பிரித்தறியத் தெண்டியாமல் இயல்பாகக் கும்பிடு. நரி வாலால் கடலாழத்தை அளவிட முடியுமா?
நித்திரை செய்தால் மனம் நித்திரையைநாடும். யாத்திரை செய்து பழகினல் அதையே நாடும். சும்மாவிருந்து தியானஞ் செய்தால் அதனேயே நாடும்,
எதிலெதில் பழகினுலும் மனம் அதில தில் இழுக்கும். ஆகையரல் ஒன்றிலும் நிலைக்க விடாதே.
மற்றவர்களுக்குச் சரியாக யான் நடக்க முடியுமா? எனக்குச் சரியாக யான் நடக்கலாம். என்னடைய மனச் சாட்சிக்குச் சரியாக யான் நடக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் சரியாக விருக்கும் , மனச் சாட்சிக்கு மாறக நடந்தால் மற்றவர்களின் மனச்சாட்சிகளுக்கும் மாறகவேயிருக்கும்.
தேகம் யாலால்லவென்று நினைத்துக் கொண்டு அதனைக் கவனவீனமாகப் பாவிக்கப்படாது. அதனை அதிகம் போற்றி வளர்க்கவும் கூடாது.
எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டு பேசலாம். விளங்காதவர்கள் பேசினுல் அவர்களையும் தாக்கிப் பூதங்களையும் தாக்கும். ஆகவே யாவரும் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பது நன்று. எங்களுக்கு எல்லாம் ஒழுக்கம்.
கடவுளை ஏமாற்றுவதுதான் பெரிய ஏமாற்று. ஒருவன் ஒரு நாளைக்கு 5 நிமிடம், 10 நிமிடம், கால் மணி நேரம், அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் நினைக்கலாம். கூட இருக்கிற கடவுளை நெடுக நினைப்பது எப்படி?
உன்னுடைய வாழ்க்கையை நினைத்துப்பார்; ஊன்றி நினைத்தால் விளங்கும். என்ன சுகத்தைக் கண்டாய்? ஆகவே வாழ் வினை இந்திர சாலம், கனவு, கானல்நீர் என்று பெரியோர் வருணித்தது எவ்வளவு உண்மையாகும்.
அயலவனுடைய மனத்தினை நோகச் செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். அவன் உன்னேப்பற்றி நினைத்தால் அந்த நினைவு உன்னைத் தாக்கும். உன் மனத்திற் குழப்பம் ஏற்படும்.
உலகம் ஒரு கனவு. இந்தக் கனவில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சிலர் நினைக்கிற நினைப்பு எங்களைக் கூடத் தாக்குகின்றது. நாங்கள் விடயத்தை அறிந்து கொண்டு நித்திரை செய்து அதனை அகற்றிவிடுவோம்.
வயது முதிர்ந்த பின் இறப்பின், ஆன்மா சுகமாகப் பிரியும். இளமையில் இறப்பின் ஆன்மாவின் பிரிவு வருத்தமாயிருக்கும்.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் போவது வருவதுபோலவே இறப்பும் பிறப்பும் ஆகும். சுக துக்கங்கள் வெளித்தோற்றங்களே . ஆன்மாவிலே ஒடுங்கியிருப்பவனுக்குக் காலம் என்பது இல்லை .
ஆயினும் ஒழுக்கத்திற் கவனம் வேண்டும். நல்ல பிறப்பு, தீய பிறப்புக்களில் கொண்டு போய் விட்டு விடும். இந்தியாவுக்குப் போகும்போது எங்களுக்கு நல்ல இடங்களில் விருப்பும் தீய இடங்களில் விருப்பமின்மையும் எழுவதியல்பே.
நீயுமில்லை; நானுமில்லை. கடவுள் தான் இருக்கிருர் பார்த்தவனைப் பார்த்ததுதான் மிச்சம். அங்கே இருந்த நாங்கள் இங்கே. இருக்கிருேம். கடவுளை எங்கே பார்க்கிறது ? கடவுள் எங்களோடிருந்து எல்லாவற்றையும் பார்க்கிருர்.
உலகம் அப்படித்தான் இருக்கிறது. இங்கே ஒரு நூதனமுமில்லை. சும்மா பார்த்துக் கொண்டிருப்பதன்றி ஒரு நினைவும் தேவையில்லை. இப்போ உணவு உண்டாயிற்று. இனி இன்று இரவில் ஒரு சப்பாத்தி சாப்பிட்டுத் தேநீர் குடிப்போம். அதற்கு நினைவு ஏன்? நேரம் ஏன்? நாங்கள் ஆன்மா.
கண்களை மூடிக்கொண்டிருந்தால் போதாது; மனமல்லவோ மூடவேண்டும்!
அங்கே கண்ட கண்தான் இங்கேயும் காண்கிறது. இதை அறிவது ஆன்மா. அவ்விடம் தேக சுகத்திற்கு ஒவ்வாது என அறிவதும் இவ்விடம் நல்லதென்றறிவதும் ஆன் மா. நித்திரை செய்தேன் என அறிகிறது. நான் வேறு நித்திரை வேறு. எல்லாம் கடவுள். இது ஞானயோகம். இது கை வல்யமாகும் வரைக்கும் வாள் முனையில் நடப் பதுபோல் இருக்கும்.
எல்லாம் கடவுள்தானே. யார் கும்பிடுகிறது? யாரைக் கும்பிடுகிறது ? என்று ஒருவர் நினைத்தாரோ அவர் சிக்கிக்கொள்ளுவார். அகங்காரம் வந்து விடும்.
புலிக் கடவுளுக்குக் கிட்டப் போகக்கூடாது. குளிர்க் கடவுளுக்குத் தக்க மாதிரி நடந்து கொள்ள வேண்டும். கைவல்ய நிலை வரும்வரை எல்லாம் கடவுள்தானே என் று கூறிக்கொண்டு ஆனைக் கடவுளுக்குக் கிட்டப் போகக்கூடாது.
எல்லாவற்றையும் பார்த்தோம். ஆணுல் பார்க்கிற பொருளை ஒன்றும் பார்த்ததில்லை. அதுவும் ஒன்றையும் பார்க்கிறதில்லை. பார்க்கிறது போல் இருக்கிறதுதான் மாயை. மாயை சடப்பொருள். அதனுலேயே அதுவும் தொழிற்படுகின்றது.
உண்மையில் அங்கே ஒன்றும் பார்க்கிறதில்லை. வெளித்தோற்றத்திற்ருன் பார்ப்பது போலிருக்கிறது.
எல்லாம் அறியும் ஒன்றை எவ்வகையில் அறிய முடியும் ?
குளிரில் இருக்கிருேம் என்று நினைத்தால்தான் குளிர்கிறது. உலகில் இருக்கிருேம் என்று நினைத் தால்தான் உலக காரியங்கள் வந்து தாக்குகின்றன. நினைவுதான் எல்லாம். ஆசையை விட்டால் நினைவு நின்றுவிடும். நினைவு ஒடுங்கிய நிலையை
பார்தான் அறிவர். சென்றதையும் வரப்போவதைபும் பற்றி ஏன் நினைக்க வேண்டும் ? எமக்கு முன்பாக இப்போது இருப்பதுவே எங்களுக்கு உலகம்,
மனிதன் பரிசுத்தமாக இருந்து பேசுவதெல்லாம் திருவாசகம், நாங்கள் பரிசுத்தமாய் இருக்கிருேம், எங்களுக்குள்ளேயே திரு வாசகமாயிருக்கிறது. மாணிக்கவாசகர் பேசியது திருவாசகம் ,
சாப்பாடாயிற்று. இனி நினைப்பதற்கென்னவுளது? வேண்டுமென்ருலல்லவ ஏதாவது நினைக்க வேண்டும், ஏதாவது குற்றம் செய்திருந்தாற்ருன் நாளையைப் பற்றி நினைக்க வேண்டும்.
உலகம் ஒரு நாடகம். வேடத்துக்குத் தகுந்த மாதிரி நடிக்க வேண்டும். காரியத்தை விளங்கிக் கொண்டு அதாவது ஒன்றும்மே சம்டோகிற தில்லையென்று அறிந்துகொண்டு ஐயா என்பவரை ஐயா என்று கொண்டும், எடே என்பவனை எடே என்றுகொண்டும் , தம்பி என்னுமிடத்திற் தம்பியென்று கொண்டும் நடிக்க வேண்டும், நாங்கள் எங்கே அங்கே கடவுளும் உளர். எல்லாம் செப்படி வித்தை,
மத்தியானத்தில் வெய்யில் எறிக்கிறது, அதை யாராவது சொல்லிச் செய்தார்களா ? எல்லாம் எப்பவோ நடந்து முடிந்திருக்கின்றன. அதன்படி நடக்கின்றன, எங்கள் கிரகத்தின் படி நாங்கள் இங்கே பிரயாணம் பண்ண வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் நடப்பிக்கிற ஒன்றிருக்கிறது. எங்களுக்கு அந்த வேலையை வைக்கவில்லை , மண்ணை நனைக்கிறதற்கு வைத்ததல்லாது சுட வைக்கவில்லை, இவ்விடத்திற் சோளம் வளரும். நெல்லு வளராது.
கண்ணுடிக்குள் உன்னுடைய முகம் தெரிகிறது போலக் கடவுளும் மாயையென்னும் கண்ணுடிக்குள் பலவிதமாகத் தெரிகிறர். நன்மையும் தீமையும் கலந்திருக்கின்றன. புகைவண்டியினுள் சுகமாக விருக்கிறதென்றெண்ணிய உடன்ே ஒரு பக்கத்தில் வெய்யில் சுடும்.
எறிந்த கல்லின் விசையை நடுவே தடுத்தால் அதன் தரக்கம் கூடுதலாகவும் முடிவிலே தடுத்தால் தாக்கம் குறைவாகவும் இருக்கும். நடுவே தடுத்ததன் அதிர்ச்சியின் தாக்கம் போல் ஐரோப்பாவில் யுத்தம் நடக்கிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் கொஞ்சம் இருக்கிறது.
நாங்கள் வந்ததுமில்லைப் போவதுமில்லை. அஞ்ஞானிக்குத்தான் பழக்கத்தை விடமுடியாது. செருப்பையடித்துப் பதனப்படுத்துமாப்போல் ஆன்மாவைப் பதனப்படுத்த வேண்டும்.
எங்கள் ஊரில் கூவுகிறது போலவே சேவல் இங்கும் கூவுகிறது.
உயிர் உடம்புடன் கூடியிருக்கும்வரை உடம்புக்குத் தக்க அசைவு வேண்டுந்தான். ஆறுதல் என்று நினைக்கிறதுதான் ஆறுதல், தன்னை மறந்த பின் சுருண்டுகொண்டு கிடந்தால் என்ன ?
மனம் விடயங்களிற் செல்லாதடங்கியவுடன் ஒரு வெப்பம் தோன்றும். அவ்வெப்பமும் இயற்கையிலுள்ள வெப்பமும் சேர்ந்து ஒரே வெப்பமாய்த் தெரியும், அதனைக் குறைப்பதற்குத்தான் மனத்தை விடயத்தில் சிறிது செல்ல விடுவது ஆகும்.
இருவன் ஒன்ருல் சலம் கழிக்கிருன், வேறென்ருல் பார்க்கிருன், உலகம் முழுவ கும் அது போலாகும். கடவுள் ஒன்றலே ஒன்றைச் செய்கிருர் மற்றதால் மற்றதைச் செய்கிறர், தானே தோன்றி தானே மறைகிறது. ஆக உள்ளது ஒரு உயிர். ஒரு மனம். எல்லாமாக உள்ள கட வுளே முன்னிலைப்படுத்துகிருர்கள்.
அவனருளால் அவன்ருள் வணங்கி; அருள் எப்போதும் இருக்கிறது. யன்னலைத் திறந்தவுடன் காற்று வீசுகிறது. காற்று முன்பும் இருந்தது. தடுத்திருந்த யன்னலைத் திறந்தவுடன் வீசிற்று காற்றுப் புதிதாய் வீசியதல்ல. கொஞ்சம் இழக்கி விட வேண்டும். அதாவது தன்னைப் பரிசுத்தமாய் வைத்திருக்க அருள் வெளிப்படும்.
புத்தகத்தைப் படிப்பதில் என்ன? பிரயாணத்திலே எல்லாவற்றையும் பார்த்து அவதானித்துப்படிக்க வேண்டும்.
எல்லாம் வந்து போகின்றன. நாங்கள் வேறு சாட்சியாக இருக்கிருேம் . இதை விவேகத்தால் அறிய முடியாது. அவனருளால் அறிய வேண்டும்
இட்டபடி நடக்கிறது. உன் பிதாவின் பெயர் என்ன? - சிவன்.
தான் ஆன்மா என்று நினைத்து ஒழுங்காய்ச் சாதனை பண்ண வேண்டும். அதாவது யானையிலும் என்னிலும் கடவுள் இருக்கிறர். ஆகையால் யானைக்குக் கிட்டப் போகிறதல்ல. கையிலே நெருப்பு இருக் கிறபடியால் நெருப்பைத் தொடுகிறதல்ல. இப்படிப் பழகி வர வர ஆன்மாவும் கடவுளும் இரண்டல்ல என்பது பின்பு விளங்கும்.
பேச்சுப் பேச்சென்னும் பெரும் பூனை வந்தவுடன் கீச்சுக்கீச் சென்னும் கிளி.
சாமியென்றிருக்கிறவன் தான் எ ல் லா ைரயும் போலவே என்றிருக்க வேண்டும். தான் சாமி யென்று நினைத்தானுே அவனுக்கு ஈடேற்ற மில்லை .
ஒழுக்கமி ஒன்றையும் அறியவும் தெண்டிக்கக் கூடாது. அறியாமலும் இருக்க த் தெண்டிக்கக்கூடாது. மூட நம்பிக்கையை விட்டுவிடவேண்டும். பிறரோடு அன்பாயிருக்க வேண்டும். மற்றவனு டைய குற்றத்தை மன்னிக்க வேண்டும். புகை வண்டியில் பிரயாணம் செய்யும்போது தலையை வெளியில் வைக்கப்படாது, பஸ் வ ண் டி யி ற் போகும் போது கையை வெளியில் நீட்டிஞல் அதனை மற்றபஸ் முறித்துவிடும், வருந்திப் பார்க் கக்கூடாது. வருந்தாமற் பார்க்க வேண்டும். சுவரைப் பார்க்கும்போது வருத்தமில்லை, ஆணுல் சிங் ா தீதைப் பார்க்கும்போது வருத்தம். வேலைக்காரனத் திருத்துவதற்காக ஏச வேண்டும். ஆணுல் வருத்தாமல் ஏச வேண்டும். ஆசைகளை எல்லேக்கு அப்பால் வளர்க்கக் கூடாது, மிளகாய் , அதிகம் சாப்பிடாமல் அளவுக்குச் சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும், ஆன்மா உடம்போடு இருக்கிறதை ஒரு யந்திரம் போல் பாவிக்க வேண்டும்.
மெத்தை வீட்டில் ஏறும் பொழுது படிகளிலே கால் வைத்து ஏறவேண்டும் , ஆணுல் "இயங்கேணி யிலேயும்? போகலாம், அது முன்பிறவித் தவத்தினுலே வர வேண்டும்.
ஒருவரோடும் பகையாதே. சிநேகமும்வையாதே, எடுக்கிறதற்கு என்ற மைக்கப்பட்டது. கண் பார்க்கிறதற்கு என்ற ைமக்கப்பட்டது, ஒவ் வொன்றும் தனக்கென அமைக்கப்பட்ட வேலையைச் செய்யவேண்டும் அளவுக்குப் பேசி அளவுக் குச் சாப்பிடவேண்டும்.
என்னைக் கண்டவிடத்தில் உன்னையுங் காணேன், கடவுளையுங் காணேன்,
மரணம் ஒரு வரப்பிரசாதம் . ஒருவரை விட்டுப் பிரியும் போது கோபமாயும் பிரியக் கூடாது, சந்தோஷமாயும் பிரியக்கூடாது.
கூட வருகிறதைப் பார்க்க வேண்டும். யான் என் புலன்கள்ே சடு கோபிக்கிறதல்லாது மற்றவர்களோடல்ல,
ஒரு காரியத்தை நீ செய்ய விரும்பினுல் அதை நினைத்து விட்டுப் பின் விட்டு விட வேண்டும். அதன் பின்பு அதைச் செய்யென்று உள்ளே சொல்லு மாகில் அதைச் செய்ய வேண்டும். அப்போதுதான் சித்தியாகும். செய்யவோ விடவோ என இரு மனப் பட்டால் செய்யக் கூடாது. மனம் இரண்டு பட்டால் செய்யக்கூடாது. மனம் இரண்டுபட்டால் காரியஞ் சித்தியாகாது.
கடவுளை நெடுக நினைக்க முடியாது. ஆனல் தருணம் கிடைத்தவுடன் விடக் கூடாது.
நீ ஆன்மாவென்று உணர்ந்த பின் நீ கடவுள் என்று உணரப் பழக வேண்டுமென்னுங் கே ள்வி•.
கடவுள் பெண்ணையும் படைத்து மயக்கத்தையும் படைத்திருக்கிருர் . உலகத்தைப் பெருப்பிக்கிறதில் அவருக்கு விருப்பம் .
ஒருவன் சுத்தப் பிரமச் சாரியாயிருப்பாணுகில் அவன் கலியாணம் முடித்தாலென்ன? விட்டாலென்ன? கிணற்றுக்குள்ளே கல்லைப்போட்டால் அது கரையாது.
ஆசை உள்ளவனிடம் கடமைப்படாதே. ஆசை முற்ருய் அற்றல் உடம்பு நில்லாது. நீ முகத்தைக் கழுவிப் போட்டுக் கண்ணுடிக்குள் பார்த்தால் முகம் சுத்தமாயிருக்கிறது தெரியும் . சேற்றை முகத்திற் பூசிக்கொண்டு பார்த்தால் கண் ணுடிக்குள் சேற்று முகம் தான் தெரியும்.
கடவுளோடு அன்பாயிருக்கிறவர்களுக்கு ஆபத்துக் காலத்தில் அவர் ஒரு உதவியைச் செய்வார்; மறு வேளைகளில் அதைக் கேட்டால் செருப்படி தான் கிடைக்கும்.
பிறரை ஏமாற்றுகிறவன் தன்னையே ஏமாற்று கிறன்.
மனம் இறக்கிற தில்லை. ஆன்மாவில் ஒடுங்கு கிறது.
உன்னிற் கடவுள் இருந்தும் கண்ணில்லாவிடிற் பாரீக்காது. கை முறிந்தால் நீட்டாது. அந்த ஒழுங்கு தப்பா அது,
விருப்பம்போல் நடக்கிறது தான் சமயம், சிருஷ்டியில் அணுவும் பிழையாது, கடவுள் பெரிய கள்ளன் . எங்களோடு இருந்து கொண்டு நல்லூருக்குப் போகச் செய்கிறர். எனக்குப் பெரியவனும் இல்லை . சிறியவனும் இல்லை,
மனத்தை அடக்கிப் பழகும்போது ஒரு எண்ணத்தை அடக்க மற்ற எண்ணம் உதிக்கும். அதையும் அடக்க வேறென்று உதிக்கும், அப்படியே ஒன்றன் பின் ஒன்ருக வந்து கொண்டேயிருக்கும், ஆணுல் எல்லா எண்ணங்களையும் வாருங்கள் என்று நினைத்தவுடன் ஒன்றும் வராது.
ஆன்மாவுக்கு நினைப்பு மறப்பில்லை , மாய மனத் துக்குத்தான் அவையுள
பிறந்தாலும் * அதற்குள் இறந்தாலும் அதற்குள் தான்.
நாங்கள் சிவனடியார்; ஒருவரோ டொருவர் காட்டும் அன்புதரன் பூசை, சகலமும் சிவ தொண்டே செய்கின்றன, சந்திர சூரியர் சிவ தொண்டு செய்கிறர்கள். நாங்கள் சிவதொண்டு ச்ெய்கிருேம், எங்கள் கால் சிவதொண்டு செய் கிறது.
கடவுள் பூவாலும் பேசுவார். நாவாலும் பேசு.
புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஓரிடத்திலிருந்தே உற்பத்தியாகின்றன, இவையிரண்டையும்யாம் விட்டிருக்கிறேம்,
கூலிக்குக் குரக்கன் விதைக்க வந்தவர் எல்லைக்கு ஏன் வழக்குப் பேச வேண்டும்?
* கடவுளுக்குள் நாங்கள் நெற்பயிர் போல் வளருகிருேம். தண்ணிர் பாய்ச்சிஞல் வளரும். தண்ணீர் பாய்ச் சாவிட்டால் காய்ந்து போகும்.
தண்ணீரில் உப்புக் கரைவதுபோல இந்த வுடம்பு எண்பதாவது வயதில் அல்லது நூருவது வய தில் அல்லது நூற்றிருபதாவது வயதில் கரைந்து போகிறது. பின்பு காய்ச்சினுல் கட்டியாகும்.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. படம் கூடா தென்றலும் அதிலே துப் பக்கூடாது.
எங்களுக்கு ஒரு குறையுமில்லை. ஒரு குறையு மில்லை என்று உணராததுதான் ஒரு குறை.
மனிதன் ஆறுதலாகப் பழக வேண்டும்; அதாவது சுறுசுறுப்போடும் ஆறுதலைப் பழக வேண்டும்.
ஒன்றுக்கும் அவசரப்படக்கூடாது. அவசரப் படுகிறவர்களோடு நாங்கள் கூடியிருக்கிறதில்லை . சும்மா இருக்கிறது ஒரு பெரிய வேலை . சும்மா விருந்தால் பலம் வரும்.
பொருள்களைக் கவனமாகப் பாவித்தாற்ருன் அவை எங்களைத் தேடி வரும். அவற்றைப் பக்குவப் படுத்த வேண்டும். இதையே செல்வம் என்பர்.
துன்பம் நீங்க வேண்டுமாயின் கடவுளைத் தொழவேண்டும்..
கீழே நின்று மேலே பார்க்கும்போது தான் பள்ளம் பிட்டிகள் தோன்றும் . மலைக்குமேல் நின்று பார்த்தால் எல்லாம் ஒரே மட்டமாகத் தெரியும். அதுபோல எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை உணரும் பொழுது அங்கே ஆன்மா இல்லை. எல்லாம் கடவுள் மயமாயிருக்கும்.
கையிலிருக்கும் விரல்களிற் பலவிதமான அசைவுகள் தோற்றிய பின் அந்த விரல்களில் ஒரு மாற்றமுமில்லை. எல்லாம் படக் காட்சி போலிருக்கின்றன. எல்லாம் கடவுள் மயமாகவிருக்கின்றன. கடவுள் மயமாயிருக்கும் தன்மையை உணரும் பொழுது அதனை விபரிக்க முடியாது. அப்படி விபரிக்க எத்தனித்தால் ஒரு கீறு கீறியது போலிருக்கும். அதிலிருந்து சங்கற்பம் முளை கொள்ளும்.
இரவிலே படுக்கும்பொழுது மனத்தில் ஒரு எண்ணமும் இல்லாமல் இருக்கவேண்டும். மனத்தில் எண்ணங்கள் எழுமாயின் எழுந்திருந்து வரும் எண்ணங்களை நினைத்து முடித்தபின் மறுபடி படுக்க வேண்டும். நித்திரைக்குப் போகும்போது மறுநரட் காலையில் சிந்திக்கலாமென எண்ணங்களை நீக்கிவிட வேண்டும்.
பிறருக்கு நன்மை செய்ய விரும்புகிறவன் தன் நன்மையை விரும்பியே செய்கிருன். அடிப்படை நோக்கம் தன் நன்மையே.
ஒரு அருள் மொழியிஞலே கன்ம வினைகள்.
உண்மையை அநுபூதியில் பெற்ருல் ஒழுங்கு ஒழுங்கீனம் ஆதியாய துவந்துவங்களை நீ அறியாய். உடல் முடமாயினும் அறிவு முடம் இல்லா திருப்பவனே அழகன்.
ஒருவனிடத்தில் ஒழுக்கம், அறிவு சேவையுணர்ச்சி ஆதியன இருந்தால் திருவருள் நிற்கும். கற்பு என்பது பதியைப் பற்றி நிற்கும் விரதம். ஆண் பெண் இருபாலார்க்கும் உண்டு.
பதவிக்கு ஆசைப்படுகிறவன் கடமை செய்ய மாட்டான்.
ஓர் அரச மரத்தைச் சுட்டிக் காட்டி ஓர் அரிய உபதேசஞ் செய்தனர்:- பார்! எவ்விதம் ஒரு விதை மரமாய், கொம்பாய், கிளையாய், இலையாய், பூவாய், காயாய், காட்சி தந்து மிளிர்கின்றதோ அவ்வாறு தான் பிரம்மமாகிய வித்து உலகாய், உயிராய், உடலாய், சந்திரனுய், சூரியணுய், பஞ்ச பூதியமாய் ஆணுய், பெண்ணுய், பரமாத்மா வாய், எல்லாமாய் விளங்குகின்றது. ஒரு பொருள்தான் உலகுயிர் பரமாய் ஒளிர்கின்றது. பேதத்துள் ஒருமையைக் காண்பதுதான் அறிவு.
இறைவனிடத்திலேயே எல்லாந் தோன்றி, எல்லாம் நிலை பெற்று, எல்லாம் ஒடுங்குகின்றன, ஆகையால் யாதொரு பொல்லாப்புமில்லை.
இறைவனை நாம் புதிதாய்க் கூடுவதில்லை . இறைவன் என்றும் ஆன்மாவோடு கூடியேயிருக்கிருன் , அவன் எம்மை ஒரு காலத்திலும் பிரிந்திருந்ததுமில்லை ; பிரியப்போவதுமில்லை.
தான் வேறு இறைவன் வேறு என்னும் மயக்க உணர்வை விட்டு தான் என ஒரு முதலில்லை . இறைவன் தான் இருக்கிறன். அவனே சர்வ சீவர்களாயும், உலகாயும், உயிராயும், பரமாத்மா வாயும் நடனஞ் செய்கிறன் என்றெண்ணுவார்களாக.
உண்மையுணர்ந்த பெரியோர்களையும் பிராரத்துவ வாசனை வாட்டு மன்ருே ஒரொருகால் பிரபஞ்சப் பொருள்கள் மீது மனம் சென்று இடருறவும் நேரிடும்.
விருப்பு வெறுப்பை விடு. இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் சமமாகப்பார். ஒடும் புளியம்பழமும் போலவும் தாமரை இலையில் நீர் போலவும் வாழ். வீடு பேறு சித்திக்கும்,
இறைவனுடைய நாமமாகிய பஞ்சாக்கர செபத்தைச் செய். பூரண நிலை அடைவாய்.
ஆன்மா ஆவதுமில்லை; அழிவதுமில்லை. இருந்த படியே இருக்கின்றது. இ ைறவனை வாழ்த்தி வணங்கி இவ்வுண்மையை அறிகுதி நீ.
என் செயல் என்பது அறியாமை; அவன் செயல் என்பது ஞானம்.
இறைவன் வேறு நான் வேறு என்பது அறியாமை. இறைவன் தான் இருக்கிருன். நான் என்பதில்லை என அறிவதே ஞானம்,
இறைவன் வேறு, குரு வேறு, தான் வேறு என்பது அறியாமை, இறைவனும் குருவும் தானும் ஒன்று என்பதை அறிவதே ஞானம்
தன்னைத் தன்னலறிந்து தானே தானுயிரு. இதுவே திருவடி. இதுவே வீடு.
கடவுள் பகாப்பதம். மனிதன் பகுபதம். போவதும் வருவதுமில்லை. போவதும் வருவதும் உண்டு. இந்த வினுேதத்தை அறிய வேண்டும்.
கடவுளைக் கண்டவர்களில்லை. கடவுள் எல்லாமாய் இருக்கிருர்; எல்லோருந் தவஞ்செய்கிறர்கள். சைவத்தில் எல்லாவிதமான வழிபாடுகளுக்கும் இடமுண்டு- ஒவ்வொரு ஆத்மாவும் தனது இயல்புக் கேற்றபடி வழிபாடு செய்யலாம்.
வித்தியாசங்கள் இருந்தே தீரும். ஆனல் அவற்ருல் தாக்குப்படாமலிருக்கலாம்.
எனக்கும் உனக்கும் வயது ஒன்று. இந்தக் கணக்கை அறிந்தால் எல்லாந் தெரியும்.
மாசு என்பது, யாவும் கடவுளின் செயல் என்பதை மறத்தல்.
இப்பகுதி முழுவதும் ஆங்கில மூலத்திலிருந்து
தமிழாக்கஞ் செய்யப்பட்டது.
* ஆதியில் * அச் சொல் இருந்தது. அச்சொல் இறைவனிடம் இருந்தது. அச்சொல்லே இறைவன்" இதுவே எல்லாச் சமயங்களினதும் அடிப்படையாகும்.
மனிதன் மன அறிவிற்கு அப்பாற்பட்டவன்.
நீ உனது உடம்பிற்குத் திருமணஞ் செய்யப் பட்டுள்ளாய். எனவே உடலே உனது மனைவி,
நான்? உனக்கு ஒரு உடை தருகிறேன். உடலே மிகச் சிறந்த உடை.
பலவற்றுள் ஒன்று; ஒன்றினுட் பல.
ஆட்டுக்குட்டியாய் அமைந்து அங்குமிங்கும் அலையாதே. இருந்து தியானித்துச் சிங்கம் போல் கர்ச்சனை செய். என்னைப்பற்றி எனக்கே நான் இதனைச் சொல்கிறேன். இதை நான் உனக்குச் சொல்லவுமில்லை . நீ நான் சொல்வதைக் கேட்கவுமில்லை,
நானே நீயும்; நீயே நானும் .
உலகில் சந்நியாசி எவருமே இல்லை . நானே சந்நியாசி.
உன்னைக் காண வைப்பதை நீ காணமுடியாது. நீ மலையின் அடி வாரத்தில் நிற்கிருய், அடிவாரத்
தில் உள்ள மனிதனும் உச்சியில் உள்ள மனிதனும் ஒருவரே.
குழந்தை போல் இரு, என்னைப் பற்றிப் பேசாதே.
* பிரணவம் கிறிஸ்த வேத நூலிலுள்ள வாக்கியம்,
நான் எல்லாமாய் ஓரிடத்தில் இருக்கமுடியாது. ஆதலின் ஒருவர் காலை எடுக்கிருர், ஒருவர் கண்ணை, ஒருவர் கையை - அவ்விதமே.
நீ உன்னிடத்தில் இரு, உன்னிடத்தில் வேலை செய். நீ வேலை செய்யவேண்டும். ஏதாவது ஒருவேலையைச் செய். சோம்பியிராதே. (தன்னையே காட்டி} மாபெரும் தொழிற்பாடு. உனது தருமத்தைச் செய். உன் வல்லமைக்கேற்ப வேலை செய், பத்துக் கலன்கள் - பத்துக் கலன் கொள் வலு.
தத்துவங்கள், கொள்கைகள் எனப் பல உள. அவற்றைப் பற்றி நீ மனங்கலங்காதே, "
நாவை நீ காத்துக்கொள், அற்றேல் உட்னக்குத் தீங்கு நேரும்.
பேசாதிரு. ஆளுல் சில சமயங்களில் பேசு - இயல்பாகப் பேசு.
விளங்கிக் கொள்வதற்கு முன் விளம்பாதே, சும்மா, அமைதியாய் இரு. சுவாமி உன்னுடன் பேசுவார். எல்லாருஞ் சுவாமியே.
நாரை ஒன்றுஞ் செய்யாதிருக்கும். ஆணுல் உணவைக் கண்டவுடன் உடனே விழிப்பாகிச் சடுதியாக இரையில் பாய்கிறது. அதைப் போன்றிரு.
ஏதாவது ஒரு வேலை செய். நீ வேலை செய்வதில்லை. அதுவே செய்கிறது. செய்வதற்கு அதிகம் உண்டு.
நான் முழு உலகமும் ஆகும்.
நான் எல்லோருள்ளும் இருக்கிறேன். எல்லா வடிவங்களும் என்னுடைய ைவே.
நூல்களை வாசியாதே - அது உன்னுள் உளது.
நீ செய்வதற்கு வேலையுண்டு. அந்த வேலையைச் செய்.
ஆதியில் அச்சொல் இருந்தது. அச்சொல் இறைவனிடம் இருந்தது. அச்சொல் இறைவணுகும். அச்சொல் "ஓம்’ ஆகும். *ஆமென்’ என்பதும் அதுவே.
எல்லாம் தீமைக்கே என்றும் இராதே. எல்லாம் நன்மைக்கே என்றும் இராதே. நடுவழியில் நட.
எழுந்தமானத்தில் பேசாதே.
உணரவேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடு, உணர்வதற்கு ஒன்றுமில்லை .
நீ உணரமுடியாது. நான் உணரமுடியாது. நீ எனவும் இல்லை . நான் எனவும் இல்லை.
நீ உண்மையை அறியமுடியாது. அந்த எண்ணத்தை அகற்ற வேண்டும். உண்மை உளது. முழுவதும் உண்மையே. ‘நான் உளேன்’ என்பதே உண்மை.
*அறியவேண்டும்’ என்ற இந்த எண்ணமும் ஒப்படைக்கப்படவேண்டும்.
நீ எல்லாவற்றையும் ஒப்படைக்க வேண்டும். நான், நீ, அவன் என்பவை ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்கப்பால் போக வேண்டும்.
நீ கைலயங்கிரி ஏறுகின்றiய். நீ போராட வேண்டும். முழுவழியும் போராட்டமே. முழு நேரமும் போராட்டமே.
விரும்பியபடி செல். சும்மா விளையாடு. எல்லாம் விளையாட்டே. இறைவனும் விளையாட்டே.
**காலங் குறுகியது. விஷயம் விசாலமானது." நீயே வேலை செய்ய வேண்டும். நீயே அதைச் செய்ய முடியும்.
விளையாடித்திரி - இங்கும் அங்குந் திரி, முழு? உலகமுமே விளையாட்டு,
உன் வேலையைச் செய், எல்லோரும் வேலை செய்கின்றனர். மரங்கள் வேலை செய்கின்றன. (அன்பன் --மரங்கள் தங்கள் தொழில்களை நிறைவுறச் செய்கின்றன. ஆணுல் மனிதன் செய்வதில்லையே) எல்லாம் பயன் தருகின்றன. நான் பயன் தருகின்றேன். நீ பயன் தருகிருப். எல்லோரும் வேலை செய்கிருர்கள். நீ இப்போது வேலை செய்கிருய், வேலை சுய தர்மமாகும் -உனக்குகந்த வழியில்.
நானே வெளிக் கொணர்தல், நானே நிலைத்தல்; நானே அழிதல். இவையெல்லாம் பிரமத்தில் உள்ளன. பிரமமும் நானே.
உச்சியில் அங்கே ஒன்றுமில்லை. ஆதலின் நீ சற்றுக் கீழே இறங்க வேண்டும். அப்போது களிப்
அதிகம் உண்ணுதே. சிறிதளவு சாப்பிடு, சிறி தளவு வாசி. சிறிதளவு வேலை செய்.
வயிறு அரை வாசியே நிரம்ப வேண்டும்- அதில் அரைப்பங்கு உணவு, அரைப் பங்கு நீர், மிகுதி அரைப் பங்கு வெறுமனே இருத்தல் வேண்டும்.
நீ வாசிப்பதைக் காட்டாதே. உண்மையைக் காண், காணும் வரை உட் கார்ந்து கொள்,
உண்மையிலிருந்து உண்மைக்கு உயர்ந்து செல்கிருேம்,
* சுவாமி விவேகானந்தர் வாக்கு. இவ்வடியாருக்கு சுவாமிகள் இதனைக் கூறியுள்ளார்.
தொடக்கத்திலே செவிமடு, பின்பு விசாரஞ் செய், அதன்பின் விளங்கிக் கொள்.
கடவுள் என்பது மயக்கம் - எல்லாம் மயக்கமே, ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. சும்மா இரு. அது போதும் .
ஒன்றுமேயில்லை. நீ ஏதுமில்லை, நான் ஏது மில்லை. கடவுள் ஏதுமில்லை.
ஏதும் மாறுவதில்லை. ஆணுல் மாற்றமிருக்கிறது. அறிவேன் என்பான் அறியாதவனே யாவான். ஒரு வரும் அறியார்: எவரும் எப்போதாவது அறிந்ததில்லை.
உனது உயர்வான ஆன்மா உன்னை வழி நடத்துவதாக .
எவர் மொழிக்கும் ஆணையுரிமை அளிக்காதே. அதைப் பேச விடு; உன் உள்ளத்தில் உள்ளதை மற்றவர்களுக்கு வெளியாகச் சொல்.
நான் அறியேன், நீ ஏன் அறிய விரும்புகிருய்? நீ இருக்கிற மாதிரியே இரு.
பூமி எனது தாய். சூரியன் என கு தந்தை . நான் மகனுவேன்.
ஒரு தெய்வம் தான் உண்டு. ஆணுல் அவர் மூன்று மூர்த்தங்களை உடையர் - பிரமா, விஷ்ணு, ருத்திரன் - படைத்தல், காத்தல், அழித்தல். இது தான் முழு உலக மும் .
உலகம் எங்கணும் எனது செய்தியை எடுத்துச் செல்லவும் - ஒன்றே தெய்வம், ஒருவனே மனிதன், ஒன்றே குலம்.
உள்ளே ஒன்றும் இல்லை. கடவுள் ஏதுமில்லை.
ஒருவரையும் நம்பாதே, மக்கள் பேசுவார்கள், சித்திகள் (அபூர்வ சக்திகள்) காட்டுவார்கள், நம்பாதே. உன்னையே நம்பி நில்.
உனக்குத் தெரியா திருந்தால் நீ தூயவன். அறியாதிருத்தல் அாய்மை. அப்போது நீ தாழ்மை உள்ளவன். உனக்குத் தெரிந்தால், நீ தூயவனல்ல.
உன்னை உன்னுல் அறி. ஆதியாயிருந்த நித்தியமான சொல் “ஓம்’ ஆகும்.
செயற்படு. ஆணுல் செயலின் பலன்களைப் பற்றிக் கவனியாதே.
உலகிலுள்ள ஒருவன் நீயே. அதை அறிந்து மனிதனுக இரு. முழு உலகும் நீயே-எல்லாம் உன்னுள்ளே .
வழிபாடு விழிப்புணர்வாகும். யாரும் அறியார் - நான் அறியேன் - அது விபரிக்க முடியாதது, சொல்லொணுதது.
நான் ஏதும் பேசுவதில்லை . சலனமற்ற தடாகத்தைப் போல் மனம் பூரண அமைதியாயிருத்தல் வேண்டும்.
கிறிஸ்து எல்லையற்றவரல்லர். நானும் எல்லை யற்றவனல்லேன். ஒருவன் பேசினல், செயற்பட்டால் அவன் எல்லையினனுனவன்.
முதல் கீழ்ப்படி, பின்பு கட்டளையிடு, உனக்கே நீ கீழ்ப்படி.
எதணு ஆலும் எவராலும் நீ பந்தப்படாதே. நீ சுதந்தரமாயிரு.
உலகம் முழுவதும் உன்னைக் கவனமாகப் பேணும். நான் உன்மேல் கோபித்தால் நான் உன்னைப் பேணுகிறேன்.
உனக்கே நீ பொறுப்பாளி. உனக்காக நீ வேலை செய்ய வேண்டும்.
பிறருக்குக் கொடு - பற்றின்றி. பிறருக்குதவி செய் - ஆனல் பற்றின்றி.
நீ பேச வேண்டியதில்லை . மெளனமாயிரு.
நீ ஒன்றும் செய்ய வேண்டியதில்லை . கம்மா அது வாய் இரு.
பசியாயிருந்தாலன்றிப் பிறரிடமிருந்து உணவோ, பானமோ ஏற்காதே. பசியாயிருந்தால் கற்களையும் சாப்பிடலாம்.
கடவுள் வந்து தந்தாலும் ஏற்காதே.
பிறருக்குக் கொடுத்தால் அவதானத்தோடு கொடு.
மனத்தைக் கட்டுப்படுத்தினுல் சில வல்லமைகளைப் பெறலாம். அது செப்படி வித்தையே. அவற்றை உபயோகிப்பது மிகக் கூடாது. மற்றவர் எண்ணங்களை அறிய முடியும். அதை உபயோகிப்பது கூடாது.
என்னைப் பின்பற்றதே. எவரையும் பின்பற்ருதே. உன்னையே பின்பற்று.
பாசாங்கு செய்தல் மிகச் சுலபம். விளங்கிக்கொள்ளும் வரை நீ மிகவும் கவன மாயிருத்தல் வேண்டும். ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைத்தல் வேண்டும்.
உன்னை நீ நாடோறும் சோதித்துக் கொள், அதுவே முதற் படி, முதற்படி, இரண்டாவது படி மூன்ருவது படி - இவ்வண்ணம் உச்சி அடையும்
உனக்கு விளங்கி விட்டால், நீ விரும்பியதைச் செய்யலாம். ஆடலாம் ,
எல்லாம் ஆன்ம இயக்கமே. எல்லா அசைவும், எல்லா மாற்றமும் ஆன்ம இயக்கமே.
பிறரிடமிருந்து எதனையும் பெற்றுக் கொள்ளாதே. உன்னையே நம்பி இரு. மற்றவர்களில் தங்கி இராதே.
பெரிய ‘சுவாமி” யாக வருவது மிகச் சுலபம். அப்போது உன்பாடு தொலைந்தது.
உன்னை மட்டுப்படுத்திக் கொள். வாதே; (எல்லயென்பது என்ன?) அளவிற்கதிக . அனவு சாப்பிடாதிருத்தல் முதலாயின.
உலகம் உண்டு. உலகம் இல்லை .
தனியன்- நண்பருமில்லை. பகைவருமில்லை.
வாளி நீரில் * தக்கைகள் போல் யாவரும் மேல் போராடுகின்றனர்.
கிறிஸ்து உன்னை ஏமாற்றுகிருர், புத்தர் உன்னை, ஏமாற்றுகிறர். நான் உன்னை ஏமாற்றுகிறேன். பேசினுல் பொய்யாகும். அது பேசவொண்ணுதது.
கருமஞ் செய்யத் தீர்மானிப்பதற்கு முன் நன்கேச் சிந்திப்பாயாக கருமத்தில் மூன்று கூறுகள் உள. ஆக்கம், அழிவு, பயன். செயற்படுமுன் தன்மையைச் சீர்தூக்கி அளந்து கொள்.
ஏதாவது சிறியவேண்டுமாயின் சந்தி - அவர்கள் சொல்லுவார்கள்.
தெய்வத்தை எங்கும் காண்கிறேன். நான் எவ்விடத்தும் வணங்குகின்றேன். எல்லோருந் தெய்வமே. நான் அறியேனுகையால் இவ்வண்ணகு சொல்ல முடியும்,
எல்லாம் பிரமம் - இது பக்தி,
உனக்கு ஆற்றல்கள் தேவையில் ஐல. ஆற்றல் வரும்.
பக்தி சிரத்தையுடன் உண்மையை நாடுவோன் பசி, தாகம், இளைப்பு, மற்றவர்களால் ஏற்படும் தீங்கு ஆகிய யாவற்றையும் சகித்துக் கொள்வான்.
புத்தர் போதிக்கவேண்டும் என்ற ஆசையை வைத்திருந்தார். ஆதலின் அவர் கீழிறங்கி இடர்ப் பட்டு உபதேசித்துத் தனதா சையை நிறைவேற்றியதும் மேலே ஏறி அதற்கப்பாலும் போனுர், கிறிஸ்துவும் வந்தார். கஷ்டப்படவேண்டும் என்ற எண்னக் வைத்திருந்தார். ஆதலின் பாடுபட்டுப் பின் மேற்சென்ருர், ஆணுல் மக்கள் உள்ள படியே இருக்கிருர்கள். போதிப்பதில் உபயோகமில்லை. சும்மா இரு.
காண்டாமிருகம் * போல் இரு.
ஏன் 'அறிய விரும்புகிருய்? நான் அறியேன். நானும் மற்றவர்கள் போலவே. அவர்கள் எல்லோரும் அனுபூதிமான்களே. ஆஞல் அவர்களுக்கு அது தெரியாது அந்தச் சிறு வித்தியாசம் மட்டுமே உள்ளது.
இறைவனை எங்கும் காண். இது சாதனை; முதலில் புத்தி நுட்பத்தினுல் இதைச் செய். பின்பு நீ அறி.
எல்லாம் விளையாட்டு. உலகம் ஓர் விளையாட் டரங்கு, உலகு முழுவதும் ஓர் நாடகசாலை .
கணத்திற் செயற்படு. கட்டளைகள் கணத்திற்குக் கணம் வருகின்றன. இங்கே வா. அங்கே போ.--
கிறிஸ்து, புத்தர் வந்தார்கள். பின்பு தங்கள் உடல்களை விட்டுச் சென்றர்கள். நானும் நீயும் அவ் வண்ணமே செய்தல் வேண்டும். அதில் ஒன்றுமில்லை . ஆணுல் (தேகத்திற்குப்) போதிய அளவு கொடுத்தல் வேண்டும்.
நடுப்பாதை:- புத்தர் போதித்தது.
அதிகம் உணவு உட்கொள்ளாதே. அதிக வேலை செய்யாதே, அதிக நித்திரை செய்யாதே.
*தனியாக வாழும், இனத்துடன் வாழும்இயல்பு இல்லாதது.
மற்றவர்களுக்குச் செவி சாய்க்காதே. நீ உன் வழியே செல். உன் மனச் சாட்சியைப் பின்பற்று.
எதை நீ எண்ணுகின்றயோ அது நீ ஆகிருய். இறைவனை நினைத்தால் இறைவஞவாய். உணவை நினைத்தால் உணவாவாய். எல்லாம் உன்னண்டை வரும். சும்மா இறைவனை வணங்கு, உனக்குத் தேவையான வற்றிற்குக் கட்டளையிடு, அறியவேண்டும்.
உன்னை எங்கும் காண். நீயே உலகம் முழுவதும்,
உ8 கண்கள் எங்கும் உள்ளன. உன் செவிகள் எங்கும் உள்ளன. உன் வாய்கள் எங்கும் உள்ளன.
ஓம் தத் சத் ஒம், த த் என்பது அது சத் என் பது உள்ளது. ஓம் என்பது அது.
சாத்திரங்கூற முயற்சிக்கா தே-ஒரு உபயோகமும் இல்லை . ஒருவன் எப்போது இறக்கப் போகிறன் என்பதை அறிய முடியும். நீ அறியாய். கடவுள் பேசுவார்.
நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன். நீ தெய்வம் ; தெய்வம் உன்னுடன் இருக்கிறது.
உன் கண்கள் தெய்வம். உன் கால்கள் தெய் வம். உன் கைகள் தெய்வம். உன் பேச்சுத் தெய் வம், உன் மலமுந் தெய்வம்.
நீ கடவுள். ஆணுல் அதை நீ அறியாய். நீ அறிய வேண்டியதில்லை . நீ கடவுளே. கடவுளை உணர். அப்போது எல்லாம் உன் ஆணையின் கீழ் ,
நான் அலைகள், நான் சமுத்திரம், நாம் எல்லோரும் அலைகளே. பெரிய அலை, சிறிய அலை என்றில்லை. அலைகளுஞ் சமுத்திர மும் ஒன்றே, நீ சமுத்திரத்தினுள் மூழ்க வேண்டும்.
ஒரு சந்நியாசி எதிர் நோக்க வேண்டிய இரு மயக்கங்கள் உண்டு. சன மருள் (மக்களின் நன் மதிப்பு) சாத்திரம ருள் (புத்தகங்கள், சமய நூல்கள் போன்றவை).
நீ தெய்வம் , நான் தெய்வம். ஒன்றேயொன்று மட்டுமே - பிரிவில்லை. உன்னிலிருந்து என்னைப் பிரிக்க முடியாது.
சும்மா உன் வழியே செல். அஞ்சுவதற்கு ஒன்று மில்லை .
உனக்கு ஒன்றுந் தேவையில்லை யென்றல் எல்லாம் வரும் . ஒன்றை நிராகரித்தால் அது வந்து சேரும்.
அகம் பிரமாஸ்மி; நீ கடவுள். ஒவ்வொருவரும் நீ, நீ எங்குமுள்ளாய். இதை அறி. இது சாதனை.
எண்ணிறந்த பிறவிகள் வரட்டும். நீ மெதுவாகச் செல். அவசரம், துன்பம், கவலை தேவையில்லை .
கடவுளிடமிருந்து ஒரு வர முங் கேளாதே. நீ கடவுளுக்குக் கட்டளையிடு.
‘இறைவனே! நான் ஒன்றும் அறியேன். தேவரீர் எண்ணமே நிறைவேறும். அருளினை எனக்கு அருளு வீராக’ என்று சொல்லு. அது இல்லாது நீ ஒன்றுஞ் செய்ய இயலாது.
பலவீனணுய் இராதே. நீ எல்லோருக்கும் கட் டளையிடலாம். உள்ளிருந்து உலகம் முழுவதற்குமே கட்டளையிடலாம். உலகம் முழுவதும் உன் ஆணையின் கீழ் வரும். நீ கடவுளுக்கும் எல்லாத் தேவர்களுக்கும் கட்டளையிடலாம்.
தேகம் அழியும். கிறிஸ்து வந்தார். அவர் தேகம் மறைந்தது. அவர் மறையச் சொன்னுர். நீ தேகத்தை மறையும் படி சொல்.
மக்கள் கெட்ட காரியங்களைச் செய்தால் நிந்திக்காதே. சும்மா அவதானி. ஆனல் நீ கெட்டதைச் செய்யாதே. சும்மா பார்.
நான் போதிப்பதில்லை, யாரும் என்னிடம் வந்தால் நான் ஒன்றும் சொல்வதில்லை. நான் சாத்திரம் கூறுவதில்லை. அப்படியானது ஒன்றும் செய்வதில்லை. ஆணுல் ஒருவன் பக்தி மரியாதையுடன் வந்தால் நான் ஏதாவது சொல்லக் கூடும்.
எல்லாச் சமயங்களும் உண்மையைக் கூறுகின்றன. நீ இங்கிருந்து பெறலாம். அங்கிருந்து பெறலாம். அவை யெல்லாம் ஒன்றே.
ஒருவரையும் நம்பாதே, கடவுளை நம்பாதே உன்னையே நீ நம்பு,
நீ அறியவேண்டியதில்லை , கடவுள் உன்னூடாகச் செயற் படட்டும்.
உன்னை உன்னுல் அறி - அதுதான் புத்த மதம்.
உண்மையைக் காண்-அதில் ஒன்று மில்லை.
நான் மூன்று நாட்களில் கைலயங் கிரி ஏறினேன், அங்கே ஒன்று மில்லை , சூரியன் இல்லை, சந் திரன் இல்லை. பின் கீழ் இறங்கியதும் தர்மம், அதர்மம் மற்றெல்லாம் உண்டு.
உனது சமயத்திற்குப் புறம்பே செல்லாதே, அதனுள் எல்லாம் உண்டு.
சத் சித் ஆனந்தம். அது யாவும் ஒன்று, சச்சி தானந்தம், சத் என்பது உள்ளது. சித் என்பது சர்வ வியாபகம். பிரகாசம், சூரியனிலிருப்பது போல் ஒளி; எல்லாம் அறிவது. ஆனந்தம் என்பது பூேரின் பம். அவை மூன்று ஆஞல் அவை ஒன்று, அதே உனது சுபாவம் ,
“ஓம்’ எல்லாவற்றையும் உள்ளடக்குகின்றது. தத் என்பது சித்-அது.
பிரசங்கங்களுக்குப் போகாதே. நீ எல்லாவற்றையும் உன்னுள் அறிவாய் - அது யாவும் உன்னிடம் உள்ளது.
மக்கள் வல்லமை பற்றிக் கதைப்பார்கள். சித்திகள் என்பார்கள். செவி கொடுக்காதே.
நான் எல்லாரினதும் சேவகன். ஆணுல் அதை நான் காட்டிக் கொள்வதில்லை .
இழப்பதும் ஒன்றுமில்லை. ஆதாயமாக்கிக் கொள்வதும் ஒன்றும் இல்லை. நாங்கள் எங்ங்ணம் நட்டத்தைப் பற்றி அல்லது நயத்தைப் பற்றிப் பேசமுடியும்? அது எல்லாமாய் எங்குமாய் இருக்கிறது. ஆதலின் நயம் நட்டம் எவ்விதம் இருக்க முடியும். வருவதும் போவதும் ஏது. கடந்தகாலம் வருங்காலம் ஏது?
ஓம் தத் சத் ஓம். த த் என்பது கடவுள், சத் உள் ளது. சித் என்பது வெளிச்சம். எங்கும் இருப்பதணுல் சர்வவியாபகம். ஓம் எல்லாமாகும் (அன்பன்: ஏன் "ஓம்’ இருமுறை கூறப்பட்டிருக்கிறது) அது எல்லாம் ஆதலின்.
உணவு உட்கொண்டு மலமாக வெளியேற்றுதல் போல் விடயங்களை உள்ளெடுத்து வெளியேவிடலாம். உன்னுள் ஆத்மா பேசட் டும். ஏதாவது செய்யுமுன் நின்று பார். பின்பு நீ செய்யலாம்.
உனக் கொன்றும் வேண்டியதில்லை. விடயங்கள் உன்பாட்டில் செல். உன் வேலையைச் செய், நீ சாட்சி, சும்மா இரு. சும்மா பார்த்துக் கொள். எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் இல்லாத வசனமுண்டு. அதைக் கண்டு பிடி. அப்போது நீ உச்சியில் நிற்பாய். கைலயங்கிரியில் யாவரையும் நண்பர்களாகக் காண். எல்லோ ரும் உனது நண்பர்களே. எல்லோரும் உனது பகை வர்களே.
வேருெருவர் சொல்வதைச் செவிக்கு எடுக்காதே தெய்வங்கள் வந்தால் வணக்கஞ்செலுத்து. ஆனல் அவர்கள் சொல்வதைக் கேளாதே. உன் ஃா யே கேள். கடவுள் உன்னுடன் பேசுவார்.
ஒருவருக்கும் அகப்படாதே. நீ பேச வேண்டிய மக்களை வேறுபடுத்தாதே (வித்தியாசம் காட்டி அல்லது விசேஷ கவனம் செலுத்தி). எல்லாரையும் ஒன்ருகப் பார் - உன்னைப் போல யாவரையும் பார்.
உன்னில் நீ ஐயுருதே. ஓம் என்பது கடவுள். அது கடவுளல்ல. (ஒரு சொல்லால் பன்றி ஒன்றினைக் கொன்ற ஒரு முஸ்ஸிம் பக்கிரியின் கதையைச் சுவாமி கூறி ஞர்) எல்லாம் செப்படி வித்தை. நீ தூயவனுயிருந்தால் இவை வேண்டியதில்லை .
உன்னிலேயே நீ நில், இயற்கையையும் இலெள கீகப் பொருள்களையும் விட்டுவிடு,
எல்லா இடமும் கடவுளைக் கண்டு ஆனந்தத்தைக் காண்.
எல்லாவற்றையும் உள்ளே பூட்டிவை. பல வழிகள் உண்டு. எல்லாச் சமயங்களும் வெவ் வேறு வழிகளைக் காட்டுகின்றன. நீ உன்னுடைய சொந்த வழியில் தான் செல்லவேண்டும். உனக்கு ஒருவரும் ஒன்றும் சொல்லமுடியாது.
நீ உன்னுடைய வேலையைச் செய். நான் எவரின துய் ஆசான் அல்லன். நான் எனக்கு மட்டும் ஆச்ான். ஒவ்வொருவரும் தத்தமக்கே ஆசான்
தன்னிலிருக்கும் ஆசானை உள்ளிலிருந்து காணல் வேண்டும். இதுவே இரகசியம்.
எல்லோரும் எனது ஆசான்களாகும் , நான் எல்லோரிடமிருந்தும் கற்கிறேன். நான் ஒவ்வொருவரிடமிருந்தும் எனக்குத் தேவையானதை எடுத்து மேலும் செல்கிறேன். மற்றவர்களும் அவ்வாறே, நீ இதனை அனுபவத்தில் அறிய வேண்டும். அப்போது உண்மையை அறிவாய்.
நீ மற்றவர்களை நேசிக்க முடியர்து - நீ உன்னேயே நேசிக்கலாம்.
'ஓம்' என்பதில் எல்லாமுண்டு. 'ஓம்' எல்லாமாகும். 'ஓம்' எல்லா இடமும் உள்ளது - ஒளியைப் போன்று. சித் ,
விளேவுகளைப் பற்றிக் கவலை கொள்ளாதே.
உனக்கு வல்லமைகளோ சித்திகளோ தேவைபில்லை . உனக்கு வல்லமை தேவையில்லை . நீ உண்மயைக் காண விரும்புகிருய்.
கண்கள், காதுகள், வாய் இவற்றை மூடிச் சும்மா இரு. எல்லாத் தேவர்களும் தெய்வங்களும் உன்னிடம் வருவார்கள்.
நீ கடவுள், கடவுள் உன் கண்களால் பார்க்கிரூர், உ ன் செவிகளால் கேட்கிருர், உன் வாயால் பேசுகிருர்,
கடவுளையோ தேவர்களையோ உள்ளே விடாதே - ஒருவரையும் விடாதே.
நான் என்ன எண்ணினேன்? அதை நீ அறியலாம். ஆணுல் அப்படி அறிய முயலுதல் நன்றல்ல.
ஒருவன் வந்து உன்னைப் புகழலாம். அல்லது ஒருவன் வந்து உன்னை இகழலாம். அதனுல் பாதிக் கப்படாதே, நீ சாட்சியே.
ஒருவன் செல்லும் மார்க்கத்தில் வில்லங்கங்கள் வர வேண்டும். அவை வரப்பிரசாதமே.
நண்பர்களே வைத்துக் கொள்ளாதே. எல்லோரும் உனது நண்பர்களே. ஆணுல் நண்பர்களாக வத்துக் கொள்ளாதே.
ால்லாவற்றிலும் ஈசனைக் காண் - எல்லா மக்கவிலும் நீ அவ்விதம் செய்தல் வேண்டும்.
"ன்ெ விருப்பமே நடைபெறும்; ஓம் என்பதும் 9.துவே.
உலகம் முழுவதிலும் ஒரு மனிதனே உளன். கட வுள் ஒருவனே. வேறென்றும் இல்லை; அவ்ர் எங்கு முள்ளார்.
ஒரு கடவுள் - ஒன்றிற் பல. எல்லாவற்றையும் உட்கொண்டு விழுங்கிய பின் உமிழ்ந்து விடு.
தேகமே உனது மனைவி; நீ ஆன்மா. நீ திரு மணம் செய்ய வேண்டும். (சுவாமி வாயைத் திறந்து மூடிஞர்) சொற்களே பிள்ளைகள்.
நீ அப்பாற் செல்ல விரும்பினுல் எல்லாவற்றையும் இழப்பாய். ஒரு வேலையுமில்லை. நீ, நான், கட வுள் ஒன்றுமே இல்லை .
ஒன்றிலிருந்து பல தோன்றுகின்றன, ஆணுல் அது அப்படியே உள்ளது. ஒன்றும் நடைபெற வில்லை. (சுவாமி தனது கையைத் தூக்கி அகத்தை யும், புறத்தையும் விரைவாகச் சுழற்றிக் காட்டி )
பூவிலிருந்து தேனை உண்டு பின் மெளனமா யிருக்கும். தேனியைப் போன்றிரு.
(அன்பன் பேரா பத்து யாது?) ஆசை. நீ ஆத்மா . நீ எதிலும் ஆசையுருதே.
(சிவதொண்டன் சஞ்சிகையிலிருந்து ஒர் கட்டுரை சுவாமியின் வேண்டுகோளுக்கிணங்க வாசிக்கப்படுகிறது.)
*எரிச்சல், அகங்காரம் யாவையும் எள்ளு" என வாசித்த இடத்து சுவாமி **இது முதற்படி, நாம் கீழிருந்து மேல் செல்லுகின்றேம்; இது தான் முதற் படி" என் ருர்,
சங்கராச்சாரியாரின் விவேக சூடாமணியின் மொழி பெயர்ப்பு வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பின்வரும் சொற்கள் வந்தன:-
**மனத் தூய்மைக்கே கருமம் அன்றி உண்மையை உணர்வதற்கல்ல. நித்தியாதித்திய வஸ்து விவேகத்திஞலேயே உண்மை உணரப்படுகிறது. கோடி கர்மங்களினுல் அல்ல." அப்போது சுவாமி இடையில் சொல்லுகிருர் - விளங்குகிறதா? அது என்றும் அனுபூதியில் உள்ளது. ஆதலின் அதை யாதும் தாக்காது.
உன்னை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து கொள், மனம், உளம், காயம் ஆகிய மூன்றிலும்,
(அன்பன்: அதிக நித்திரை கூடாது) மிகவும் கூடாது. அதிகம் நடத்தல், அதிகம் வேலை செய்தல் கூடாது. எதிலும் அளவிற்கு அதிகமாதல் கூட rது 8யுறவும், சந்தேகமும் வைத்திருக்காதே. எல்லோருடனும் போராட வேண்டும். உள்ளே நீ போராட வேண்டும். எல்லா நேரமும் போராட் டமே.
எல்லாத் தெய்வங்களையும் தேவர்களையும் நீ ஏவல் கொள்ளலாம். உனக்குத் தேவையான வற்றிற் குக் கட்டளையிடலாம்.
எல்லோரும் உமது பணியாளரே, நீ கட்டளை பிட முடியும். அவர்கள் கீழ்ப்பணிவார்கள்.
* விவேகசூடாமணி - சுலோகம் 11 2-ம் பதிப்பு.
மூன்று குணங்கள் - எல்லாம் உள்ளே . இப்போது ஒன்று. பின் வேறென்று, ஞானியின் சாத்வீகமே தலையானது. அவரிடம் மற்றவைகளும் உண்டு. ஆணுல் அவற்ருல் அவர் தாக்கப்படுவதில்லை.
உடலை ஓம்புக. உடல் பிரதானமானதாகும். உணவு கடவுள், உணவு உன் பின் வர வேண் டும். நீ உணவின் பின் செல்லக்கூடாது. கடவுள் உன்னை விழுங்க வேண்டும். நீ கடவுளை விழுங்க (முடியாது
உன் வேலையைச் செய், வேலையின் ஊடாக கடவுளை உணரலாம். வேலைக்காக வேலையைச்.
இந்து சமயம் எல்லாவற்றையும் கொண்டது, அது எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது. பக்தி, ஞானம் எல்லா நெறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. தத்துவமும் சமயமும் ஒன்றே. சமயாசாரங்களும் சமயச் சடங்குகளும் தத்துவ நுட்பங்களை விளக்குகின்றன.
நீ களிக்கலாம் - வருவதை அனுபவித்து இன்புறலாம் .
‘ஓம்’ என்று சொல்ல முடியுமானுல் வேண்டிய வற்றிற்குக் கட்டளையிடலாம்.
நற்றவமாற்றி மகிழ்; நீ மேலே செல்ல வேண் டும் - உச்சிக்கு. ஆனல் உச்சியும் அடியும் ஒன்றே. ஒவ்வொன்றும் தொழிற்படுகிறது, எல்லாம் ஓய்வே,
நீ உச்சியில் நிற்கிருய். ஆனல் நீ மறந்து விட்டாய்; "நீ அங்கு நிற்பதாக எண்ணிக் கொள், அப்போது நீ அங்கே நிற்பா..
முதலாவதாகக் கேள். பின்பு சிந்தி, பின்பு செயற்படு.
உச்சியில் ஒன்றுமில்லை . அங்கு கடவுளே உளர். மற்றையயாவும் மாயை.
தேகத்திற்கும் மனத்திற்கும் சொல்லலாம்-இந்த வடிவத்தை அல்லது அந்த வடிவத்தை எடுக்க முடியும். அப்போது அவர்கள் உன்னைச் சிரந் தாழ்த்தி வணங்குவார்கள். தேகத்திற்கும் மனத்திற்கும் நானே தலைவன். எல்லாரும் அப்படியே. ஆணுல் அவர்கள் பயிற்சி பண்ணுவதில்லை .
(தெருவில் நிற்பவர்களைச் சுட்டிக்காட்டி) எல்லோரும் நல்லவர்கள்; தங்கள் காரியங்களைக் கொண்டு நடத்த அவர்களுக்குத் தெரியும். வேலை நடைபெறுகிறது.
கயிற்றைக் கை விடு. இங்கும் அங்கும் திரி. எல்லாவற்றையும் பார் . சாட்சியாக இரு. சாக முன் செத்து விடு (அன்பன் கயிறு என்பது என்ன?) பாசமே கயிறு.
சமதிருஷ்டி - பாரபட்ச மின்மை. அதை நீ அறியாயோ? நண்பர்கள் வைத்திராதே, விரோதிகள் வைத்திராதே. அதுதான் சாலச் சிறந்தது. நண்பர்கள் விரோதிகள் அயலவர் எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்து. அதுதான் சமநோக்கு. கடவுள் உனக்குத் தரட்டும். தேவையானதை எடு, தேவையில்லாததை விட்டுவிடு.
எல்லாம் உன்னுள்ளே . நீ அறிய வேண்டியதில்லை. தெய்வம் உன்னுள் பேசட் டும். அன்றேல் ஆண்டவன் இல்லை. உன்னுள்ளும், என்னுள்ளும் , எல்லோருள்ளும் அவர் உளர்.
"த பஸ் என்பது வெப்பம். வெப்பத்தினுல் தான் நீ மேலே செல்ல வேண்டும். மேலும் மேலும் ஏறி உச்சிக்குத் தபம் செய். எரி என்பதே அதன் வினையடியின் கருத்தாகும். நீ எரிக்க வேண்டும். மற்றவர் சேவையில் உன் உடல் ஒழிவதாகுக உருவம் - உருவமில்லை . உருவமில்லாதது விபரிக்க முடியாதது; இரண்டும் ஒன்றே.
தனது உயிர், பொருள், வாழ்வு மூன்றையும் இறைவனுக்கு ஒப்படைத்தவனே சந்நியாசி.
உன்னை எங்கும் காண். அதுவே பரம இரகசியம். சும்மா உலா வித்திரிந்து உன் வேலையைச் செய். உலகின் அழகை அனுபவி,
நான் போதிட்டதில்லை . சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நான் உன்னிடமிருந்து கற்கிறேன். அவனி டமிருந்து கற்கிறேன். (அங்குள்ளவர்களைக் காட்டி) நான் எல்லோரிடமிருந்தும் கற்கிறேன். ஏனெனில் முழு உலகமும் என ஆ குருவாகும் ,
இங்கும் அங்கும் செல்லாதே. உள்ளே போய் அங்கேயே அமர்ந்திரு.
நாங்கள் சமுத்திரத்தில் குமிழிகள், குமிழி சமுத்திரத்திலுள்ளது, சமுத்திரம் குமிழியிலுள்ளது. எல்லாம் விளையாட்டு, கடவுள் எல்லா இடமும் விளையாடுகின்றர். எல்லாம் நிர்க்குமிழிகளே-சிறு குமிழிகள் கீழே போவதும் மேலே நீர் மட்டத் திற்கு வருதலும்,
மேலே சூரியன். கீழே நிலம், நான் நடுவாய் உள்ளேன். சூரியன் வெப்பத்தையும் மழையையும் தருகின்றது. பூமி செடிகளைத் தருகின்றது. என்னையன்றி எவரும் ஒன்றுஞ் செய்யமுடியாது.
பிதா, மாதா, மைந்தன் - பரிசுத்த ஆவி, தந்தை, மகன்-பிரம்மா, விஷ்ணு, ருத்திரன்-ஒன்றில் மூன்று. தடம் முதல் வேலை, சிந்தித்து மேலே மேலே ஏறு, சரியான எண்ணம். சரியான விளக்கம், சரியான அவதானம். நான் உச்சியில் உள்ளேண் என்று நினை. அங்கிருந்து முழுவதையும் பார்.
சிந்தனை செய், சிந்தனை செய்யாதே. முதலில் சிந்தனை செய். பின்பு சிந்தனை செய்தல் கிடையாது, ஆன்மா மாத்திரமே உள்ளது.
நாம் அறியோம் என அறிவதே முடிந்த முடிபு. எல்லாவற்றையும் கடந்ததன் பின்பு நீ அந்நிலைக்கு வருவாய் .
எல்லாம் கனவு. நான் கனவு காண்கிறேன். இங்கு எல்லோரும் கனவு காண்கிறர்கள். எல்லாம் கானல் நீர்.
தரய் உணவு தருகிருள். தந்தை மழை தருகிருன். நான் இடையில் நிலத்தைப் பண்படுத்துகிறேன். (தனது இருதயத்தைக் காட்டி) இது தான் நிலம், தேகம் தாய் தகப்பன் ஆத்மா ? எல்லேர்ரும் உன்னுள் இருக்கிருர்கள்; நீ சிவ சக்தி. ஒருவுன் ஒரு விசையூர்தியைச் செய்யலாம். ஆணுல் எரிபொருள் இல்லாவிட்டால் அது ஓடாது. ஒரு சுரை இல்லா விட்டால் அது ஓடாது. சுய திருப்திக்கு இடங்கொடாதே.
சிந்தஐன செய், சிந்தனை செய், சிந்தனை செய் இவ்வண்ணம் நான் அறியேன்”என்பதற்கு வருவாய். சிந்தனை செய், சிந்தனை செய், சிந்தனை செய்நீ ஒரு போதும் அதை அடையமாட்டாய். கயிற்றைக் கை விடு.
இறைவன் மட்டுமே சும்மா (இருக்கிருர்). ஆணுல் முழு நேரமும் வேலை நடக்கிறது"
தபத்தினுல் நீ சுதந்தரன் ஆகலாம் ஆல்ை உண்மையை அறியமுடியாது. அது எல்லாவற் றிற்கும் அப்பாற்பட்ட அது
இலாபமும் இல்லை . நட்டமும் இல்லை. ஏனெனில் அது சும்மா உள்ள ஆ. இலாபமும் நட்டமும் மாற்றத்தை அடிப்படையாக உள்ளன.
முழுவதும் மாயை. எல்லாமே மாயை, (அன்பன்: மெளனம் மாத்திரமே மாயையல்லாதது) மெளனமும்
மாயை. ஆனந்தமும் மாயை, உண்மையான ஆனந்தம் அன்று. இந்த ஆனந்தம் ஒரு கோசமே.
கிடைப்பதைச் சாப்பிடு. கிடைக்காதவிடத்துப் பிச்சை யெடு.
அர்த்தநாரீஸ்வரர்-சக்தி என்பது தேகம்-மிக வும் முக்கியமானது. தேகமின்றி உண்மையை டனர முடியாது
காது கேட்பதை, கண் பார்ப்பதை, எடுக்காதே.
நானே முழுவதும், நானே பகுதியும் பகுதி ஆதீமாவாகும் (ஜீவாத்மா). முழுவதும் சிவம். இரண்டிற்கிடையேயும் திருமணம்.
வீரன் தன் விரோதிகளைத் தன் பக்கமாக்கி வைக்கிருன், எல்லோரையும் அவன் தன் வழி நிற்க வைக்கிருன் ,
ஒருமைப்பாடே பலம். நாம் எல்லோரும் ஒரு மாதிரியே. கிறிஸ்துவும் ஒன்றே. மாணிக்கவாசகரும் ஒன்றே.
சும்மாயிரு. எதையுஞ் சிந்தியாதே. எண்ணங்கள் வந்து போகட்டும்.
நீ பல தடவை முயன்று கஷ்டப்பட்டு விழுகிருய், பின்பு "நான் ஒன்றும் பெறவில்லையே; நீ எனக்கு ஏதாவது தருவாயாக’ என்று இறைவனிடம் சொல்கிருய். அப்போது அவர் உன்னிடம் வருவார்.
பெற முயன்ருல் அது வராது. நேரடியாகப் போர் செய்தால் அது வராது. ஒப்படைத்தலும் இயல்பான தொழிற்பாடும் வேண்டும்.
நான் எல்லாவற்றிலும் உள்ளேன். எல்லா வடி வங்களும் எனதே.
சும்மா இரு என்று ஒரு கட்டளை இல்லை, ஆத்மா சும்மா உள்ளது.
பரலோக அரசாட்சி உன்னுள் உள்ளது. கட வுள் உன்னை ஈர்க்கட்டும். நீ ஒன்றும் செய்ய முடியாது. கடவுள் எல்லோரையும் அவரவர் கர்மத்திற்கேற்ப ஈர்க்கிறர்.
அழகான உலகம். மிகவும் தூய்மையான உலகம். அழகாகவும் பரிசுத்தமாகவும் உள்ளது. முழு உலகமும் புனிதமும் இரகசியமும் ஆனது. முழு உலகமும் உன்னுள் உள்ளது. இயற்கை எழிலைக் கண்டு களி. எல்லோரையும் நேசி.
உண்மையான சநீநியாசி உள்ளே உள்ளான். வெளி வேடத்திலன்று.
எல்லோரும் மலர்கள். சில மலர்கள் நறுமணம் உடையன. சில மணமற்றன. இவை காட்சிக்கு மாத்திரமே,
தியானம்-தியானம் என்பது தெரியுந்தானே - சும்மா இரு. சும்மா இருத்தல் தியானம். தெரியாமலிரு. கடவுள் தெரியப்படாதவர்.
எல்லாம் நன்றக நடைபெறுகின்றன. நான் சொல்லுகிறேன். எல்லாம் நன்றக நடைபெறு கின்றன.
உண்மையைச் சொல். தவத்தை மறக்காதே, உன் வேலையைச் செய். சும்மா இரு.
உண்மை எங்கும் உள்ளது. முழுதும் உண்மை . நீ இங்கிருந்தும் அதைக் காணலாம். அங்கிருந்தும் காணலாம். எங்கிருந்தும் காணலாம்.
எல்லோரும் பைத்தியகாரர். நீபைத்தியகாரன். நான் பைத்தியகாரன், எல்லோரும் விசரரே.
உண்மையை உணர். உண்மை உள்ளுக்கே உண்டு. உள்ளே ஆழமாகச் செல், உள்ளே சென்று
உண்மையைக் காண். உள்ளே ஆழமாகச் சென்று உள்ளிருந்து வெளிக்கொண்டுவா. அதைச் செய்,
ஆசையிலிருந்தே அனைத்தும் எழுகின்றன.
தவிர்க்கப்பட்டதைச் செய்வதில் மகிழ்வது மிகப் பெரிய மதியீனம்.
உன்னுல் கடவுளைக் கும்பிட முடியும்.
நீ தான் முழு உலகமும், நீ தான் முழு உலகமும் பகுதியும்.
நீ எல்லாமுடையாய், நீயே முழு உலகமும். ஏன் (அப்படி)? பரலோக அரசாட்சி உன்னுள் உள்ளபடியால். பின்பு ஏன் ஓடித்திரிந்து பிச்சை எடுக்க வேண்டும்?
நீ சமைக்கும் போது நான் உன்னுடன் சேர்ந்து சமைக்கிறேன். நீ நடக்கும்போது நான் உன்னுடன் சேர்ந்து நடக்கிறேன். நான் உன்னுடன் உள்ளேன். ஏனெனில் ஒருவனே உளன்,
*நீங்கள் விளங்குவதற்காகவே நான் கற்பனைக் கதைகளிற் சொல்கிறேன்” என்று கிறிஸ்து சொன்ஞர்.
எல்லாம் இரகசியம். புனிதமானது. இரகசியமானது. இரகசியமானதைக் காண முடியாது. அது காணப்பட்டால் அது இரகசியமில்லை . நான் உன்னை எல்லாப் பக்கங்களிலும் வணங்குகிறேன். உனக்கு அது விளங்குகிறதா? நீ எங்கும் இருப்பதால் அப்படிச் செய்கிறேன்.
அவர்களுக்கு விளங்காவிட்டாலும் எல்லோரும் தெய்வங்களே. எல்லாம் கடவுளே, கடவுள் எவ்விதம் கடவுளை விளங்கிக் கொள்ள முடியும். ஆதியுமில்லை, அந்தமுமில்ல்ை . நீ அதுவே.
உனக்குக் கண்கள் உண்டு, உனக்குக் காதுகள் உண்டு. உனக்கு மூக்கு உண்டு. உனக்குக் கைகள் உண்டு. இவற்றைக் கொண்டு நீ என்ன செய்கிருய்? நீ காணுவிட்டால் கண்களில் என்ன பயன்? நீ கேட்காவிட்டால் கா துகளால் என்ன பயன்?.
கடவுள் எல்லாரிடமும் உள்ளார். இதை மக்களுக்குச் சொல்லும் போது அவர்கள் "ஆம்’ ‘ஆம் என்று கூறுவார்கள். ஆணுல் அவர்களுக்கு விளங்குவதில்லை.
நீ நல்ல மனிதனு அல்லது கெட்ட மனிதனு? ஆர் கூட்ாதவன்? இந்த உலகத்தில் கெட்ட மனிதன் ஒருவனுமில்லை. நல்ல மனிதன் இல்லை. கெட்ட மனிதன் இல்லை . எல்லோரும் உள்ளார்கள்.
கடவுள் எங்குமுள்ளார். நானே நான்.
சிலர் எனக்கொரு வேடத்தைப் போட்டு என்னேச் ‘சுவாமி’ என்கிறர்கள். ஆணுல் நான் உங்க ளப் போலவே, எல்லோரும் ஒரு மாதிரியே. எல்லோரும் கடவுள். கடவுள் எல்லேராருள்ளும் உள்ளார்.
(தான் படும் துன்பத்தைச் சொல்ல வந்தவர் ஒருவருக்கு) எல்லோரும் துன்பப்படுகிறர்கள் . வருத்தமுறுகிருர்கள், நன்மை பெறுவதற்கு மக்கள் வருந்துகிறர்கள். அவர்கள் நன்மை பெறும் பொருட்டுச் சோதிக்கப்படுகிருர்கள் என்பதே அவர்கள் படும் துன்பத்தின் கருத்தாகும்.
ஒருவர் வந்தார். "நீ எங்கே வசிக்கிருய்? என்று சுவாமி கேட்டார். அவர் “முல்லைத்தீவு’ என்று சொன்னுர். நானும் முல்லைத்தீவில் தான் சிெக்கிறேன் என்ருர் சுவாமி,
எனக்கு இங்கே கீழே நிற்க விருப்பமில்லை உங்களுக்கப்பால் நான் மேல் வீடு செல்லவேண்டும்.
(சுவாமி ஒரு சிறு பையனிடம் அவன் சுகம் விசாரித்தார். ஆணுல் அவன் பேசாதிருந்தான்) பார்த்தாயா? அவன் செய்வது சரி. அவன் ஒன் றும் சொல்ல வில்லை.
ஒருவரிடமிருந்தும் எனக்குச் சுவர்க்கம் தேவையில்லை. உனக்கும் ஒருவரிடமிருந்தும் சுவர்க்கம் தேவையில்லை.
(சுவாமி நித்திரை செய்தபின், எழுந்ததும் சொன்னுர்) நான் நித்திரை செய்கிறேன். நான் இந்தக் கண்களால் உன்னைக் காணவில்லை .
ஆசீர்வாதங்கள் எங்கும் உள்ளன. எல்லாம் ஆய்விட்டது.
நீ கடவுளைக் காணமுடியாது. கனவிலும் நீ அவரைக் காணமுடியாது. நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும் நீ அவரைக் காணமுடியாது. நூறு ஆண்டு கழிந்த பின்பு எனக்கு அவரைக் கண்டு விட்டாயா என்று சொல்லு.
மரணம் நிச்சயம். அதிலிருந்து எவரும் தப்ப முடியாது. யாவும் நிலையற்றது.
கிறிஸ்து என்ன செய்ய முடிந்தது? முகம்மது என்ன செய்ய முடிந்தது? நான் என்ன செய்ய முடியும்? நீ என்ன செய்ய முடியும்? எல்லாம் மாற்றமடைகிறது.
எல்லோரும் மோட்சத்தில் இருக்கிறர்கள். பூமியில்லை. நான் மோட்சத்தில் இருக்கிறேன். நீ மோட்சத்தில் இருக்கிருய். எல்லோரும் மோட்சத்தில் இருக்கிருர்கள்.
சுகவீனம் தேகத்துடன் விளையாடுகிறது. அது எங்களுடன் விளையாட முடியாது.
நல்ல பழக்கங்களை வளர். கெட்ட பழக்கங்களை எறி. ஆனல் கெட்ட பழக்கங்களும் என் நண்பர்களே. கெட்ட பழக்கங்கள் உள்ளத்தே வருகின்றன . ஆணுல், அவை உன்னை நடத்த விடாதே நீயே தலைவன்.
நான் அது, நீ அது, எல்லோரும் அதுவே. இதை நீ அறியும்போது அதுவே எல்லாம்.
(கமக்காரன் ஒருவனுக்கு) நீ ஒரு கமக்காரன்! மற்றவர்களின் உள்ளத்தில் நுழைவதே எனது சுமச் செய்க்ை.
நான் உனக்கு ஒன்றும் தரத்தேவையில்லை : நீ ஒன்றும் எனக்குத் தரத் தேவையில்லை. அது அங்கே ஏற்கனவே உள்ளது.
குறிப்பு:
இத் தொகுதி முழுவதும் செங்கலடிச் சிவதொண்டன் நிலையத்தில் இருந்து தொண்டாற்றிய பூரீமத் கந்தசாமி அவர் களுக்குச் சுவாமிகளால் ஆங்கில மொழி ) யில் கூறியவற்றின் தமிழாக்கமாகும்.
)
உன் கண்கள் இமைப்பதும் ஈசன் செயல் என்றுணரும்வரை நீ உண்மைப் பொருளை உணர மாட்டாய்.
விஞ்ஞான கூடத்தில் விஞ்ஞானம் கற்பது போல் முத்தர் கூட்டத்தில் முத்திக்கு முயற்சி செய்ய வேண்டும். ஆகவே வித்திட்டு, நீர்ப்பாய்ச்சி உன்னை நீ பண்படுத்துவாயாக.
இவ்வுடலில் வாழும் தத் துவங்களும் உன் ைேடு விளையாடுகின்றன. நீ சும்மா இரு.
வாழ்வின் குறிக்கோளை உணராத மாந்தர் வெளியாடம்பரங்களில் காலத்தை வீணுக்குகின்ருர்கள் குறிக்கோளை அறிந்தவர் இன்பம் எய்துவர்; கடவுளின் செயலுடன் முரணுக இருக்காதே. அப்படியானல் உன் விடுதலைப்பாதை நீண்டதாகும். நீ அணுவன்றே!
உலகம் முழுவதும் ஒர் ஆன நீத நடனமே, அவன் உதைக்க யாவும் ஆடுகின்றன,
இருக்கிறமாதிரி இருந்தால் எல்லாஞ் சரியாக நடக்கும். கடவுளை வேலைக்காரணுக்கலாம்.
வாழ்க்கைக்குப் பல வீடுகள் அமைந்தவாறே பல சமயங்களும் மக்கள் வாழ்வுற அவசியமாகும்.
ஐயம் வேண்டாம்; அன்பு செய்வதும் ஒரு வேலை பகைத்தலும் ஒரு வேலை . சும்மா இரு.
ஒரு தேங்காயிலிருந்து எத்தனை ஆயிரந் தேங்காய்கள் வருகின்றன? ஆஞல் அத்தென்னைக்குள் ஒன்றேனுமில்லை . இவற்றைச் செய்விப்பவர் யார்? இவ்வேலையில் கொஞ்சத்தைத் தானும் யாமறி?
எம்மால் ஒரு வாழைப்பழத்தைத்தானும் உருவாக்க முடியுமா? மரத்தை வளர்க்கத் தேங்காய் தன்னை அர்ப்பணஞ் செய்கிறது.
நடராசப் பெருமானிடம் காமக் குரோத லோப மோக மதமாச் சரியமாகியவைகள் இருப்பினும் அவை அவருக்கு அடிமைகளே.
*ஆராரோ என்ற தாலாட்டில் தத்துவம் உளது. மயானத்தில் சென்று தியானஞ் செய்து சிலர் பயத்தை நீக்குகின்றனர். ஒளியை உள்ளே காண நெறிகள் பலவுள.
தண்ணீர் நெருப்பை அவிக்கும். நெருப்புத் தண்ணீரை வற்றச் செய்யும். அதிக அளவில் உள்ள ஒன்று குறைந்த அளவில் உள்ள மற்றதை மாய்க்கும்.
அங்குமிங்கு மாயலையாதே. மனம் வுடன் நீ அது ஆகிருய் மணிப்பளிங்குபோல் பிரகாசி. ஆனல் அதில் பற்று வையாதே. கணத்திற் செயற்படு; உன்னுள் சுவாமி இருக்கிறர். ஆகவே ஏன் அவரைத்தேடி ஒடுகிருய்?
உன்னுடன் ஒருவர் திரிகிறர். நீயும் அவரை விடமாட்டாய். அவரும் உன்னை விடமாட்டார்.
குப்பைகள் முழுவதும் கொளுத்தப்படல் வேண்டும். உன்னை எரிக்கமுடியாது. அவ்வண்ணமிருக்க நீ ஏன் அச்சப்படுகிருய்?
நீ ஓர் துறவியாக இரு ஆணுல் குடும்பத்தை விட்டு வெளியேருதே. குடும்பத்துக்கு உதவி செய். நீ சுவாமிக்குக் காவலா? அல்லது சுவாமி உனக்குக் காவலா? கடவுள் உன்னுள் இருக்கிறர் என்று எண்ணும் வரைக்கும் தான் அஞ்ஞானம் உளது.
நீ உருவத்தைப் பார்க்கும்போது உண்மையில் யார் பார்க்கிறர்? உன்னுள் இருக்கும் அதுதான் பார்க்கிறது. உருவத்துக்குக் கைகளையும் கால்களையும் வைத்துச் சோடித்த பின், "சுவாமி நல்ல அழகாக இருக்கிருர், நல்ல கலையாக இருக்கிருர்? என்கின்ருய். இதையெல்லாம் உன்னுள் உள்ள கட வுளே செய்கிருர்,
எங்கே பார்த்தாலும் துக்கம், அதுவும் ஒரு சாப்பாடு. அது இல்லாவிட்டால் உலகம் இயங்காது. ஆன்ம விசாரணையே முதற்படி, ஆசை இருப்பதாலேயே இந்தப் பாடெல்லாம். சுகம் அணுபவிக்க வேண்டும் என்ற எண்ணமே யாவுக்கும் மூலம்.
வேதாந்தம் - நான் சிவன்; சித்தாந்தம் - சிவன் + அடியார்.
மற்றவர்களுக்கு உதவ வேண்டின் இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய், உன்னுல் வேறென்ன செய்ய முடியும்? யாவும் அவன் செயல். இதுவே உத்தமமான உண்மையாகும் ,
கோவிற்றரிசனம் நன்று; ஆதாரத்திலிருந்து தான் நிராதாரத்துக்குச் செல்ல வேண்டும் , உருவ வழிபாட்டிலிருந்து அருவ வழிபாடு. முடிந்த முடிவில் ஒன்றே இரண்டோ என்னும் சந்தேகம் ஒழியும். கடவுள் எங்களோடு கூடிப் பாடு படுகிருர்,
அநுபூதி பெற அஞ்சாமை அத்தியாவசிய
(குடும்பசமேதராகச் சுவாமிகளிடம் வந்தவொரு அன்பருக்கு)
இன்றைக்கு நாளைக்கு என்று செல்வந் தேடாமல் இருக்க வேண்டும். கள்ளனையும் கடவுள் தான் அனுப்புகிருர், ஆகையால் சந்தோஷமாய்த் தகுந்த தீக் கை செய்ய வேண்டும். சும்மா இருக்கப் படாது. நீ இருடி ; நீ இருடி பத்தினி, சமித்து எடுத்துத் தர வந்தவர்கள் பிள்ளைகள். அதுதான் உண்மை. முழுவதுந் தெய்வமே,
ஒரு நூதனமுமில்லை . அது சொல்லுகிற வண்ணம் செய்வதுதானே. பற்றில்லாமற் செய்ய வேண்டும். பாவம், ஆசை இருக்கும் இடத்துக்குப் போகப்ப்டாது. புலன்களை அடக்கி இறைவனை எங்கும் காணுங்கள். உங்கள் மனச் சாட்சியைத்
திருப்திப்படுத்த வேலை செய்யுங்கள்.
ஆசையே அச்சத்துக்குக் காரணம் ஆகும்.
கண்ணில் ஒரு மண் விழுந்தால் கண்ணீர் வரும். இதனைப் போல பொருமை, கோபம், கவலை ஆட்களை மெலியப்பண்ணும். எண்ணெய்யுந் தண்ணிருஞ் சேராது. அது போல் இந்த உலகில் நல்ல வர்களும் மற்றவர்களோடு இருப்பார்கள்.
உலகை உய்விக்க வந்த மகாத்மாக்களுக்கு ஒதா துணரும் ஆற்றல் உண்டு. அது போல் கேட் டதையோ, படித்ததையோ அப்படியே மனதில் பதிக்கும் ஆற்றலும் உண்டு ,
நாலு பேர் சேர்ந்திருக்கிற இடத்தில் நின்று நீதியை எடுத்துச் சொல்.
அவனவனுக்கு உரித்தானதை அவனவனுக்கு வழங்குவதுதான் நீதி.
சந்தானமீ பெருக வேண்டுமென்று கவலை வேண்டாம்.
மனம், வாக்கு, காயங்களினுல் ஒழுக்கம் தவரு திருத்தலே பிரமச் சரியம்.
பெண்சாதி, பிள்ளைகள், சுற்றத்தார் ஆகியோருக்காகத் துக்கப்படுவதிலும் உன்னை நீ அறிய வில்லை என்று உனக்காகத் துக்கப்படு.
ஒருவனிடத்தில் ஒழுக்கம் இருந்தால் திருவருள் நிற்கும். அறிவு இருந்தால் திருவருள் நிற்கும். சேவையுணர்ச்சி இருந்தால் திருவருள் நிற்கும்.
மலடியும் நல்ல தலத்திலே ஒருவருடம் நித்திய தவமிருந்து நியமமாக வழிபடின் புத்திரபாக்கியம் பெறுவாள்.
ஞான வாழ்விலோ, தெய்வீக வாழ்விலோ, அன்றி வேறெவ்வகை வாழ்விலாயினும் அவரவர்க் குத்தக்க மரியாதை செய்தல் முறையாகும்.
வெளிப்பார்வைக்கு உலகத்தவர் போல இருப் பினும் அகத்தில் அசைவற்றிருப்பாயாக.
பக்தியினுல் ஈஸ்வரனை நேராகத் தரிசிக்கலாம்.
பிறருக்கு நன்மை செய்ய விரும்புகிறவன், தன் நன்மையை விரும்பியே செய்கிருன், அடிப்படை நோக்கம் தன் நன்மையே.
சன்மார்க்கம் ஒன்றே யானறிந்த நன்மார்க்கம். சத்தியமாய்ச் சொல்கிறேன். சர்வமும் இதுவே , இதுவே உன்னையறிய இலகுவான மார்க்கம்,
தெய்வீக வாழ்க்கை
இந்த உலகம் மிக நல்லது. இதில் எத்தனை தரமும் பிறக்கலாம். சுத்தமாயிருந்தால் ஒன்றுக்கும் பயப்படவேண்டியதில்லை. முறையாகச் சீவியம் செய்யலாம். கலியாணம் முடித்துத் தெய்வங்களாக வாழ்ந்து ஒரு பிள்ளை இரண்டு பிள்ளைகளைப் பெற்றுச் சுகமாகச் சீவியம் நடத்தலாம். அல்லது சிலர் கலியாணமின்றியும் வாழலாம்.
ஒவ்வொருவரும் அன்றன்று செய்யவேண்டியவைகளைக் கிரமமாகச் செய்ய வேண்டும். நாளைக்கு என்ன நடப்பது என்பது ஒருவருக்கும் தெரியாது. அதை அறியவேண்டுமென்று கவலைப்பட வேண்டிய தில்லை. சுத்தமாய்க் குளித்து, சுத்த ஆடை உடுத்து, ஒழுங்காகச் சாப்பிட்டு அந்தி சந்தி கடவுளை வழிபட்டுச் சீவியம் நடத்தினுல் கடவுள் காப்பாற்றிவருவார். என்னென்ன செய்ய வேண்டு மென்பதை அவர் எந்நேரமும் சொல்லித்தந்து கொண்டிருப்பார். அவர் எங்களுடனே எப்போதும் இருக்கிறர். அவருக்குத் தெரியாமல் யார்தான் என்ன செய்ய முடியும் ?
ஓம் தத் சத் ஒம்